என் மலர்
புதுச்சேரி
திருபுவனை அருகே வரதட்சணை கொடுமை செய்யப்பட்ட பெண் தூக்கில் தொங்கினார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
திருபுவனை:
திருபுவனை அருகே பி.எஸ்.பாளையம் காலனியை சேர்ந்தவர் மதிராஜா (வயது 30). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆவுடையான்பட்டு புதுக்காலனியை சேர்ந்த ஆனந்தன் மகள் அமலாவுக்கும் (24) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
மதிராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பதும், அதனை மறைத்து 2-வதாக தன்னை திருமணம் செய்து கொண்டதும் அமலாவுக்கு அண்மையில் தெரியவந்தது. இதுபற்றி கேட்டபோது, மதிராஜா மதுகுடித்துவிட்டு வந்து அமலாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வரதட்சணை கேட்டு மதிராஜாவின் தாயார் சித்ரவதை செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அமலா தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அமலாவை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அமலாவின் சாவு பற்றி அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மதகடிப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
அப்போது அமலா கைகளில் அரைந்த இட்லி மாவு இருப்பதை பார்த்தனர். இதுபற்றி ஆனந்தன், பேரன் குருபிரியனிடம் கேட்டபோது தந்தை மதிராஜா தாய் அமலாவை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தான்.
இதையடுத்து தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக திருபுவனை போலீசில் ஆனந்தன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதிராஜாவுக்கும், அமலாவுக்கும் திருமணம் நடைபெற்று 4 ஆண்டுகளே ஆவதால், அமலாவின் சாவு குறித்து தாசில்தார் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று 9 மையங்களில் சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.
புதுச்சேரி:
கொரோனா உயிர்க்கொல்லி நோய் சீனாவின் மத்திய நகரமான ஊகான் நகரில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவியது. இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் உருமாறி இங்கிலாந்து நாட்டில் பரவி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 38 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 37 ஆயிரத்து 165 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 633 உயிரிழந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் மட்டும் 30 ஆயிரத்து 488 பேரும், காரைக்காலில் 3 ஆயிரத்து 790 பேரும், ஏனாமில் 2 ஆயிரத்து 102 பேரும், மாகியில் ஆயிரத்து 784 பேரும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 68 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 32 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில் மத்திய அரசின் உத்தரவின்படி நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகிறது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகிறது.
இதற்காக புதுச்சேரி சட்டசபை அருகே உள்ள இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரி, தட்டாஞ்சாவடி ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரி, கோரிமேடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஆகிய 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காரைக்கால் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு நலவழி மையம் ஆகிய 3 இடங்களிலும், ஏனாம் அரசு ஆஸ்பத்திரி, மாகி அரசு ஆஸ்பத்திரி என மாநிலம் முழுவதும் மொத்தம் 9 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டினை புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
காலாப்பட்டு மத்திய சிறைக்குள் செல்போன் வீசிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலாப்பட்டு:
பெரிய மாத்தூர் சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள் சிலர், வெளியில் உள்ள தங்களின் கூட்டாளிகளிடம் செல்போனில் பேசி தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் சிறை அதிகாரிகள் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சிறை வார்டன்கள் நடத்திய சோதனையில் கைதிகள் அறையில் இருந்து செல்போன் சார்ஜர், பேட்டரி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் போலீசில் அளித்த புகாரின் பேரில் கைதிகள் தமிழ், கிருஷ்ணா, நந்தகுமார், சசிகுமார் ஆகிய நான்கு பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் புதுவையை சேர்ந்த மதுபாலன், பரத், விக்கி ஆகிய 3 பேரும் சுனாமி குடியிருப்பில் இருந்து செல்போன் மற்றும் சார்ஜரை சேலையில் சுற்றி சிறைக்குள் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு ெ்சய்து, கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுவை கடற்கரை சாலையில் போலீஸ் தடையை மீற முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் பிரமாண்டமாக நடைபெறும்.
புத்தாண்டை வரவேற்க நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள். வழக்கமாக புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் லட்சத்துக்கும் மேலாக உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் கூடுவார்கள்.
கடற்கரை சாலையில் இரவு 1 மணி வரை கொண்டாட்டத்தை முடித்து திரும்பி செல்வது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற அனுமதி அளிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியானது.
