என் மலர்
புதுச்சேரி

டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை புதுவை மாநில தலைவர் சாமிநாதன், பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் சந்தித்தனர்.
ஜே.பி. நட்டாவை சந்தித்த புதுவை பா.ஜனதா நிர்வாகிகள்
- சமூகத்தின் உட்பிரிவுகள் தொடர்பாகவும் நட்டா கேட்டறிந்தார்.
- புதுவை அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
புதுச்சேரி:
பா. ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை புதுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன், பட்டியல் அணியின் தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் சந்தித்தனர்.
டெல்லியில் ஜெ.பி.நட்டாவின் அதிகார பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, புதுவை அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் புதுவை மாநிலத்தில் பட்டியல் சமூகம் தொடர்பா கவும், பட்டியல் சமூகத்தின் அரசியல் அமைப்புகள், அங்கீகாரம் தொடர்பாகவும் நட்டா விசாரித்தார்.
அப்போது புதுவை மாநிலத்தில் 2-வது பெரிய சமூகம் பட்டியல் சமூகம் என சாமிநாதன் தெரிவித்த நிலையில் சமூகத்தின் உட்பிரிவுகள் தொடர்பா கவும் நட்டா கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின் போது அறிவுசார் பிரிவுமாநில செயற்குழு உறுப்பினர் அரவிந்த் உடனிருந்தார்.






