என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பள்ளி நுழைவு வாயில்களில் இரும்பு பாலம்-அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆலோசனை
    X

    அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்திய காட்சி.

    பள்ளி நுழைவு வாயில்களில் இரும்பு பாலம்-அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆலோசனை

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் மதில் சுவரை ஒட்டி அமைந்துள்ள கழிவுநீர் சாக்கடை அம்பேத்கர் சாலை மட்டத்தை விட உயரமாக அமைந்துள்ளது.
    • மேலும் இதனால் வாக னங்கள் நிறுத்துவதற்கும் வாகன நெரிசல் குறைந்து போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதற்கும் உதவியாக இருக்கும்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் மதில் சுவரை ஒட்டி அமைந்துள்ள கழிவுநீர் சாக்கடை அம்பேத்கர் சாலை மட்டத்தை விட உயரமாக அமைந்துள்ளது.

    எனவே கழிவுநீர் சாக்கடையை சீரமைத்து சாலை மட்டத்திற்கு அமைத்து கொடுக்கும்படி பெத்தி செமினர் முதல்வர் பஸ்கல் ராஜ் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் மனு அளித்தார்.

    அதனைத் தொடர்ந்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் பார்த்தசாரதி, உதவி பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் பன்னீர் மற்றும் இளநிலை பொறியாளர் வேல்முருகன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    மேலும் இதனால் வாக னங்கள் நிறுத்துவதற்கும் வாகன நெரிசல் குறைந்து போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதற்கும் உதவியாக இருக்கும்.

    எனவே உடனடி நடவடிக்கை எடுத்து சாக்கடையை சீரமைத்து தருமாறு எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளை வைத்துக்கொண்டு பஸ்கல் ராஜியிடம் செல்போனில் பேசி இதற்கான தீர்வு காணப்பட்டது.

    அதாவது பள்ளியின் இரு நுழைவு வாயில்களிலும் இரும்பு பாலம் அமைத்து போக்குவரத்து தடையின்றி இயங்கிட பள்ளி நிர்வாகமே செலவிட ஒப்புக்கொண்டது. இதில் அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவர் அணி விநாயகம், கிளைச் செயலாளர்கள் செல்வம், காலப்பன் மற்றும் ராகேஷ் கவுதமன், லாரன்ஸ், ரகுமான், மதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×