என் மலர்
புதுச்சேரி
- மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.
- மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவரும் மற்றும் மேலாண் இயக்குன ருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த வளாக தேர்வில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு தக்க்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவரும் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மணக்குள விநாயகர் கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார். விழாவில் டி.சி.எஸ். நிறுவனத்தின் அகாடமிக் அலையன்சஸ், அகாடமிக் இன்டர்பேஸ் புரோகிராம் தலைவர் சுசீந்திரன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி மாணவர்க ளுக்கு பணி நியமன ஆணை களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப்டெக்னாலஜியின் முதல்வர் மலர்க்கண், மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொ ய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர்,
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை டீன் வேல்முருகன், ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி, அலை டு ஹெல்த் சயின்ஸ்டீன் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலையின் டீன் முகமது யாசின், பிசியோ தெரபி டீன் சிதம்பரம், சட்டக்கல்வித்துறை டீன் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடை பெற்றன.
- பாலகணபதி உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கும், ராஜகோபுரத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரில் பிரசித்தி பெற்ற சக்தி சோலைவாழியம்மன் கோவில் உள்ளது.
100 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடை பெற்றன.
மேலும் புதிதாக 2 நிலை கருவறை விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் மகாலட்சுமி ஹோமத்துடன் தொடங்கு கிறது.
(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜையும், 31-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.
1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9.45 மணிக்கு பாலகணபதி உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கும், ராஜகோபுரத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து காலை 10.15 மணிக்கு சக்தி சோலைவாழியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு சக்திசோலை வாழியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
- புதுவை மாநில மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மிகவும் பாதிக்கும்.
புதுச்சேரி:
புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது புதுவை கல்வி துறை அவசர கோலத்தில், மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்ற ஒரே காரணத்தால், இதுவரை இருந்த பாடத்திட்டத்தை மாற்றி பிளஸ்-1 வகுப்பு வரை சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை வரும் ஆண்டில் புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடை முறைப்படுத்துவது வன்மையாக கண்டிக் கத்தக்கது.
தகுந்த பயிற்சி இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு இத்தகைய புதிய முயற்சியை எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் எடுப்பது மேலும் புதுவை மாநில மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மிகவும் பாதிக்கும்.
எனவே பெரும்பாலான வசதியுள்ள மாணவர்கள் ஏற்கனவே சி.பி.எஸ்.சி. முறையை பின்பற்றும் தனியார் பள்ளிகளை நாடி செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலும் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களின் நிலைமை மிகவும் பின்னடைவை சந்திக்க நேரிடும். புதுவை அரசின் பெரும்பாலான அறிவிப்புகள் எல்லாம் தனி யாரை ஊக்கு விப்பதாகவே உள்ளது.
எனவே இந்த முயற்சியை புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் முதல்-அமைச்சர் ரங்கசாமியும் தற்காலிகமாக தடுத்து நிறுத்திட வேண்டும்.
அதேபோல் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது மிகவும் வேதனையானதாகும்.
இது புதுவை அரசுக்கு தலைகுனிவான விஷயமாக கருதி இந்த நிலைமைக்கு காரணமான அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பரந்த நில பரப்பில் தலைமை செயலகத்துடன் இணைந்த சட்டமன்ற வளாகம் அமைக்க கடந்த 2000-ம் ஆண்டு முதலே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- ஏற்கனவே 4 முறைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், நில தேர்வில் சிக்கல் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற வளாகம் கடற்கரை சாலை அருகில் பாரதி பூங்கா எதிரே சுமார் 87 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.
கடந்த 1820-ம் ஆண்டு பிரெஞ்சு அரசால் கட்டப்பட்ட இந்த கட்டிடம் மருத்துவமனையாக இருந்தது. 1959-ம் ஆண்டில் இருந்தே சட்டசபை வளாகமாக செயல்படுகிறது. 200 ஆண்டுகள் பழமையான சட்டமன்ற கட்டிடம் புதுவையின் 19 பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாகும்.
பழமையான கட்டிடம் என்பதால் மைய கட்டிடம் வலுவிழந்துள்ளது.
