என் மலர்
புதுச்சேரி
- பால் ஊழியர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வலியுறுத்தினர்.
- சம்பள உயர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
புதுச்சேரி:
புதுவை அரசு துறைகளில் தினகூலி, பகுதி நேர பணிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ரொட்டி பால் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இந்த சம்பள உயர்வை வழங்க கோரி ரொட்டி பால் ஊழியர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வலியுறுத்தினர்.
இதனையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
- சமூகத்தின் உட்பிரிவுகள் தொடர்பாகவும் நட்டா கேட்டறிந்தார்.
- புதுவை அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
புதுச்சேரி:
பா. ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை புதுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன், பட்டியல் அணியின் தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் சந்தித்தனர்.
டெல்லியில் ஜெ.பி.நட்டாவின் அதிகார பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, புதுவை அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் புதுவை மாநிலத்தில் பட்டியல் சமூகம் தொடர்பா கவும், பட்டியல் சமூகத்தின் அரசியல் அமைப்புகள், அங்கீகாரம் தொடர்பாகவும் நட்டா விசாரித்தார்.
அப்போது புதுவை மாநிலத்தில் 2-வது பெரிய சமூகம் பட்டியல் சமூகம் என சாமிநாதன் தெரிவித்த நிலையில் சமூகத்தின் உட்பிரிவுகள் தொடர்பா கவும் நட்டா கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின் போது அறிவுசார் பிரிவுமாநில செயற்குழு உறுப்பினர் அரவிந்த் உடனிருந்தார்.
- காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.
- தொகுதி நிர்வாகிகள் செந்தில், முத்து, சார்லஸ், ஜோசப் சகாயம், ஆல்பர்ட் கிஷோர், மஞ்சினி, கோபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ராஜ்பவன் தொகுதி குமரகுரு பள்ளத்தை சார்ந்த தொழிலதிபர் நடராஜன் மற்றும் அவருடைய மனைவி யும், சமூக சேவகியுமான எழிலரசியும் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடந்தது.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியலிங்கம் எம்.பி, வைத்திய நாதன் எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலை வரும் ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளருமான மருதுபாண்டியன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு, மாநில நிர்வாகிகள் திரு முருகன், பிரதீஷ், பாபுலால் உருளையன்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், முத்தியால் பேட்டை வட்டார தலைவர் ஆனந்த் பாபு, வக்கீல்கள் ராமலிங்கம், பாலமுருகன், சாரதி, கார்த்திகேயன், ஜார்ஜ் மற்றும் ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகள் செந்தில், முத்து, சார்லஸ், ஜோசப் சகாயம், ஆல்பர்ட் கிஷோர், மஞ்சினி, கோபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அடிப்படை வசதிகள், கல்வி கற்பித்தல், நோயாளிகளை கவனத்தில் எதிலும் பிரச்சினை இல்லை.
- மற்ற யூனியன் பிரதேசங்களில் மருத்துவக் கல்லூரி இல்லை. புதுவையில் மட்டும் தான் நடத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு திடீரென அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை அறிந்த புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டு மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மருத்துவக் கல்லூரிக்கான உரிமம் புதுப்பிக்கத் தவறியமைக்கான காரணங்களை கேட்டறிந்தார்.
அப்போது அவர் அதிகாரிகளை கடிந்து கொண்டார். டாக்டர்கள் சரியாக வருவதில்லை. இதை தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய மருத்துவ கழகத்திற்கு பல கல்லூரிகளில் டாக்டர்கள் சரியாக வருவதில்லை என்றும் மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லி கொடுப்பதில்லை என்றும் புகார்கள் சென்றுள்ளது. இதனால் வருகை பதிவேடு மற்றும் சி.சி.டி.வி கேமரா பதிவு மருத்துவ கழகத்தின் இணையதளத்துடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை ஏற்பாடு செய்த புதுவை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் இணைப்பு தராமல் விட்டு விட்டார்கள். பெற்றோர்களும் மாணவர்களும் கவலைப்பட வேண்டாம். மிக விரைவில் இந்த குறைபாடுகள் சரி செய்யப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த குறைபாட்டிற்கு அதிகாரிகள் காரணம். அவர்கள் அதை முறைப்படுத்தி இருக்க வேண்டும். மருத்துவ மாணவர்களின் படிப்பில் யாரும் விளையாட கூடாது. இதற்கு காரணமானவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் ஒரு பிரச்சினையும் கூடாது என்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை வசதிகள், கல்வி கற்பித்தல், நோயாளிகளை கவனத்தில் எதிலும் பிரச்சினை இல்லை. இது தான் அடிப்படையானது. இவை தான் மருத்துவக் கல்லூரிக்கு மிக முக்கியமானது.
