என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கைதான தம்பி பரபரப்பு வாக்குமூலம்
    • பிரேத பரிசோதனை முடிவில் ஜான்பி யர் கத்தி குத்தில் காயமடைந்து இறந்து போனது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் நேத்தாஜி நகரை சேர்ந்தவர் ஜான்பியர் (வயது45). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி உத்திரமேரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    ஜான்பியருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது மது குடித்து விட்டு அப்பகுதியை சேர்ந்தவ ர்களிடமும், குடும்பத்தி னரிடமும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 23-ந் தேதி ஜான்பியர் உடல் நலம் பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஜான்பியரின் வயிற்றில் ரத்த காயம் இருந்ததை கண்டனர்.

     ஆனால் வயிற்றில் ரத்த காயத்துக்கான காரணத்தை ஜான்பியரும், அவரது குடும்பத்தினரும் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஜான்பியருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஜான்பியர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாயார் லூர்துமேரி தனது மகன் சாவு குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் மர்ம சாவாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் ஜான்பியர் கத்தி குத்தில் காயமடைந்து இறந்து போனது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணை யில் குடும்ப தகராறில் ஜான்பி யரை அவரது தம்பி பிரான்சிஸ் (39) கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உப்பளம் பழைய துறைமுக பகுதியில் பதுங்கி இருந்த பிரான்சிசை சுற்றி வளைத்து பிடித்து கைதுசெய்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசார ணையில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தது ஏன் என்பது குறித்து பிரான்சிஸ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    எனது ஜான்பியர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்து வந்தார். இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருந்து வந்தது.

    அதுபோல் சம்பவத்தன்று இரவும் குடித்துவிட்டு தகராறு செய்தார். அதனை நான் தட்டி கேட்டு தூங்க செல்லுமாறு கூறினேன். ஆனால் எனது அண்ணன் ஜான்பியர் என்னிடம் தகராறு செய்தார்.

    மேலும் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து ஜான்பியர் என்னை குத்த முயன்றார். உடனே நான் அந்த கத்தியை பறித்து அவரது வயிற்றில் குத்தினேன்.

    கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இதனை செய்யவில்லை. எதேச்சையாக நடந்த இந்த சம்பவம் கொலை யாக மாறிவிட்டது.

    இவ்வாறு போலீசில் வாக்குமூலம் அளித்தார். 

    • மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் வேதனை
    • மீண்டும் மதுகுடிக்க மனைவி மாயாவிடம் பணம் கேட்டார். ஆனால் மாயா பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தில் மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்கமறுத்ததால் இறைச்சி கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     கிருமாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது.36). இவர் அப்பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாயா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    ராஜ்மோகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. தினமும் வேலை முடிந்து மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டி ருந்தார். அதுபோல் நேற்று மாலை ராஜ்மோகன் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர்  மீண்டும் மதுகுடிக்க மனைவி மாயாவிடம் பணம் கேட்டார். ஆனால் மாயா பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

    இதனால் ராஜ்மோகன் மனைவிடம் தகராறு செய்தார். இதையடுத்து மாயா தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை மாயா குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்தார். கணவர் ராஜ்மோகன் மின்விசிறியில் வேட்டியால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    மனைவி மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் ராஜ்மோகன் வேதனையில் இந்த துயர முடிவை எடுத்த கொண்டதாக கூறப்ப டுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்.
    • இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையம் அஜீஸ்நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு பின் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததற்கும் சாவார்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    செங்கோலுக்கும், விடுதலை அதிகார பரிமாற்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதில் பா.ஜனதா அரசியல் செய்கிறது.

    புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகம் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை. சட்டசபையில் விவாதிக்கவில்லை. கட்டாய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

    கியாஸ் மானியம் வழங்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு வைப்புத்தொகை நிதியும் அளிக்கவில்லை. அறிவித்த திட்டங்கள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை. எல்.டி.சி, யூ.டி.சி பணிகளை உடனே நிரப்ப வேண்டும்.

    ரெஸ்டோபார்கள் திறப்பது சமூக சீரழிவை ஏற்படுத்துகிறது. இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஊழியர்களை அழைத்து, படகுகளை சரியாக இயக்காமல் தனியார் படகு குழாமிற்கு ஆதரவாக செயல்படுகிறீர்களா?
    • அமைச்சர் லட்சுமிநாராயணன், ஆளுக்கு ஒரு சங்கம், வைத்து பிரிவினை யோடு செயல்படுவது சரியில்லை.

    புதுச்சேரி:

    புதுவை நோணாங் குப்பத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோடை விடுமுறையினால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    படகு குழாமில் பெரிய இயந்திர படகுகள் பழுதானதால் இயங்காது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி யடைந்தனர். நீண்டநேரம் காத்திருந்த பயணிகள் அங்கிருந்த ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

     இதுகுறித்து அறிந்த சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், படகு குழாமில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஊழியர்களை அழைத்து, படகுகளை சரியாக இயக்காமல் தனியார் படகு குழாமிற்கு ஆதரவாக செயல்படுகிறீர்களா? அடுத்தமுறை இதேபோல செயல்பட்டால் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரித்தார்.

    இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட படகை ஊழியர்கள் இயக்கினர். அரசு படகு குழாமிற்கு அருகே தனியார் படகு குழாம் உள்ளது.

    அரசு படகு குழாமில் நெரிசலை ஏற்படுத்தினால் வேறு வழியின்றி தனியார் படகு குழாமை சுற்றுலா பயணிகள் நாடிச்செல்வர். இதனால் சுற்றுலாத்துறை ஊழியர்கள் ஒரு சிலர் படகுகளை இயக்காமல் இருப்பதும், பிரிவினை ஏற்படுத்தி வருவதும் தெரியவந்தது.

    இதையும் கண்டித்த அமைச்சர் லட்சுமிநாராயணன், ஆளுக்கு ஒரு சங்கம், வைத்து பிரிவினை யோடு செயல்படுவது சரியில்லை.

    இதேபோல அடுத்தமுறை நடந்தால், இதில் ஈடுபடுவோர் கண்டிப்பாக பணிநீக்கம் செய்யப்ப டுவார்கள் என மீண்டும் எச்சரிக்கை செய்தார்.

    • மார்க்சிஸ்டு கம்யூ. குற்றச்சாட்டு
    • பெண் குழந்தைகளுக்கு வைப்புத் தொகை நிதியும் அளிக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் அஜீஸ்நகரில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

     மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு பின் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி புதுவையில் 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகம் செய்துள்ளனர். இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை. சட்டசபையில் விவாதிக் கவில்லை. கட்டாய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

     கியாஸ் மானியம் வழங்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு வைப்புத் தொகை நிதியும் அளிக்கவில்லை. அறிவித்த திட்டங்கள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை. எல்.டி.சி, யூ.டி.சி பணிகளை உடனே நிரப்ப வேண்டும்.

    ரெஸ்டோபார்கள் திறப்பது சமூக சீரழிவை ஏற்படுத்துகிறது. இந்திராகாந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்துள்ளது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதல்- அமைச்சர் ரங்கசாமி, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்றார்.
    • மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 328 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி, அரசுமுறை பயணமாக 2 நாட் கள் டெல்லிக்கு சென்றார்.

    முதல்நாள் அங்கு நடந்த நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது புதுவை மாநிலத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். புதுவை மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 328 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

     2-வது நாளாக டெல்லியில் முகாமிட்ட முதல்- அமைச்சர் ரங்கசாமி, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்றார்.

    இதன்பின் நேற்று இரவு 10 மணிக்கு புதுவைக்கு திரும்பினார். 

    • ஏழை, எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஜெயராமன், மூர்த்தி, வினோத், ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள்.

    புதுச்சேரி:

    உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் பசியாற உணவு அளிக்க வேண்டும் என்று, விஜய் மக்கள் இயக்க தலைவர் முன்னாள்

    எம்.எல்.ஏ புஸ்சி ஆனந்த் உத்தரவின் பேரில் திருபுவனை தொகுதி இளைஞர் அணி தலைவர் ராஜா ஏற்பாட்டின் படி, திருபுவனையில் ஏழை, எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் அசோக், பொருளாளர் மணி கண்டன், மற்றும் மன்ற நிர்வாகிகள் மணி, ஜீவா, எத்திராஜ், மணிகண்டன், ஜெயராமன், மூர்த்தி, வினோத், ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • மீனவர்கள் ஆற்று பகுதியில் சுற்றுலா படகு இயக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் பகுதி மீனவர்கள் கொரோனா காலகட்டத்துக்கு பின்னர் மீன் பிடி தொழிலில் வருமானம் குறைந்ததால் அப்பகுதி இளைஞர்கள் பாதுகாப்பு வசதியுடன் ஆற்று பகுதியில் சுற்றுலா படகுகளை இயக்கி வந்தனர்.

    தற்போது இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வம்பாகீரப்பாளையம் இளைஞர்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரனை வரவழைத்து வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் ஆற்று பகுதியில் சுற்றுலா படகு இயக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

    மேலும் ஓதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டரிடமும் கென்னடி எம்.எல்.ஏ. தொலைபேசியில் பேசி மீனவர்கள் சுற்றுலா படகு இயக்க ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் தனியார் ஓட்டலில் நடந்தது.
    • எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சந்தித்தால், பா.ஜனதாவை வீழ்த்தலாம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் தனியார் ஓட்டலில் நடந்தது.

    இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் இல்லாமல் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது. எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சந்தித்தால், பா.ஜனதாவை வீழ்த்தலாம். லோக்சபா தேர்தலில் புதுவையில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது உண்மையான தொண்டர்கள்தான் காங்கிரசில் உள்ளனர். 2 ஆண்டாக மத்திய பா.ஜனதா அரசு, ஊழல் நிறைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாம் நடத்தி வரும் போராட்டங்களை மக்கள் பார்க்கின்றனர்.