இந்த நிலையில் பரந்த நில பரப்பில் தலைமை செயலகத்துடன் இணைந்த சட்டமன்ற வளாகம் அமைக்க கடந்த 2000-ம் ஆண்டு முதலே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 4 முறைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், நில தேர்வில் சிக்கல் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் 2021-ல் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைந்த என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசு புதிய சட்டமன்ற வளாகத்தை உருவாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
அதன்படி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை சதுக்க பகுதியில் 15 ஏக்கரில் சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் இணைந்த புதிய சட்டமன்ற வளாகம் கட்டப்படவுள்ளது. மொத்தம் 15 ஏக்கரில் 5 ஏக்கர் பரப்பளவுக்கு பேரவைக் கட்டிடங்கள் அமையவுள்ளன. ரூ.400 கோடியில் புதிய சட்டமன்ற வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் பொதுமக்கள் சபை நடவடிக்கையை நேரில் பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் பேரவை கூட்ட அரங்குடன் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கான நவீன அறைகள், காபினட், கமிட்டி அறைகள் அமையவுள்ளது. பேரவை வளாகம் தரைத்தளத்துடன் 5 மாடிகள் கொண்டதாக அமையவுள்ளது.
பேரவை வளாகத்தையொட்டி தலைமை செயலகமும், சட்டமன்ற செயலகம், நூலகம் உள்ளிட்டவையும் அமைய உள்ளது.
தலைமை செயலகம் தரை தளத்துடன் 4 மாடிகளுடன் அமைய உள்ளது. அதோடு உட்புற சாலைகள் 7 மீட்டர் அகலத்திலும், நடைபாதை 2 மீட்டர் அகலத்திலும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதோடு ஹெலிகாப்டர் இறங்கு தளமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பேரவைக் கட்டிடமானது பல மாநிலங்களின் சட்டப்பேரவைகளை ஆராய்ந்து அதில் இருந்து தனித்து சட்டப்பேரவை கட்டிட மாதிரியாக அமையும் வகையில் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகம் கட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய பிரதேசம் நொய்டாவை சேர்ந்த எனார்க் கன்சல்டன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிறுவன அதிகாரிகள் கட்டிடத்துக்கான மாதிரி வரைப்படத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் காண்பித்தனர். புதுவை பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் சத்தியமூர்த்தி விளக்கினார்.
இந்த வரைபடத்துக்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு டெண்டர் விடப்படும்.
இதன் பிறகு புதிய சட்டமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.
- மாநிலத் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் நடக்கிறது.
- தேசிய ஒருங்கிணைப்பாளர் சைத்தன்யா ரெட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாட்கள் பயிற்சி முகாம் லே ராயல் பார்க் ஓட்டலில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் நடக்கிறது.
பயிற்சி முகாமை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், புதுவை மாநில முன்னாள் முதல அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் எம்பி வைத்தியலிங்கம், எம்எல்ஏ வைத்தியநாதன், பிரதேச, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செயலாளர், புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோஸ்வா, இளைஞர் காங்கிரஸ் பயிற்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சைத்தன்யா ரெட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உயிரியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
- மாவட்ட நிர்வாகிகள் ஜலமணி, ராஜா, விமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பிளஸ்-1 பொதுத்தேர்வில் புதுவை பனித்திட்டு மீனவ கிராமத்தை சேர்ந்த மாணவி நிவேதா 600-க்கு 574 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் உயிரியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து புதுவை மாநிலத்துக்கு பெருமை சேர்த்த மாணவி நிவேதாவை தமிழ்நாடு மீனவர் பேரவையின் அரியாங்குப்பம் (தெற்கு) மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் வரும் காலங்களில் உயர்படிப்புக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் உறுதி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் புகழேந்தி, பொதுச்செயலாளர் குணசீலன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜலமணி, ராஜா, விமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ரியல் எஸ்டேட் தொழிலுக்காக அங்கன்வாடி மைய கட்டிடத்தை கடந்த 23-ம் தேதி ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடித்தார்
- ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
ஆரோவில் அருகே இரும்பை கிராமத்தில் தமிழக அரசின் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அந்தப்பகுதி மக்களின் வாக்குச்சாவடி மையமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் ஒன்றிய செயலாளர் ராஜ கோபால் (வயது 70). அங்கன்வாடி மைய கட்டிடம் பின்புறம் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு இடத்தை செப்பணிட்டார் வந்தார்.