அதோடு மற்ற பிரச்சினைகளை போல புத்தாண்டு கொண்டாட்ட விவகாரத்திலும் கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையே மோதல் ஏற்பட்டது. ஓட்டல்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இதனால், இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்தது. இருப்பினும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அதிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மேலும், பல கெடுபிடிகளுடன் கடற்கரை சாலையில் மக்கள் கூட அனுமதி அளிக்கப்பட்டது. சுமார் 1½ கி.மீ. தூரமுள்ள கடற்கரை சாலை 10 மண்டலமாக பிரிக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஒரு மண்டலத்துக்குள் வந்தவர்கள் மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டிருந்தது. இதனால் குறிப்பிட்ட இடத்தில் தங்க விருப்பமின்றி மக்கள் வெளியேறினார்கள்.
இரவு 8 மணி நிலவரப்படி கடற்கரை சாலையில் 2 ஆயிரத்துக்கும் குறைவான மக்களே இருந்தனர். அடுத்த 2 மணி நேரத்தில் மக்கள் வரத்து அதிகரித்தது.
இருப்பினும் போலீசார் கடற்கரைக்கு வந்தவர்களை அதிகபட்சம் ஒரு மண்டலத்துக்குள் 1000-க்கும் குறைவானவர்களையே அனுமதித்தனர். மற்றவர்களை வேறு வழியாக அடுத்த மண்டலத்துக்கு செல்ல அறிவுறுத்தினார்கள்.
அதை ஏற்காமல் போலீஸ் தடையை மீற முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் ஆண்களும் பெண்களும் பயந்து ஓடினார்கள். சரியாக புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது, கூடியிருந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சத்தமிட்டு புத்தாண்டை வரவேற்றனர்.
இதனையடுத்து, அவர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், யாரும் நகரவில்லை. இதனால் போலீசார் லத்தியை தரையில் அடித்தும் மக்களை அடிப்பது போல் வீசியும் விரட்டினர்.
10 நிமிடத்தில் கடற்கரை சாலையில் இருந்த மக்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.இதனால் 12.10 மணியளவில் கடற்கரை சாலை வெறிச்சோடியது. சரியாக 12.15 மணிக்கு துப்புரவு தொழிலாளர்கள் கடற்கரை சாலையை சுத்தம் செய்ய தொடங்கினர்.
கொரோனா தொற்றை தடுக்க கட்டுப்பாடுகளை போலீசார் கடுமையாக விதித்தது புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை களை இழக்க செய்தது.

வருகிற 8-ந் தேதி முதல் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் போராட்டம் நடத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடந்த 4½ ஆண்டு காலமாக மோதல் நீடித்து வருகிறது.
மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சர் நாராயணசாமி 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கருப்பு சட்டை அணிந்து கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினார்.
6 நாட்கள் நீடித்த போராட்டத்திற்கு பிறகு கவர்னருடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும், திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிகள், சட்டமன்ற அறிவிப்புகள் எதுவும் செயல் வடிவம் பெறவில்லை.
இதற்கு, கவர்னரின் முட்டுக்கட்டையே காரணம் என்பதை வெளிப்படுத்தவும், கவர்னரை கண்டித்தும் மீண்டும் போராட்டம் நடத்த முதல்-அமைச்சர் நாராயணசாமி முடிவெடுத்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தி.மு.க. தவிர கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஆதரவு அமைப்பினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து மீண்டும் போராட்டம் நடத்த காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவும் கோரப்பட்டது.
இதனிடையே, தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500 அறிவிக்கப்பட்டுள்ளதை போல புதுவையிலும் வழங்க கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு கவர்னரின் ஒப்புதல் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதனைத்தொடர்ந்து நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பொங்கல் பரிசு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கவர்னர் மாளிகை முன்பு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து அறிவிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து சந்திக்க புதுவை தி.மு.க.வினர் விரும்பவில்லை.
இதனை தங்கள் கட்சி தலைமையிடமும் புதுவை தி.மு.க.வினர் தெரிவித்து தனித்து போட்டி, அல்லது மாற்று கூட்டணி என்ற ஆலோசனையையும் முன் வைத்துள்ளனர். சமீபகாலமாக காங்கிரசுடன் புதுவை தி.மு.க.வினர் எந்த நிகழ்விலும் பங்கேற்கவில்லை.
இதனால், காங்கிரசின் கவர்னரை கண்டிக்கும் போராட்டத்திலும் புதுவை தி.மு.க.வினர் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.

பாகூர் பகுதியில் விடிய விடிய பெய்ததால் வயல்களில் மழைநீர் தேங்கி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.
பாகூர்:
வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர், புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த மாதம் மழை வெளுத்து வாங்கியது. கனமழை முதல் மிக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வானத்தில் மேகங்கள் திரண்டு வந்து குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து புதுச்சேரி நகரம் மற்றும் பாகூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் விடிய விடிய திடீரென மழை பெய்தது.
