என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் கம்பெனி சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    தனியார் கம்பெனி சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை

    • மின்விசிறியில் சிபச்சரன் பால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சிபச்சரன் பால் (வயது47). இவர் நெட்டப்பாக்கம் அருகே மடுகரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். தொழிற்சாலையில் ஊழியர் குடியிருப்பில் தங்கியிருந்து வந்த இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    அவர்கள் ஒடிசாவில் வசித்து வருகிறார்கள். கடந்த மாதம் சிபச்சரன் பால் தனது மனைவி மற்றும் குழந்தைளை பார்க்க சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பியது முதல் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார். பணி முடிந்து சிபச்சரன் பால் தான் தங்கியிருந்த குடியிருப்புக்கு திரும்பினார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்ப டவில்லை. சந்தேகமடைந்த அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது மின்விசிறியில் சிபச்சரன் பால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி அம்புஜம்(64). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கராசு இறந்து விட்டார். இதனால் அம்புஜம் பிள்ளையார் குப்பத்தில் வசிக்கும் தனது இளையமகள் அங்காளபரமேஸ்வரி வீட்டில் தங்கியிருந்து வந்தார்.

    இதற்கிடையே கணவர் இறந்து போனது முதல் அம்புஜம் விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அம்புஜம் நேற்று சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு சென்று அங்குள்ள பாழடைந்த வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×