ரியல் எஸ்டேட் தொழிலுக்காக அங்கன்வாடி மைய கட்டிடத்தை கடந்த 23-ம் தேதி ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடித்தார். அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அங்கு திரண்டு வந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இரும்பை ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கபாலி ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பாதை அமைப்பதற்காக அரசின் அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்த ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எனது தொகுதி மாண வர்களின் எதிர்காலத்தை பனையம் வைக்க ஒருபொழுதும் நான் அனுமதிக்க மாட்டேன்.
- ஆசிரியருக்கும் இது புதிது என்பதால் அவர்களையும் தயார் செய்ய வேண்டும். பாட புத்தகம் கிடைப்பதிலும் பல இடர்பாடுகள் உள்ளதாக அறிகின்றேன்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கட்டாயமாக சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாற்று வதற்கான நடவடிக்கைகளை புதுவை கல்வித்துறை எடுத்து வருகின்றது.
மத்திய அரசு அனைத்து யூனியன் பிரதேசங்களையும் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட கல்வி முறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்துள்ளது.
சி.பி.எஸ்.இ கல்விக் கூடங்களுக்கு மத்திய கல்வி வாரியம் சில அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், கட்டி டங்கள் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் உள்ளது.
ஆனால் புதுவை அரசு பள்ளிகளில் எந்த விதமான ஆய்வும் மேற்கொள்ளாமல் ஒரே ஒரு சுற்றறிக்கை மூலம் புதுவையில் உள்ள 127 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதிலிருந்து அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த உத்தரவு இது என்பது தெரிகிறது.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாற்றுவதை நான் எதிர்க்கவில்லை. படிப்படியாக செயல்படுத்துங்கள் என்பதுதான் எனது கோரிக்கை.
தற்பொழுது புதுவை கல்வித்துறை எடுத்துள்ள நடவடிக்கையை மாணவர்களிடம் மேலும் பதட்டத்தை அதிகரிக்கும். ஆசிரியருக்கும் இது புதிது என்பதால் அவர்களையும் தயார் செய்ய வேண்டும். பாட புத்தகம் கிடைப்பதிலும் பல இடர்பாடுகள் உள்ளதாக அறிகின்றேன்.
முதலியார் பேட்டையில் உள்ள அரசு பள்ளி தற்போது தான் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ப்பட்டுள்ளது. பள்ளியின் தரம் உயர்த்த ப்பட்டதே தவிர உள்கட்ட மைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்தப் பள்ளியை சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாற்றுவதாக அறிவித்துள்ளது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசு பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எனது தொகுதி மாண வர்களின் எதிர்காலத்தை பனையம் வைக்க ஒருபொழு தும் நான் அனுமதிக்க மாட்டேன்.
சி.பி.எஸ்.இ. பாடத்தி ட்டத்திலேயே தொடரும் என்றால் பள்ளி திறக்கும் நாளில் 7 முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களை பள்ளியில் அனுமதிக்காமல் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மாணவர்கள் தமிழக ஏற்கெனவே தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ்-1-ல் 6 பாடங்களைப் பயின்று வந்தனர்.
- தமிழ் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி, காரைக்கால் மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தை பின்பற்றி வந்தனர். இந்த நிலையில் முதல்கட்டமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அறிமுகமானது. தற்போது 6 முதல் 9, 11 -ம் வகுப்புகளில் நடப்பாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
புதுச்சேரியில் 127 பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமலாகிறது. தமிழ் மொழி புறக்கணி க்கப்படாது என்று கல்வித்துறை உறுதி அளித்தி ருந்தது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நேற்று முதல் விண்ணப்பம் விநியோகத்தை கல்வித்துறை தொடங்கியது. இதில் அறிவியல் பாடப்பிரிவில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், மனையியல், உளவியல், உடற்கல்வி, கணினி அறிவியல், தகவல் பயிற்சி, வெப் அப்ளிகேஷன், தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளும், கலை பாடப்பிரிவில் வணிக படிப்பு, கணக்கு பதிவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், தகவல் பயிற்சி, வெப் அப்ளிகேஷன், உடற்கல்வி, நூலக அறிவியல், சட்டப் படிப்பு, தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன.
