search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாட திட்டத்தை அனுமதிக்கமாட்டேன்
    X

    கோப்பு படம்.

    அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாட திட்டத்தை அனுமதிக்கமாட்டேன்

    • அரசு பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எனது தொகுதி மாண வர்களின் எதிர்காலத்தை பனையம் வைக்க ஒருபொழுதும் நான் அனுமதிக்க மாட்டேன்.
    • ஆசிரியருக்கும் இது புதிது என்பதால் அவர்களையும் தயார் செய்ய வேண்டும். பாட புத்தகம் கிடைப்பதிலும் பல இடர்பாடுகள் உள்ளதாக அறிகின்றேன்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கட்டாயமாக சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாற்று வதற்கான நடவடிக்கைகளை புதுவை கல்வித்துறை எடுத்து வருகின்றது.

    மத்திய அரசு அனைத்து யூனியன் பிரதேசங்களையும் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட கல்வி முறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்துள்ளது.

    சி.பி.எஸ்.இ கல்விக் கூடங்களுக்கு மத்திய கல்வி வாரியம் சில அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், கட்டி டங்கள் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் உள்ளது.

    ஆனால் புதுவை அரசு பள்ளிகளில் எந்த விதமான ஆய்வும் மேற்கொள்ளாமல் ஒரே ஒரு சுற்றறிக்கை மூலம் புதுவையில் உள்ள 127 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதிலிருந்து அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த உத்தரவு இது என்பது தெரிகிறது.

    சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாற்றுவதை நான் எதிர்க்கவில்லை. படிப்படியாக செயல்படுத்துங்கள் என்பதுதான் எனது கோரிக்கை.

    தற்பொழுது புதுவை கல்வித்துறை எடுத்துள்ள நடவடிக்கையை மாணவர்களிடம் மேலும் பதட்டத்தை அதிகரிக்கும். ஆசிரியருக்கும் இது புதிது என்பதால் அவர்களையும் தயார் செய்ய வேண்டும். பாட புத்தகம் கிடைப்பதிலும் பல இடர்பாடுகள் உள்ளதாக அறிகின்றேன்.

    முதலியார் பேட்டையில் உள்ள அரசு பள்ளி தற்போது தான் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ப்பட்டுள்ளது. பள்ளியின் தரம் உயர்த்த ப்பட்டதே தவிர உள்கட்ட மைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்தப் பள்ளியை சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாற்றுவதாக அறிவித்துள்ளது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசு பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எனது தொகுதி மாண வர்களின் எதிர்காலத்தை பனையம் வைக்க ஒருபொழு தும் நான் அனுமதிக்க மாட்டேன்.

    சி.பி.எஸ்.இ. பாடத்தி ட்டத்திலேயே தொடரும் என்றால் பள்ளி திறக்கும் நாளில் 7 முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களை பள்ளியில் அனுமதிக்காமல் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×