என் மலர்
நீங்கள் தேடியது "Kennedy MLA"
- புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 2-ல் எல் வடிவ வாய்க்கால் மேம்படுத்தும் பணி நேதாஜி நகர் வார்டில் நடைபெற்று வருகிறது.
- பணியினை நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 2-ல் எல் வடிவ வாய்க்கால் மேம்படுத்தும் பணி நேதாஜி நகர் வார்டில் நடைபெற்று வருகிறது.
இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. சட்டமன்ற நிதியின் கீழ் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.அப்பணி தற்பொழுது 80 சதவீதம் நிறைவேறும் நிலையில் உள்ளது. பணியினை நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டனர். அப்பொழுது விடுபட்ட பணியினை தொகுதி மக்களுடன் கலந்து ஆலோசனை செய்தார்.
உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், கிளை செயலாளர்கள் செல்வம் மற்றும் ராகேஷ், செழியன், ரகுமான் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட ப-வடிவ வாய்க்கால் முழுவதும் சாக்கடையை தூர்வாருவது சம்பந்தமாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன் தி.மு.க. கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்து மனு அளித்திருந்தார்.
- தூர்வாரும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஒத்தவாடை வீதி, பாரதிமில் ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை இருபுறமும் உள்ள யூ-ட்ரைன் (ப-வடிவ வாய்க்கால்) முழுவதும் சாக்கடையை தூர்வாருவது சம்பந்தமாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன் தி.மு.க. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்து மனு அளித்திருந்தார்.
இது சம்பந்தமாக தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தியிடம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்து தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினரின் துரித நடவடிக்கையால் தூர்வாரும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
அப்பணி மேற்கொள்ளும் போது டாக்டர் அம்பேத்கர் சாலையில் பணிகள் சரியாக நடக்கவில்லை என்று அப்பகுதி பொது மக்கள் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
உடனே அப்பகுதிக்கு நிர்வாகிகள் உடன் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து சாலைகளை ஆய்வு மேற்கொண்டார், அப்பொழுது இளநிலை பொறியாளர் ராமன் அழைத்து வந்து வாய்க்காலில் கழிவுநீர் போகாமல் இருக்கும் இடங்களையும், மண்கொட்டி வாய்க்கால் அடைத்து இருக்கும் அனைத்து இடங்களையும் அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. காண்பித்தார்.
நேரில் சென்று பணிகளை பார்வையிட்டப் பின்னர் அதிகாரிகளிடம் வேலைகளை முழுமையாக பாரபட்சம் பார்க்காமல் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி முழுமையாக மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வண்ணம் தூர் வாரி செயல் புரிய வேண்டும் என்று அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்,
அவருடன் அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி தங்கவேல், இளைஞர் அணி விநாயகம், அம்மா ஆறுமுகம், சுரேஷ், கிளை செயலாளர்கள் செல்வம்,ராகேஷ், தி.மு.க. நிர்வாகிகள் ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- புதுவை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்கின்றார்.அதன் முடிவுகள் என்ன என்பதனை மாநில மக்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.
- உள்ளாட்சி நிர்வாகம் உள்ளாட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்கின்றார்.அதன் முடிவுகள் என்ன என்பதனை மாநில மக்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். அமைச்சரவை பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அரசு செயல்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் கோப்புகளை திருப்பி அனுப்புதல் கூடாது.
சட்டப்பேரவை செயலகத்தில் பணியில் உள்ள தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து வேறு துறைக்கு மாற்றுங்கள். சட்டப்பேரவை செயலகத்தில் எம்.எல்.ஏக்களின் அவசரப்பணிக்கு ஒரு தட்டச்சர் தனியாக நியமிக்க வேண்டும்.
