என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நீச்சல் தொட்டி போல் காட்சி அளிக்கும் கழிவுநீர்-கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.

    நீச்சல் தொட்டி போல் காட்சி அளிக்கும் கழிவுநீர்-கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

    • உப்பளம் தொகுதி திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் பாதாள வடிக்கால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து நீச்சல் குளம் போல் காட்சியளிக்கும் கழிவு நீரில் அப்பகுதி குழந்தைகள் குளித்து வரும் சுகாதார குறைவு ஏற்பட்டது.
    • பாதாள வடிகால் மாதா கோவிலில் இருந்து தெப்பக்குளத்தில் இணைகிறது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் பாதாள வடிக்கால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து நீச்சல் குளம் போல் காட்சியளிக்கும் கழிவு நீரில் அப்பகுதி குழந்தைகள் குளித்து வரும் சுகாதார குறைவு ஏற்பட்டது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு அவர் நேரில் சென்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வைத்தியநாதனிடம் தெரிவித்துவிட்டு இளநிலை பொறியாளருடன் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்.

    பாதாள வடிகால் மாதா கோவிலில் இருந்து தெப்பக்குளத்தில் இணைகிறது. அதனை அதற்கு மாறாக மாதா கோவிலில் இருந்து லெசார் கோவிலில் இணைத்து விட்டால் வடிகால் மழை நீரில் கலந்து தேங்கி நிற்காது என்று ஆய்வின் போது தெரிந்து கொண்டனர்.

    இப்பணியை விரைவாக முடிக்குமாறு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை அதி காரியிடம் அறிவுறுத்தினார்.

    மேலும் ஸ்மார்ட் சிட்டி மூலம் எல்-வடிவ வடிகாலை அப்பகுதியில் அமைத்து கொடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

    அப்பணி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும். என்று தெரிவித்தார் இது குறித்து உதவி பொறியாளர் பிரபாகரனுடன் ஆலோ சனை மேற்கொண்டார்.

    Next Story
    ×