என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தனர்.
    • அவரது மகன் விநாயகமூர்த்தி கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    வானூரை அடுத்த செங்கமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 52) டெய்லர் வேலை செய்து வந்தார்.  9 மணிக்கு கொடுக்கூர் ஆற்றங்கரைக்கு மீன்பிடிக்க சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு முருகன் மயங்கிய நிலையில் இறந்த கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் விநாயகமூர்த்தி கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்விசிறியில் சிபச்சரன் பால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சிபச்சரன் பால் (வயது47). இவர் நெட்டப்பாக்கம் அருகே மடுகரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். தொழிற்சாலையில் ஊழியர் குடியிருப்பில் தங்கியிருந்து வந்த இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    அவர்கள் ஒடிசாவில் வசித்து வருகிறார்கள். கடந்த மாதம் சிபச்சரன் பால் தனது மனைவி மற்றும் குழந்தைளை பார்க்க சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பியது முதல் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.  பணி முடிந்து சிபச்சரன் பால் தான் தங்கியிருந்த குடியிருப்புக்கு திரும்பினார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்ப டவில்லை. சந்தேகமடைந்த அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது மின்விசிறியில் சிபச்சரன் பால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     வில்லியனூர் அருகே ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி அம்புஜம்(64). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கராசு இறந்து விட்டார். இதனால் அம்புஜம் பிள்ளையார் குப்பத்தில் வசிக்கும் தனது இளையமகள் அங்காளபரமேஸ்வரி வீட்டில் தங்கியிருந்து வந்தார்.

    இதற்கிடையே கணவர் இறந்து போனது முதல் அம்புஜம் விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அம்புஜம் நேற்று சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு சென்று அங்குள்ள பாழடைந்த வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போட்டிகள் குறித்த விரிவான தகவல்களை இணையதளத்தில் காணலாம்.
    • வாழ்க்கை முறை திட்டத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப் படுகிறது.

    புதுச்சேரி:

    அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் யாசம்லட்சுமிநாராயண ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:

    ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை திட்டத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப் படுகிறது.

    எரிபொருள் சிக்கனம், தண்ணீர் சிக்கனம், பிளாஸ்டிக் பயன்பாடு குறைத்தல், உணவுப் பொருட்களின் நிலைத்தன்மை, ஆரோக்கிய வாழ்க்கை முறை உட்பட 7 கருப்பொருளில் தனி மனித வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவது திட்டத்தின் நோக்கம்.

    இதுகுறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் 30ந் தேதி முதல் ஜூன் 3-ந் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறையின் கீழ் செயல்படும் காலநிலை மாற்ற பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. போட்டிகள் குறித்த விரிவான தகவல்களை இணை யதளத்தில் காணலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வாணரப்பேட்டை தாவிரவியல் பூங்கா மற்றும் தாமரை நகர் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்
    • உடனடி நடவடிக்கை எடுப்பதாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் உறுதியளித்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பிரான்ஸ்சுவா தோப்பு, காளியம்மன் கோவில் தோப்பு, முருகசாமி நகர், ஜெகநாதர் படையாட்சி வீதி, நாராயணசாமி வீதி, என்ஜினீயர் தோட்டம், அன்னை இந்திரா நகர், பல்லவன் வீதி, எல்லையம்மன் கோவில் தோப்பு, ஆட்டுப்பட்டி, ரோடியர்பேட், தாமரை நகர், தமிழ்தாய் நகர், ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.

    இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ. கென்னடி பொதுபணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வாணரப்பேட்டை தாவிரவியல் பூங்கா மற்றும் தாமரை நகர் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் ஆட்டுப்பட்டி மற்றும் திப்புராயப்பேட்டை பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து இக்கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின் போது மீனவர் அணி விநாயகம், கிளைச் செயலாளர்கள் செல்வம், ராகேஷ், விடுதலை சிறுத்தை கட்சி தெஸீர், தி.மு.க.நிர்வாகிகள் பாலு, ஜெயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
    • போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை தடுக்க கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

    அதுபோல் புதுச்சேரியிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ. நேருவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதன் காரணமாக தற்போது புதுச்சேரியில் அபராதம் விதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.

    தற்போது கோடை வெயில் வருத்தெடுத்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் ஒரு சிலர் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள்.

    அவ்வாறு ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் வெயிலால் படாத பாடுபட்டனர்.

    இதற்கிடையே கோடை வெயிலுக்கு இதமாக இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஏ.சி.ஹெல்மெட்டை தயாரித்துள்ளது.