உள்ளாட்சி நிர்வாகம் உள்ளாட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். கோவில் வரியினை முறையாக வசூலிக்க கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
புதுவை மாநிலத்தில் உள்ள 30 மருத்துவமனைகளின் தரத்தினை உயர்த்துங்கள்.புதிய வருவாய் கிராமங்களை உருவாக்க வேண்டும். உழவர்கரை தாலுக்கா வை இரண்டாகப் பிரித்து புதிய தாலுக்கா என்று உருவாக்க வேண்டும். வி.ஏ.ஓ.,வி.ஏ. பணியிடங்களை நிரப்ப வேண்டும் .
முகத்துவாரப் பகுதியில் தூர்வார கே.எஸ்.ஆர். என்ற நிறுவனம் பணி செய்தது. 7 லட்சம் கியூபிக் மீட்டர் மண் அள்ள ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டபடி மண் அள்ளவில்லை. அரசு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கடந்த 5 நிதியாண்டுகளில் பேரம் பேசி வாங்கியக் கடனில் 40% சதவிகிதம் தான் செலவு செய்யப்படுகிறது.
மத்திய அரசினுடைய கடனை தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை குழு மத்திய அரசினை நாட வேண்டும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை அருகே திப்புராயப்பேட்டை சன்னியாசி தோப்பில் அமைந்துள்ள கல்லறையில் சமாதி திருவிழா நடைபெற்றது.
- இதில் உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில 21 கிராம ஆதிதிராவிடர் பஞ்சாயத்து குழு கூட்டமைப்பு சார்பில் திப்புராயப்பேட்டை சன்னியாசி தோப்பில் அமைந்துள்ள கல்லறையில் சமாதி திருவிழா நடைபெற்றது.
அதில் முன்னோர்களின் சமாதியை சீர்செய்து சமாதி திருவிழாவை சிறப்பாக செய்து பொதுமக்கள் வழிபட்டனர். இதில் உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.
நிகழ்ச்சியில் பெரும்பா லான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு சடங்குகளை செய்தனர், விழாவில் தி.மு.க. கட்சி நிர்வாகிகள், புதியவன், கன்னியப்பன்,மூர்த்தி, நோயல், மணிகண்டன், தேசீர், பேட்டை ரஜினி, மகிமை, பெருமாள்,சரவணன், மொயிஸ், சக்திவேல், அறிவழகன், ஈசாக், தர்ஷனா, தஸ்தான், லாரன்ஸ், ஆனந்த், மோரீஸ், தமிழா, செரேஞ்சீவி மற்றும் உப்பளம் தொகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
புதுச்சேரி:
உப்பளம் தொகுதியில் பாண்லே பால் நிலையம் அமைக்க திருநங்கைகள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை மனு அளித்தனர்.
புதுவையில் மொத்தம் 206 திருநங்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இவர்களின் வளர்ச்சிக்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு டாக்டர் ஷீத்தல் நாயக் தலைமையில் உருவாக்கப்பட்டு சுய உதவிக் குழுக்கள் இயங்கி கொண்டிருக்கின்றது.
எனவே திருநங்கைகளின் வாழ்வாதார வளர்ச்சி குறித்து அடிப்படை வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகும் திருநங்கைகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் 3 திருநங்கைகள் ஒன்றிணைந்து சுய தொழில் செய்து வறுமையை போக்கும் விதமாக கடற்கரை சுப்பையா சாலையில் பாண்லே பால் நிலையம் திறப்பதற்கான இடத்திற்கு அனுமதி வேண்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அந்த தொகுதிக்கு உட்பட்ட மதிப்பிற்குரிய எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் அனுமதி வழங்க கோரி கோரிக்கை மனு முன் வைத்தனர்.
- 12 ஆண்டுக்கு பின் முழு பட்ஜெட் தாக்கல் செய்த முதல்-அமைச்சருக்கு பாராட்டுக்கள். வெறும் இலவச அறிவிப்புகளால் மாநிலத்தை வழிநடத்தி செல்ல இயலாது.