இதனால் பாகூர், கன்னியகோவில், கிருமாம்பாக்கம், நெட்டப்பாக்கம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, கரையாம்புத்தூர், குருவிநத்தம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
வயல்களிலும் தண்ணீர் தேங்கியதால் பல இடங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. பாகூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 4.4 செ.மீ. மழை பதிவானது.
இந்த மழையால் பாகூர், கரையாம்புத்தூர், கரிக்கலாம்பாக்கம், சேலியமேடு, அரங்கனூர், பரிக்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கி அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
பொதுவாக நெல் அறுவடை செய்யும் போது ஏக்கருக்கு 40 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய முடியும். தற்போது பெய்த கனமழை காரணமாக 20 மூட்டைகள் வருவதே சந்தேகம் என விவசாயிகள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.

பள்ளிகளை திறப்பதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 8-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதாவது 9, 10, 11, 12-ம் வகுப்புகள் ஒருநாள் விட்டு ஒரு நாள் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணிவரை செயல்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளுக்கு பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் மாணவர்கள் வந்து, பாடத்தில் உள்ள சந்தேகங்களுக்கு நிவர்த்தி பெற்று செல்கின்றனர். இந்தநிலையில் வருகிற 4-ந்தேதியில் இருந்து 1-ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளும் செயல்பட கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
வகுப்புகள் அனைத்தும் காலை 10 மணிமுதல் நண் பகல் 1 மணிவரை செயல்படும். மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கட்டாயமில்லை. மாணவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடனே வகுப்புகளுக்கு வரவேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். கிருமி நாசினி கொண்டு கை கழுவுவது அவசியமாகும்.
ஒவ்வொரு வகுப்பறையிலும் அதிகபட்சமாக 20 மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர அனுமதிக்கலாம். 1, 3, 5, 7-ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8 வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு பாடவேளையும் 45 நிமிடங்களாக பிரிக்கப்பட வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிக்கு காலை 9.30 மணிக்கு வரவேண்டும்.
இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. வெளியூர்காரர்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது தமிழகம், கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புத்தாண்டை கொண்டாடுவதற்கு அரசு அனுமதி அளித்தது. ஓட்டல், தங்கும் விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனாலும் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் தீவிரப்படுத்தி உள்ளது. கடற்கரையில் விதிமீறல்கள் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் புதுவை நகருக்குள் நுழையும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் தடுப்பு கட்டைகள் அமைத்து தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக அனைத்து சந்திப்புகளிலும் நேற்று காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்புக் கட்டைகள் போக்குவரத்திற்கு கடும் இடையூறாக இருந்ததால் அந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. ஒயிட் டவுண் பகுதியில் வசிப்பவர்களுக்கும், ஓட்டல்களில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் தனியாக வாகன பாஸ்கள் வழங்கப்பட்டன.
புதுவை நகர் மற்றும் கடற்கரை சாலைக்கு செல்லும் பிரதான சாலைகள் நேற்று மாலை 5 மணிக்கு மேல் மூடப்பட்டன. இதனால் போலீசாருடன் ஆங்காங்கே வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் கடும் கெடுபிடி காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கடற்கரைக்கு செல்ல 10 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதுவை ஒயிட் டவுண், கடற்கரை சாலைகளில் போலீசார் கண்காணிப்பு கேமரா மற்றும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணித்தனர்.
முன்னதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் கடற்கரையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.
இந்தநிலையில் வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்தனர். புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் மாநில எல்லையான மதகடிப்பட்டு முத்தமிழ் நுழைவாயிலில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையும் நடத்தப்பட்டது.
அப்போது அணிவகுத்து வந்த வாகனங்களால் பரிசோதனை செய்ய முடியாமல் போலீசார் திணறினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தினர்.
புதுச்சேரி - கடலூர் சாலையில் முன்னோடை நுழைவாயில் பகுதியில் கிருமாம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களில் வந்தவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்த பின்னர் புதுவைக்குள் அனுமதித்தனர். இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். அனைவரும் முககவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தினர். ரெட்டிச்சாவடி சோதனை சாவடியில் தமிழக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து வந்த வாகனங்களை காலாப்பட்டு நுழைவாயிலிலும் போலீசார் சோதனைக்கு பின் அனுமதித்தனர்.
