search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவைக்கென தனி கல்வி கொள்கை உருவாக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    புதுவைக்கென தனி கல்வி கொள்கை உருவாக்க வேண்டும்

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
    • புதுவை மாநில மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மிகவும் பாதிக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போது புதுவை கல்வி துறை அவசர கோலத்தில், மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்ற ஒரே காரணத்தால், இதுவரை இருந்த பாடத்திட்டத்தை மாற்றி பிளஸ்-1 வகுப்பு வரை சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை வரும் ஆண்டில் புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடை முறைப்படுத்துவது வன்மையாக கண்டிக் கத்தக்கது.

    தகுந்த பயிற்சி இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு இத்தகைய புதிய முயற்சியை எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் எடுப்பது மேலும் புதுவை மாநில மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மிகவும் பாதிக்கும்.

    எனவே பெரும்பாலான வசதியுள்ள மாணவர்கள் ஏற்கனவே சி.பி.எஸ்.சி. முறையை பின்பற்றும் தனியார் பள்ளிகளை நாடி செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலும் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களின் நிலைமை மிகவும் பின்னடைவை சந்திக்க நேரிடும். புதுவை அரசின் பெரும்பாலான அறிவிப்புகள் எல்லாம் தனி யாரை ஊக்கு விப்பதாகவே உள்ளது.

    எனவே இந்த முயற்சியை புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் முதல்-அமைச்சர் ரங்கசாமியும் தற்காலிகமாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

    அதேபோல் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது மிகவும் வேதனையானதாகும்.

    இது புதுவை அரசுக்கு தலைகுனிவான விஷயமாக கருதி இந்த நிலைமைக்கு காரணமான அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×