என் மலர்
புதுச்சேரி

வடிகால் அமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
வடிகால் அமைக்கும் பணி-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாக்கீரப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ப-வடிவ வாய்க்கால் மழைக்காலங்களில் தொட ர்ச்சியாக அடைப்புகள் ஏற்பட்டு அங்குள்ள வீடுகளில் அடிக்கடி தண்ணீர் நிரம்பி விடும்.
- ரூ.10 லட்சம் செலவில் ப-வடிவ வாய்க்கால் அமைப்பதற்கான பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாக்கீரப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ப-வடிவ வாய்க்கால் மழைக்காலங்களில் தொட ர்ச்சியாக அடைப்புகள் ஏற்பட்டு அங்குள்ள வீடுகளில் அடிக்கடி தண்ணீர் நிரம்பி விடும்.
இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் சட்டமன்ற நிதியின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் ப-வடிவ வாய்க்கால் அமைப்பதற்கான பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் நகராட்சி ஆணையர் சிவக்குமார், நகராட்சி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், தி.மு.க. பிரமுகர் நோயல், கிளை செயலாளர் மணிகண்டன், மணிமாறன், காலப்பன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






