search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthuratnam Arangam School"

    • குளம் ,ஏரி ,இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம் ,ஏரி ,இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் 10-வது வாரமாக தேங்காய் திட்டு மரப்பாலம் அருகில் உள்ள சனீஸ்வரர் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் அவர்கள் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றரை டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வாட்டர் ஆப் பாண்டிச்சேரி தினேஷ் மற்றும் குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்திகேயன் மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

    நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.

    • பிளஸ்-2 தேர்வில் மாணவி பிரியங்கா 600-க்கு 583 மதிப்பெண்ணும் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தை பிடித்தனர்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்க மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதோடு அதிக மதிப்பெண் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவி ஹேமாவதி 500-க்கு 479 மதிப்பெண்ணும் , பிளஸ்-1 தேர்வில் மாணவன் வருண் 600-க்கு 539 மதிப்பெண்ணும் , பிளஸ்-2 தேர்வில் மாணவி பிரியங்கா 600-க்கு 583 மதிப்பெண்ணும் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தை பிடித்தனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன், புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

    சாதாரண மாணவர்களையும் சாதனையாளர்களாக மாற்றக்கூடிய முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலை பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது.

    ×