தொழிற்கல்வி பாடப்பிரிவுகளாக தட்டச்சு, தகவல் பயிற்சி, டெக்டைல் டிசைன், சுருக்கெழுத்து தமிழ்/ஆங்கிலம், உடற்கல்வி, வெப் அப்ளிகேஷன், சட்ட படிப்பு, அலுவலக செயல்முறை - பயிற்சி, புட் நியூட்ரிஷியன், தமிழ் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் தமிழக ஏற்கெனவே தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ்-1-ல் 6 பாடங்களைப் பயின்று வந்தனர். இதனால் நான்கு முக்கிய பாடப்பிரிவுகளுடன் ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் பிளஸ்-1-ல் 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பத்தில் தமிழ் விருப்பப்படமாக இடம் பெற்றிருந்தாலும், மாணவர்கள் வேறு வழியில்லாமல் தமிழை தேர்வு செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, புதுவை அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு பிளஸ்-1 மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மொழிப் பிரிவில் தமிழுக்கு மட்டுமில்லாமல் ஏனாமில் தெலுங்குக்கு மாகேவில் மலையாளத்துக்கும் இதே சூழல் ஏற்பட்டுள்ளதால் மொழிப் பாட ஆசிரியர்களின் பணி பாதுகாப்பும் பாதிக்கும் சூழல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- சுடுகாடாக பயன்படுத்தி வரும் அந்த இடத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு அருகே கலிதீர்த்தாள் குப்பம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் கழிவுநீர் வாய்க்கால் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது அந்த பகுதியில் உள்ள மாத்திரை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு மின்சாரம் எடுத்துச் செல்ல சுடுகாடாக பயன்படுத்தி வரும் அந்த இடத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் பொதுமக்கள் இங்கு புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பங்களை உடனடி யாக அகற்ற வேண்டும் என்றும் அப்படி அகற்றா விட்டால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட போலீஸ் பூத்தாக மாற்றி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
- பொதுமக்கள் பாதுகாப்புக்காக போலீஸ் பூத்தாக செயல்பட வைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க .துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழக எல்லையான முத்தியால்பேட்டை காந்திவீதி, சாலை தெரு சந்திப்பில் உள்ள நகராட்சி கட்டிடத்தை நான் எம்எல்ஏவாக இருந்தபோது பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட போலீஸ் பூத்தாக மாற்றி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
அதிகாரிகளின் மெத்தனத்தால் சில மாதங்களாக போலீஸ் பூத் மூடப்பட்டுள்ளது
இந்த நிலையில் பூத் கட்டிடடத்தை தனியாருக்கு தாரை வார்க்க நகராட்சி முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. நகராட்சியின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, முன்பு போலவே பொதுமக்கள் பாதுகாப்புக்காக போலீஸ் பூத்தாக செயல்பட வைக்க வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- 31-ந் தேதி வரை சிறப்பு முகாம்
- மத்திய நிதி அமைச்சகம் மகளிர் மதிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
இந்திய அஞ்சால் துறையின் புதுவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய நிதி அமைச்சகம் மகளிர் மதிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்ட சிறப்பு முகாம் அனைத்து அஞ்சல கங்களிலும் நடக்கிறது.
வரும் 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு பெண்ணும், பெண்ணின் பாதுகாவலரும் கணக்கை தொடங்கலாம்.
ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும். காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வரவு வைக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.1000 செலுத்தி கணக்கை தொடங்கலாம். தனிநபர் அதிகபட்ச வரம்பு ரூ.2 லட்சத்துக்கு உட்பட்டு எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் திறக்கலாம்.
கணக்கு தொடங்கிய நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு பின் 40 சதவீதம் வரை திரும்ப பெறலாம்.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், நிதி சுதந்திரத்தை மேம்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு முயற்சியாகும்.
இந்த திட்டம் குறுகியகால முதலீட்டில் அதிக வருமானத்தை ஈட்டுவதால் பெண் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