மற்ற யூனியன் பிரதேசங்களில் மருத்துவக் கல்லூரி இல்லை. புதுவையில் மட்டும் தான் நடத்தப்படுகிறது. அதனால் புதுவையின் பெருமை குலைய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
- கலெக்டர் பக்தர்களுக்கு எளிதான தரிசனம் கிடைக்க கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கினார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கண க்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்த கைய சிறப்புவாய்ந்த சனீ ஸ்வரர் கோவிலில், வருகிற டிசம்பர் 20-ந் தேதி, 2 1/3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் உரிய ஏற்பாடு களை செய்து வருகிறது. மேலும், கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிர மோற்சவ விழாவும் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நிகழ்ச்சியும், ஜூன் 1-ந் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோ த்துங்கன் நேற்று பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவி லுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பக்த ர்கள் செல்லும் வரிசை வளாகம், அவர்களுக்கான, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கு எளிதான தரிசனம் கிடைக்க கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கினார். மேலும், பக்தர்களுக்கான பிரசாதம் தயாரிக்கும் இடத்தை, தூய்மையாக பராமரிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் குலோ த்துங்கன் அறிவுறு த்தினார். இந்த ஆய்வின் போது, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி கள், கோவில் மேஜேனர் ஸ்ரீநிவாசன் மற்றும் ஊழி யர்கள் உடன் இரு ந்தனர்.
- பிஜுகுமார் காரைக்கால் என்.ஐ.டியில் உதவி பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறார்.
- மகேஷ்குமார் இரவு 12 மணிக்கு மேல்தான் பஸ் வரும் என கூறினார்.
புதுச்சேரி:
காரைக்காலில் பஸ் ஏன் தாமதம் என கேட்ட உதவி பேராசிரியரை அடித்து, உதைத்த தனியார் பஸ் புக்கிங் அலுவல ஊழியர். காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம், மண்விலா பகுதியைச்சே ர்ந்த பிஜுகுமார் (வயது38). காரைக்கால் என்.ஐ.டியில் உதவி பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று கேரளா செல்லவேண்டி, காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில், ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்துள்ளார். இதனையடுத்து இரவு பஸ், 1 மணி நேரம் தாமதமாகும் என அவருடைய மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
இதுகுறித்து பிஜுகுமார் தனியார் பஸ் நிறுவன புக்கிங் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியிலி ருந்த ஊழியர் மகேஷ்குமார் இரவு 12 மணிக்கு மேல்தான் பஸ் வரும் என கூறினார். இந்த குறுஞ்செய்திக்கு பிஜுகுமார் விளக்கம் கேட்டார்.இதனால் ஆத்திர மடைந்த மகேஷ்குமார் பிஜுகுமாரை ஆபசமாக திட்டி, அருகில் கிடந்த இரும்பு பைப்பால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த பிஜுகுமார், காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் . மேலும் பிஜுகுமார் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ்குமாரை கைது செய்தனர்.
- பா.ஜனதா செயற்குழுவில் தீர்மானம்
- தமிழர்களின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் போற்றும் வகையில் சோழர் கால செங்கோலை இடம்பெற செய்த மோடிக்கு பாராட்டு தெரிவிப்பது.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் பிரபுதாஸ் தலைமை தாங்கினார். தொகுதி தலைவி நாகம்மாள், பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரன், மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நகர மாவட்ட செயலாளர் அசோக்பாபு எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பிரதமர் மோடி முயற்சியில் பப்புவா நியுகினியா நாட்டில் உலகப் பொதுமறை நூலான திருக்குறளை அந்நாட்டு மொழியில் மொழிபெயர்ப்பு செய்து தமிழர்களின் பெருமையை உலகம் போற்ற செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிப்பது.