    காங்கிரஸ் ஆட்சி வந்தால் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது.
    • புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் அமைச்சர் முதலமைச்சர் ரங்கசாமிதான். அவர் உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து மாணவர் சேர்க்கை நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது. அதில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை, ரூ.200 கோடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வழங்கப்பட்டது. உண்மையில் நமக்கு கிடைத்தது ரூ.350 கோடிதான்.

    புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. அதேபோல் தமிழ் கட்டாயம் என்று அறிவிக்கப்படவிலை. தமிழ் மண்ணில் தமிழ் புறக்கணிக்கப்படுவது வேதனையாக உள்ளது.

    புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள். கலால்துறை முறைகேடு தொடர்பாக நிதித்துறை செயலாளர் ராஜூ, கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர் என நினைக்கிறோம்.

    ஆனால் உண்மையில் நகரப்பகுதியில் அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் கண்ட்ரோல் ரூம் ரூ.170 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை மத்திய அரசு நிறுவனமான ரெயில்டெல்லுக்கு அல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் அவர்கள் இருவரும் சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு செயலாளராக இருந்த அருண் தலைமை செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால் அதனை தலைமை செயலாளர் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். உள்துறைதான் அவர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் தான் இருவரும் மாற்றப்பட்டு உள்ளனர். தலைமை செயலாளர் இதில் நடவடிக்கை எடுக்காதிருந்தால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கும்.

    முதலமைச்சரின் உத்தரவு இல்லாமல் அவர்கள் இவ்வாறு நடந்திருக்க மாட்டார்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. எனக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் பதில் சொல்கிறார். விரைவில் கவர்னர் மீதான ஊழல் புகாரையும் வெளியிடுவேன்.

    இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • கணவரால் கைவிடப்பட்டவருக்கான அரசு நிதி உதவியை பெற்று வந்துள்ளார்.
    • சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    ரோட்டை சேர்ந்தவர் நிலா (வயது 44). இவர் முதல் கணவரால் கைவிடப்பட்டதால் புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் கணவரால் கைவிடப்பட்டோருக்கான நிதி உதவியை கடந்த 2013-ம் ஆண்டு முதல் பெற்று வந்தார்.

    இதற்கிடையே நிலா, 2-வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதை மறைத்து கணவரால் கைவிடப்பட்டவருக்கான அரசு நிதி உதவியை அவர் பெற்று வந்துள்ளார்.

    இதற்கிடையே நிலா வுக்கு 2-வதாக திருமணம் ஆகி கணவர் இருப்பது தெரிய வந்ததால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை அரசு நிறுத்தியது.

    அதைத்தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நிலா அரசிடம் இருந்து பெற்ற ரூ.82 ஆயிரத்து 200-யை திரும்ப செலுத்தும்படி துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் நிலா மீது புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் இயக்குனர் முத்து மீனா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்
    • புதுவை வளர்ச்சி திட்டங்க ளுக்கு வட்டி இல்லா நிதி உதவியும் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    டெல்லியில் நடப்பாண்டுக்கான 3-வது நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசிய தாவது:-

     புதுவை அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தகுதியான வருக்கு சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் பேரரேடு எனப்படும் தரவுதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும். இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடைவ தோடு முறை கேடுகளும் களையப்படும்.

    போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், புறவழிச் சாலைகள், வெளிவட்டச் சாலை மற்றும் டிராம், மெட்ரோ போன்ற மாற்று போக்குவரத்து முறைகளை ஆய்வு செய்வதில் எனது அரசு கவனம் செலுத்துகிறது.

    கரசூர் தொழிற்பேட்டை யில் ரூ.5 ஆயிரம் கோடி தனியார் முதலீடு ஈர்க்கப்பட்டு, 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

    அதே போல் புதுவை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதன் மூலம் ஆன்மீகம் மற்றும் மருத்துவ சுற்றுலாவுக்காக புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது தொழில் மேம்பாட்டுக்கும் சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும் 16-வது மத்திய நிதி குழுவின் வரம்புக்குள் புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்க்க வேண்டும்.

    மூலதன முதலீட்டிற்கான நிதி உதவி திட்டம் மாநிலங்க ளுக்கு மட்டுமே என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    எனவே புதுவையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய சிறப்பு நிதியாக ரு.2 ஆயிரத்து 328 கோடி வழங்க வேண்டும். புதுவை வளர்ச்சி திட்டங்களுக்கு வட்டி இல்லா நிதி உதவியும் வழங்க வேண்டும்.

    மத்திய பங்களிப்புடன் செயல்படும் திட்டங்களில் புதுவையை முழு மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ கருதப்படாத சூழல் நிலவுகிறது.

    எனவே மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படுவது போல் மத்திய பங்களிப்பு திட்டத்தில் 100 சதவீத நிதி வழங்க வேண்டும்.

    வளமான யூனியன் பிரதேசத்தை உருவாக்க நிதி அயோக்கின் மதிப்புமிக்க வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்க எதிர்பார்க்கிறேன். மத்திய அரசு அறிமுகப்படுத்திய பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் புதுவையில் திறம்பட செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×