- பொதுமக்கள் அளிக்கும் மனு மீது 15 நாட்களுக்குள் பதில் அளிக்க நடவடிக்கை தேவை.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-
12 ஆண்டுக்கு பின் முழு பட்ஜெட் தாக்கல் செய்த முதல்-அமைச்சருக்கு பாராட்டுக்கள். வெறும் இலவச அறிவிப்புகளால் மாநிலத்தை வழிநடத்தி செல்ல இயலாது.
இந்த பட்ஜெட் வரியில்லா பட்ஜெட் என கூறினாலும், மின்சார வரி , மதுபான வரி, வீட்டு வரி என மறைமுக வரி விதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. புதுவை மாநிலம் வாங்கிய ரூ.10 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ய ஏன் மறுக்கிறது?
பொதுமக்கள் அளிக்கும் மனு மீது 15 நாட்களுக்குள் பதில் அளிக்க நடவடிக்கை தேவை. இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வழி காணவேண்டும். போக்குவரத்து முனையத்தில் அரசு கையகப்படுத்திய 56 ஏக்கர் நிலத்தில் உடனடியாக மென் பொருள் பூங்கா அமைத்து இளைஞர் சக்தியினை பயன்படுத்தி மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
1990-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ் வளர்ச்சித்துறை போல புதுவையிலும் தமிழ்வளர்ச்சித் துறை உருவாக்க வேண்டும். புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்க நடந்த முயற்சியினை தடுத்தவர் கருணாநிதி. அவருக்கு கலை பண்பாட்டுத்துறை மூலம் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல் இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த சுகுமார், வெங்கடேசன் நினைவினைப் போற்றும் வகையில் அரசு கட்டிடங்களுக்கு பெயர் வைக்க வேண்டும். மொத்தத்தில் இது மக்களுக்கு வரியில்லா பட்ஜெட் இல்லை, சரியில்லா பட்ஜெட்டாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கவர்னர் உரை உண்மையில் இந்த மாநிலத்திற்கு உகந்ததா? கவர்னரே வேண்டாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை.
- புதுவைசிவம், தமிழ்ஒளி ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களை புனரமைக்கும் திட்டம் ஏதும் இல்லை.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதம் நடந்தது. இதில் தி.மு.க., எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-
கவர்னர் உரை உண்மையில் இந்த மாநிலத்திற்கு உகந்ததா? கவர்னரே வேண்டாம் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. இந்திய விடுதலை வீரர்களின் விடுதலை வேட்கைக்கு அடைக்கலம் கொடுத்த மண் புதுவை. 8 மணி நேர வேலையினை ஆசிய கண்டத்திற்கு வாங்கிக்கொடுத்த மண்.
தற்போது மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னரின் அதிகாரத்திற்கு கீழ்படிந்து நடக்கும் நிலைமையில் இருக்கிறது. இதற்காகவா நாம் பிரெஞ்சு தேசத்திலிருந்து விடுதலை அடைந்தோம் என எண்ணிப்பார்க்க வேண்டும். கவர்னர் உரை மாநிலத்தில் ஆற்றிய பணிகள் 50 சதவீதம், கொள்கை விளக்கம் 50 சதவீதம் இருக்க வேண்டும்.
இந்த உரை இந்த மாநிலத்தின் துறைகளின் செயல்களை விளக்கும் உரையாக இருக்கிறதே தவிர மக்கள் நலனை சார்ந்த உரையாக இல்லை. எந்த முன்னறிவிப்பும் இல்லாத ஒரு உரை.
நிதி மேலாண்மை குறித்து உரையில் குறிப் பிட்டுள்ளார். மத்திய அரசு கொடுத்து வந்த ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை தொடர்ந்து அளிக்கப் பட்டதா என்று குறிப்பி டவில்லை.
கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு முன்வைத்த ரூ.3 ஆயிரத்து 400 கோடி குறித்து ஒரு வார்த்தையும் இல்லை.
