என் மலர்

    புதுச்சேரி

    பாதாள வடிகால் பணியை-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    பாதாள வடிகால் பணியை-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    பாதாள வடிகால் பணியை-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உப்பளம் தொகுதி அகத்தியர் நகர் விரிவு திருவள்ளுவர் வீதியில் பல ஆண்டுகளாக அங்குள்ள குடியிருப்புகளுக்கு பாதாள வடிகால் இல்லாமல் இருந்தது.
    • இதையடுத்து, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளரிடம், எம்.எல்.ஏ. தெரிவித்து, பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி அகத்தியர் நகர் விரிவு திருவள்ளுவர் வீதியில் பல ஆண்டுகளாக அங்குள்ள குடியிருப்புகளுக்கு பாதாள வடிகால் இல்லாமல் இருந்தது. இதனை அப்பகுதி மக்கள், ஒப்பந்ததாரர் சிவா, உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் தெரிவித்து, பாதாள வடிகால் அமைத்து தர கோரினர்.

    இதையடுத்து, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளரிடம், எம்.எல்.ஏ. தெரிவித்து, பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தார். மேலும், ெதாடர்ச்சியாக பொதுப் பணித்துறையை அணுகி, பாதாள வடிகால் அமைத்துத்தர வலியுறுத்தினார்.

    எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று, பாதாள வடிகால் அமைப்பதற்கான பூமிபூஜை திருவள்ளுவர் வீதியில் நடந்தது. இப்பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் பிரிவு துணை அமைப்பாளர் தங்கவேல், மாநில இளைஞரணி, துணை அமைப்பாளர் ராஜி, மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம், காலப்பன் மற்றும் ராகேஷ், கவுதமன், பீட்டர், பாலாஜி, மோரிஸ், லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×