புதிய பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் இருக்கை அருகில் தமிழர்களின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் போற்றும் வகையில் சோழர் கால செங்கோலை இடம்பெற செய்த மோடிக்கு பாராட்டு தெரிவிப்பது.
புதுவை மாநிலத்தில் வரும் கல்வியாண்டு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டு வந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும், தொடர் முயற்சி செய்த உள்துறை அமைச்சர் நமச்சி வாயத்திற்கும் செயற்குழு பாராட்டு தெரி விப்பது.
உருளையன் பேட்டை தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை செய்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில அறிவுசார் அணி இணை அமைப்பாளர் சாய்.சுதாகர், மாவட்டத் துணைத் தலைவர் பிரபு, ஓ.பி.சி அணி மாவட்ட தலைவி கீதா லட்சுமி, எஸ்.சி மோட்சா மாவட்ட தலைவர் வெற்றி, தொகுதி துணைத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு இந்த பேட்டரிகளை திருடி உள்ளனர்.
- ஆரோவில் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே ஜவகர் நகரை சேர்ந்தவர் சுந்தர பாண்டியன் (வயது 40). இவர் அப்பகுதியில் என்ஜினியரிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் பணியை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். மறுநாள் காலையில் வந்து கடையை பார்த்த போது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த சுந்தரபாண்டியன் கடையின் உள்ளே சென்று பார்த்த போது அவர் வைத்திருந்த ரூ 35 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து சுந்தரபாண்டி யன் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பூத்துறை பகுதியில் சம்பவத்தன்று மின் துறை இளநிலை பொறியாளர் ரகுநாதன் மின்துறை ஊழியர்களுடன் மின் மாற்றி அமைக்கும் பணியை முடித்து விட்டு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது மின்மாற்றியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடைத்து அதிலிருந்த 120 கிலோ காப்பர் வயரை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள னர். இதன் மதிப்பு பல லட்சமாகும்.
இதுகுறித்து இளநிலை பொறியாளர் ரங்கநாதன் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரோவில் சர்வதேச நகரத்தில் பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பகம் அலுவலகம் உள்ளது.
சம்பவத்தன்று புகழேந்தி என்பவர் பணியில் இருந்தார். இரவு பணி முடித்து விட்டு மறுநாள் வந்து பார்க்கும்போது அங்கிருந்த ஜெனரேட்டரில் 4 பேட்டரிகள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு இந்த பேட்டரி களை திருடி உள்ளனர்.
இதுகுறித்து புகழேந்தி கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவை கோரிமேடு அருகே தமிழக பகுதியான கலைவாணர் நகர் 3-வது குறுக்குத் தெருவில் வசிப்ப வர் சுந்தர்ராஜன். இவர் சம்பவதன்று இரவு வழக்கம்போல் வீட்டின் அருகே அவரது பைக்கை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். பின்னர் அதிகாலை வந்து பார்த்த போது அவரது பைக் திருட்டு போயிருந்தது. மர்ம நபர்கள் நோட்டமிட்டு பைக்கை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுந்தரராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
ஆரோவில் போலீஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களாக இதுபோன்று இரவு நேரங்களில் நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்க ளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- காந்தியடிகளின் அகிம்சை வழியை நேர் எதிராக கொள்கையை கொண்டவர்.
புதுச்சேரி:
இன்று சாவர்க்கார் பிறந்த நாளையொட்டி பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை கண்டித்தும் இந்த திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை அழைக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகி வீட்டில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுபோல் புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை மொரட்டாண்டி பகுதியில் ரவிக்குமார் எம்.பி தலைமையில் அவரது வீட்டினருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் ரவிக்குமார் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது.
இன்றைக்கு பா.ஜனதா அரசு மறைமுகமாக சாவக்கரின் பிறந்தநாளிலே பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்திருக்கிறார்கள். சாவர்க்கார் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முரணானவர்.
