என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defamatory posters"

    • அனைத்து கட்சியினர் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு
    • சுவரொட்டிகள் யார் ஒட்டியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூர் கோவில் திருவிழா நடத்துவதில் 2 குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பதட்டமான சூழல் இருந்து வந்ததால் பாகூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து சுவரொட்டிகள் யார் ஒட்டியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அனைத்து கட்சிகள் சார்பில் நோட்டீஸ் ஒட்டியவர்கள் யார் என உடனடியாக கண்டுபிடிக்க கோரியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சி சார்பில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

    இதில் பாகூர் தொகுதி தி.மு.க. செயலாளர் பாண்டு அரிகிருஷ்ணன், கிளை செயலாளர் பாவாடை, காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் கோபு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கலியமூர்த்தி, தாமோதரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன் மற்றும் மணிவண்ணன், பொன்னம்மாள், மக்கள் இயக்கம் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×