என் மலர்
புதுச்சேரி

வாய்க்கால் அடைப்புகளை கென்னடி எம்.எல்.ஏ. சரி செய்த காட்சி.
கொட்டும் மழையில் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
- உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வீரவள்ளி, பெரியபள்ளி ஆகிய இடங்களில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கொட்டும் மழையிலும் ஆய்வு மேற்கொண்டார்.
- மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி அனைத்து வாய்க்கால்களையும் சீர் செய்து தண்ணீர் தேங்காமல் இருக்கும்படி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.அறிவுறுத்தினார்.
புதுச்சேரி
புதுவையில் கனமழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் நீர் தேங்கியது.
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வீரவள்ளி, பெரியபள்ளி ஆகிய இடங்களில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கொட்டும் மழையிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அடைக்கப்பட்டு இருந்த வாய்க்கால்களை தி.மு.க.வினரின் உதவியுடன் சுத்தம் செய்தார்.
அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் உடனிருந்தனர்.
அதேபோல், குபேர் மன்றம் எதிரேவுள்ள வய்க்கால் குப்பைகளால் அடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், இதனை சரிசெய்து கொடுக்கும்படி, சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் கென்னடி எம்.எல்.ஏ. முறையிட்டார்.
மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி அனைத்து வாய்க்கால்களையும் சீர் செய்து தண்ணீர் தேங்காமல் இருக்கும்படி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.அறிவுறுத்தினார்.
3நாட்களுக்குள் அனைத்தையும் சரி செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அப்போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, தொழில்நுட்ப அணி சுகுமார், கிளை செயலாளர் அசோக், ரகுமான், பாரதி வீதி ராஜா சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