மேலும் இந்திய சுதந்திரத்தை வன்முறை பாதையில் கொண்டு சென்றவர். காந்தியடிகளின் அகிம்சை வழியை நேர் எதிராக கொள்கையை கொண்டவர். அத்தகைய ஒருவர் பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பது என்பது இந்திய ஜனநாயகத்தை அவமதிப்பாகும். இதனால் விடுதலைக் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில வெளியீட்டு மைய செயலாளர் பொன்னிவளவன் மற்றும் வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பிரதமர் மிகப்பெரிய பெருமையை தமிழுக்கும், தமிழர்களுக்கும் கொடுத்தது தமிழச்சி என்ற வகையில் மெய்சிலிர்த்து கண்டேன்.
- புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்று பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
புதுச்சேரி:
பாராளுமன்றத்தில் தமிழ் ஒலித்தபடியே தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. இது குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதிய பாராளுமன்றத்தில் முதன்முதலில் புகுந்தது நம் தமிழ். மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய பாராளுமன்றத்திற்குள் எளிய சிவனடியார்கள் புடை சூழ நம் பிரதமர் நரேந்திர மோடி பொற்கரங்களால் முதல் நிகழ்வாக தமிழகத்து செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது.
நீதி வழுவாத செங்கோல் என்று சொல்லப்படும் செங்கோல் நம் பாராளுமன்றத்தை முதன்முதலில் அலங்கரிக்கிறது. இந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மிகப்பெரிய பெருமையை தமிழுக்கும், தமிழர்களுக்கும் கொடுத்தது தமிழச்சி என்ற வகையில் மெய்சிலிர்த்து கண்டேன். அதற்காக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடியார்கள் அரசாள்வர் என்ற திருஞானசம்பந்தரின் வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு மக்கள் அரசாளும் பாராளுமன்றத்திற்குள் ஒலித்து இருப்பது தமிழக ஆன்மீகம் எவ்வளவு தொலைநோக்கு பார்வைகொண்டது.
அன்று பாடியது பாராளுமன்றம் மூலம் இன்று மக்களை நாடியது. யார் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தமிழக மக்கள் அனைவரும் மனதிலும் செங்கோல் நிறுவிய காட்சி பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது.இந்த வரலாற்று நிகழ்வு தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் வரலாற்று புகழ் சேர்த்திருக்கிறது.
இதை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்று பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
அவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என் தமிழுக்கு கிடைத்த பெருமையை தமிழுக்கு சூட்டிய மகுடமாக நினைத்து பிரதமருக்கு கோடான கோடி தமிழக மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆத்திரம் அடைந்த அவர்கள் அலெக்ஸ், கோகுல் சரணை இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கினர்.
- மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக சென்றனர்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் ( வயது 23). நெல்லிதோப்பில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த கோகுல் சரண் (18) என்பவரும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அனிதாநகரில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் விற்பதற்காக மோட்டர் சைக்கிளில் சென்றனர்.அவர்கள் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதை நோட்டமிட்ட அப்பகுதி வாலிபர்கள் அங்குள்ள ெரயில்வே கேட் பகுதியில் 2 பேரையும் வழிமறித்து எங்க ஏரியாவில் எப்படி அதிவேகமாக செல்லலாம் என்று கேட்டனர். இதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது, ஆத்திரம் அடைந்த அவர்கள் அலெக்ஸ், கோகுல் சரணை இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கினர்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிளஸ்-2 தேர்வில் மாணவி பிரியங்கா 600-க்கு 583 மதிப்பெண்ணும் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தை பிடித்தனர்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்க மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதோடு அதிக மதிப்பெண் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவி ஹேமாவதி 500-க்கு 479 மதிப்பெண்ணும் , பிளஸ்-1 தேர்வில் மாணவன் வருண் 600-க்கு 539 மதிப்பெண்ணும் , பிளஸ்-2 தேர்வில் மாணவி பிரியங்கா 600-க்கு 583 மதிப்பெண்ணும் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தை பிடித்தனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன், புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
சாதாரண மாணவர்களையும் சாதனையாளர்களாக மாற்றக்கூடிய முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலை பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது.