    இதனை புதுவையில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிரத்தியேமாக தயாரிக்கப்பட்ட இந்த ஏ.சி. ஹெல்மெட்டை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அணிந்து பரிசோதனை செய்தார். விரைவில் இந்த ஏ.சி. ஹெல்மெட் புதுவையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சாலை போக்குவரதுக்கு லாயகற்ற நிலையில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • முதியவர்கள் இச்சாலை வழியாக செல்ல பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தில் உள்ள பெரிய பேட் கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில், கடந்த 22 ஆண்டுகளாக சாலை வசதி சரி செய்யப்படாமல், போக்குவரதுக்கு லாயகற்ற நிலையில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அவசர மருத்துவ சிகிச்சை க்கு ஆம்புல ன்ஸ், தீயணை ப்பு வாகனம் கூட வர முடியாத அளவிற்கு சாலை பழுதடைந்துள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள் இச்சாலை வழியாக செல்ல பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில், சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, சாலையை, உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கலெக்டர் குலோத்துங்கன் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • அனைத்து கட்சியினர் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு
    • சுவரொட்டிகள் யார் ஒட்டியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூர் கோவில் திருவிழா நடத்துவதில் 2 குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பதட்டமான சூழல் இருந்து வந்ததால் பாகூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து சுவரொட்டிகள் யார் ஒட்டியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அனைத்து கட்சிகள் சார்பில் நோட்டீஸ் ஒட்டியவர்கள் யார் என உடனடியாக கண்டுபிடிக்க கோரியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சி சார்பில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

    இதில் பாகூர் தொகுதி தி.மு.க. செயலாளர் பாண்டு அரிகிருஷ்ணன், கிளை செயலாளர் பாவாடை, காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் கோபு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கலியமூர்த்தி, தாமோதரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன் மற்றும் மணிவண்ணன், பொன்னம்மாள், மக்கள் இயக்கம் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • பக்தர்கள் செடல் குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    புதுச்சேரி:

    பாகூரை அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் மற்றும் தேர் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை செடல் உற்சவம், காவடி பூஜை, மாட்டு செடல், சவப்பாடைசெடல் நடைபெற்றது. இதில் பக்தர்கள் செடல் குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. பாகூர் தொகுதி எம்.எல்.ஏ செந்தில்குமார் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பாகூர், குருவிநத்தம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்கா வலர் குழு மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர்.

    • அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
    • அதனால் 1- வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    அதனால் 1- வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9-ஆம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • அனைத்து தலித் இயக்கங்களின் நியாயமான கோரிக்கைகளை வெல்வது என முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட அனைத்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வக்கீல் வின்சென்ட் ராஜ் தலைமையில், அனைத்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மூத்த போராளிகள் நிரவி தங்கராசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் நிலவழகன், டாக்டர் அம்பேத்கர் கல்வி பொருளாதாரம் மேம்பாட்டு மையம் நிறுவனர் தணிகாசலம், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் சூர்யா, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல கூட்டமைப்பின் தலைவர் நாகூரான், சமூக நீதிக் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணை ப்பாளர் வின்சன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், திட்டமிட்டப்படி எதிர்வரும் 29-ந் தேதி தொடர் முழுக்க போராட்டம் நடத்தி, அனைத்து தலித் இயங்களின் நியாயமான கோரிக்கைகளை வெல்வது என முடிவு செய்யப்பட்டது.

    • போலீசார் பள்ளத்தில் இருந்த வேனை தனியார் கிரேன் மூலம் மீட்டனர்.
    • போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    செல்லிப்பட்டு பகுதியில் இருந்து இன்று காலை பத்துக்கண்ணு நோக்கி குப்பை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது.

    அம்மணக்குப்பம் பகுதியில் இடது புறம் ஒதுங்கும்போது சாலையின் ஓரத்தில் இருந்த மண் சறுக்கி பள்ளத்துக்குள் வேன் பாய்ந்தது. இதில் குப்பை வேன் பல்டி அடித்து தலை குப்புற கவிழ்ந்தது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வேனுக்குள் காயத்துடன் சிக்கித் தவித்த டிரைவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்

    தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வில்லியனூர் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் போலீசார் பள்ளத்தில் இருந்த வேனை தனியார் கிரேன் மூலம் மீட்டனர்.

     போலீசார் நடத்திய விசாரணையில் குப்பைவேனை ஒட்டி வந்தவர் வாதானூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன்(31) என்பதும், வேகமாக குப்பை வேனை ஓட்டி வந்ததால் விபத்துக்கு காரணமாக இருந்ததும் தெரிய வந்தது. இந்த விபத்துக்கு குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காந்தி கடற்கரை சாலையில் நடைபெற்றது.
    • புதுச்சேரியில் டி.வி.எஸ். ஐகியூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நெ .1 ஆக விற்பனை ஆகிக் கொண்டு உள்ளது.

    புதுச்சேரி:

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் கம்பெனியின் புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனமான டிவிஎஸ் ஐகியூப் மெகா டெலிவரி கடற்கரை காந்தி திடல் சாலையில் நடந்தது. புதுவை நூரடி ரோடு ஜே.கே டி.வி.எஸ்-ன் மூலமாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜே.கே.டி வி.எஸ்-ன் மேலான் பங்குதாரர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    இதில் பிராந்திய மேலாளர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட மேலாளர் ராம் மூலம் மெகா டெலிவரி செய்யப்பட்டது. குறுகிய காலத்தில் புதுச்சேரியில் டி.வி.எஸ். ஐகியூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நெ .1 ஆக விற்பனை ஆகிக் கொண்டு உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் எஸ். எஸ் ரங்கன்ரெட்டியார், ஆடிட்டர் ராஜேந்திரன் மற்றும் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

    ×