அண்டை மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி அரசால் அனுமதி அளிக்கப்பட்டதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகையால் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 4 லட்சம் ரொக்கம், கார் பறிமுதல் செய்யப்பட்டது.
நெட்டப்பாக்கம்:
நெட்டப்பாக்கம் அடுத்த செம்படபேட்டை புதுநகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது49). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 18-ந் தேதி இரவு புதுச்சேரிக்கு சென்று காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, கல்மண்டபம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே இரவு 7 மணியளவில், செம்படபேட்டையைச் சேர்ந்த சக்திவேல், கார்த்திக், பார்த்திபன், ராமரெட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவா ஆகியோர், ஆறுமுகத்தை கடத்திச் சென்றனர்.
அதன்பிறகு ஏற்காடு, சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் லாட்ஜில் அறை எடுத்து அடைத்து வைத்து, ஆறுமுகத்தை மிரட்டி ரூ.15 லட்சத்தை பறித்துக் கொண்டனர்.
அவர்களிடம் இருந்து கடந்த 25-ந் தேதி ஆறுமுகம் தப்பித்தார். அவரது புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நெட்டப்பாக்கம் ஏரிக்கரையில் தலைமறைவாக இருந்த சக்திவேல், பார்த்திபன், ரஞ்சித், சிவா, கார்த்திக் ஆகியோரை நேற்று முன்தினம் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில், ஆறுமுகத்தை மிரட்டி ரூ.15 லட்சம் பறித்துக் கொண்டதும் அந்த பணத்தில் கடத்தல்காரர்கள் புதிதாக கார் வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்த ரூ. 4 லட்சம் ரொக்கம், கார், இருசக்கர வாகனம், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கொரோனா பரிசோதனைக்குப் பின் அவர்கள் 5 பேரையும் போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
அரியாங்குப்பத்தில் ஓட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட வாலிபர் திடீரென மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியாங்குப்பம்:
அரியாங்குப்பம் அருந்ததிபுரம் ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மகன் ராஜசேகர் (வயது 28). கூலித் தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை.
பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று முன்தினம் கிருஷ்ணராஜ் தனது மனைவியுடன் திருவண்ணாமலை சென்றுவிட்டார். ராஜசேகர் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்டார். அப்போது தனது பாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவர் எடுத்து வருவதற்குள் ராஜசேகர் திடீரென மயக்கமடைந்து கீழே சாய்ந்து விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு யாரும் வரவேண்டாம் என்று சுற்றுலா பயணிகளுக்கு கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்துவதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
அதே நேரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாட்டம் மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி உறுதியாக நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
கவர்னர், முதல்-அமைச்சர் தரப்பு மோதலால் சர்ச்சை அதிகரித்தது. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்று அரசின் முடிவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
அவர் பேட்டி அளித்த பிறகு வாட்ஸ்-அப்பில் கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டை குடும்பத்துடன், வீட்டிலிருந்து கொண்டாடுங்கள். கொரோனா சூப்பர் பரவலின் ஒரு பகுதியாக இருக்காதீர்கள். அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு யாரும் வரவேண்டாம். புத்தாண்டு கொண்டாட்டங்கள் எங்கும் அனுமதிக்கப்படவில்லை.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொரோனாவை சூப்பர் பரவலாக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களை எச்சரித்துள்ளது.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி பதிவில் கூறியுள்ளார்.

புதுவை கவர்னர் கிரண்பேடி உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் 3-வது முறையாக கொரோனா பரிசோதனை எடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் கோவையை சேர்ந்த 26 வயது இளம்பெண் பணியாற்றி வருகிறார்.
தனி உதவியாளரான இவர் கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடுகளை சமூக வலைதளத்தில் பதிவிடும் பணியை செய்து வருகிறார். சமீபத்தில் அவர் கோவை சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து கவர்னர் மாளிகையில் அவர் தங்கியிருந்த முதலாவது தளத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கவர்னர் கிரண்பேடி முதலாவது தளத்தில் தங்கியுள்ளார் என்பதால் அவருக்கும் மற்றும் ஊழியர்கள் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை நேற்று மாலை கவர்னர் மாளிகை வளாகத்தில் நடந்தது.
இந்த தகவலை சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கவர்னர் மாளிகையில் பணியாற்றி வருபவர்களுக்கு கொரோனா தொற்று வந்ததால் ஏற்கனவே 2 முறை கவர்னர் கிரண்பேடி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
தற்போது அவரது உதவியாளருக்கே தொற்று உறுதியாகியுள்ளதால் 3-வது முறையாக கொரோனா பரிசோதனை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.