என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
6 மாதமாக சம்பளம் வழங்காததால் குடும்ப வறுமை- போக்குவரத்து ஊழியர் உடல் உறுப்பை விற்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
புதுச்சேரியில் 6 மாதமாக சம்பளம் வழங்காததால் போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் உடல் உறுப்பை விற்பனை செய்ய அரசிடம் அனுமதி கோரியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த ஓட்டுநராக பணிபுரிந்து வரும் தமிழ்ச்செல்வம் என்பவர் தனது உடல் உறுப்பை விற்பதற்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கடந்த 6 மாத காலமாக ஊதியம் வழங்காததால், குடும்ப வறுமையில் பல சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த தொழிற் சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வத்தை சந்தித்து ஆறுதல் கூறினர். நிலுவை சம்பளம் குறித்து முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து தாங்கள் பேச இருப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Next Story