என் மலர்
புதுச்சேரி

தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி ஆய்வு மேற்கொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்த காட்சி.
கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
- புதுவையில் பருவ மழையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயார் நிலையில் உள்ளார்களா? அவர்களுக்கு அடிப்படை தேவை ஏதேனும் தேவைப்படுகின்றதா?
- அப்பொழுது சாய்ந்த மரங்களை அவர் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் கொண்டு அப்புறப்படுத்தினார்.
புதுச்சேரி:
புதுவையில் பருவ மழையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயார் நிலையில் உள்ளார்களா? அவர்களுக்கு அடிப்படை தேவை ஏதேனும் தேவைப்படுகின்றதா? என்று புதுவை மக்களை நேரடியாக தொடர்பு கொண்டு தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி ஆய்வு மேற்கொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார்.
உப்பளம் தொகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறதா! மரம் எங்காவது சாய்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறதா! என்று கள நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தார். அப்பொழுது சாய்ந்த மரங்களை அவர் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் கொண்டு அப்புறப்படுத்தினார்.
மேலும் இத்தொடர் மழை பொழிவு நேரங்களில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை , சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறை ஆகிய அதிகாரிகள் மழைக்காலங்களில் மக்களுக்கு பாதுகாப்பு அளித்து துரிதமாகவும், போர்க்கால அடிப்படை யிலும் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.
இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் காலப்பன் மற்றும் ராகேஷ் கவுளதம், ஹரிகிருஷ்ணன், செழியன், பாலாஜி, முத்து, மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.






