என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவிய பிரதமர் மோடிக்கு பாராட்டு
    X

    பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் அசோக்பாபு எம்.எல்.ஏ. தொகுதி பொறுப்பாளர் பிரபுதாஸ் கலந்து கொண்டனர்.

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவிய பிரதமர் மோடிக்கு பாராட்டு

    • பா.ஜனதா செயற்குழுவில் தீர்மானம்
    • தமிழர்களின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் போற்றும் வகையில் சோழர் கால செங்கோலை இடம்பெற செய்த மோடிக்கு பாராட்டு தெரிவிப்பது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் பிரபுதாஸ் தலைமை தாங்கினார். தொகுதி தலைவி நாகம்மாள், பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரன், மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நகர மாவட்ட செயலாளர் அசோக்பாபு எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேசினார்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பிரதமர் மோடி முயற்சியில் பப்புவா நியுகினியா நாட்டில் உலகப் பொதுமறை நூலான திருக்குறளை அந்நாட்டு மொழியில் மொழிபெயர்ப்பு செய்து தமிழர்களின் பெருமையை உலகம் போற்ற செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிப்பது.

    புதிய பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் இருக்கை அருகில் தமிழர்களின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் போற்றும் வகையில் சோழர் கால செங்கோலை இடம்பெற செய்த மோடிக்கு பாராட்டு தெரிவிப்பது.

    புதுவை மாநிலத்தில் வரும் கல்வியாண்டு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டு வந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும், தொடர் முயற்சி செய்த உள்துறை அமைச்சர் நமச்சி வாயத்திற்கும் செயற்குழு பாராட்டு தெரி விப்பது.

    உருளையன் பேட்டை தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை செய்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில அறிவுசார் அணி இணை அமைப்பாளர் சாய்.சுதாகர், மாவட்டத் துணைத் தலைவர் பிரபு, ஓ.பி.சி அணி மாவட்ட தலைவி கீதா லட்சுமி, எஸ்.சி மோட்சா மாவட்ட தலைவர் வெற்றி, தொகுதி துணைத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×