உள்நாட்டு உற்பத்தியிலும் தனிநபர் வருமானத்திலும் குறைவாக உள்ள மாநிலங்களான கோவா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம்,போன்றவை மாநில அந்தஸ்து தகுதியோடு உள்ளது. ஆனால் நமக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? குறைந்தபட்சம் நிதிக்கமிஷனில் கூட நம்மை சேர்க்கவில்லை.
இதுதான் மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர் நம்மை வழிநடத்தும் முறையா? தமிழகம் போல புதுவை மண்ணின் புகழ் பெற்ற கவிஞர்கள் பாவேந்தர் , புதுவைசிவம், தமிழ்ஒளி ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களை புனரமைக்கும் திட்டம் ஏதும் இல்லை.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் வாங்கிய காப்பீடு கார்டுக்கு மரியாதையே இல்லை. மின்துறை தனியார் மயம் ஆகாது என கவர்னர் குறிப்பிடாதது ஏமாற்றமளிக்கிறது.
தொழில் முனைவோர் மாநாட்டில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வந்தன? எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன? எத்தனை 1000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது? என எந்த விவரமும் உரையில் இடம் பெறவில்லை.
புதுவை நகராட்சியினை மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கான முடிவு இந்த உரையில் இல்லை. உழவர்கரை தாலுகாவை இண்டாகப் பிரித்து புதிய தாலுக்கா உருவாக்கும் அறிவிப்பாவது இடம் பெற வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் கொள்கை முடிவினை எடுக்க கவர்னர் முயற்சிக்கவில்லை. மொத்தத்தில் கவர்னர் அரசின் துணை இல்லாததால் சிறக்க வில்லை. உரையில் பாரதியார், பாரதிதாசனின் தமிழோசை இருக்கிறது, ஆனால் மக்களுக்கு நன்மைதான் இசைக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- சாலைகளை சீரமைக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் ஒதுக்கப்பட்டது.
- ஊழியர்களிடம் சாலை அமைக்கும் பணியை விரைவாக முடித்து தரும் படி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 1-வது தெரு மற்றும் அசோகன் வீதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தன.
இந்த சாலைகளை சீரமைக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி மூலம் சைடு வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்ட நிலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
இப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பார்வை யிட்டார். மேலும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் சாலை அமைக்கும் பணியை விரைவாக முடித்து தரும் படி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முக சுந்தரம், தி.மு.க. கிளை செயலாளர்கள் செல்வம் காளப்பன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மீனவரணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி மற்றும் பொது மக்கள் உடனிருந்தனர்.
- கொசு ஒழிப்புத்துறை சார்பில் வாகனம் மூலம் கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.
- தி.மு.க.நிர்வாகிகள் ரகுமான், மோரீஸ் மற்றும் அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி குட்பட்ட வாணரப்பேட்டை, தாவீது பேட், எல்லையம்மன் தோப்பு, காளியம்மன் தோப்பு மற்றும் டாக்டர் தோட்டம் ஆகிய பகுதிகளில் கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்புத்துறை சார்பில் வாகனம் மூலம் கொசுமருந்து அடிக்கும் பணி நடந்தது.
இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், கிளைச்செயலா ளர்கள் சந்துரு, மணி, காலப்பன், லாரன்ஸ் மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் ரகுமான், மோரீஸ் மற்றும் அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.
- புதுவையில் கடந்த சில நாட்களாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- அரசு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு வீடாக சென்று தொகுதி முழுவதும் பொதுமக்கள் நலம் காக்க நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணிநடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் அதிகளவில் மக்கள் பாதிக்க ப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்க உப்பளம் தொகுதி தி.மு.க சார்பில், தொகுதியில் உள்ள 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணியினை தொகுதி எம்.எல்.ஏ.வும் தி.மு.க. துணை அமைப்பாளருமான அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார்.
உப்பளம் தொகுதியில் அரசு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு வீடாக சென்று தொகுதி முழுவதும் பொதுமக்கள் நலம் காக்க நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணிநடை பெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.