என் மலர்
புதுச்சேரி
- மாணவர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை ஆளும் என்.ஆர்-பா.ஜனதா கூட்டணி அரசு உருவாக்கியுள்ளது.
- மாணவர் காங்கிரஸ் தலைவர் டாக்டர்.ஹர்ஷவர்தன் குற்றச்சாட்டு
புதுச்சேரி:
புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டாக்டர். ஹர்ஷவர்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கி வரும் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் ஆண்டுதோறும் முதலாம் ஆண்டு 180 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
ஆண்டுதோறும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் 131 பேருக்கு இடம் கிடைத்து மருத்துவம் படிக்கின்றனர். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்து இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மருத்துவக் கல்வி கனவோடு வாழும் புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக இது அமைந்துள்ளது. மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வை மோடி அரசு கொண்டு வந்ததால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு சிதைக்கப்பட்டது. பல நெருக்கடிகளையும் தாண்டி நீட் தேர்வுக்காக தயார் செய்து புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மாணவர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை ஆளும் என்.ஆர்-பாஜக கூட்டணி அரசு உருவாக்கியுள்ளது.
இதற்கு கவர்னரும் , முதல்- அமைச்சரும் தான் பொறுப்பு. ஒரு அரசு மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு வசதியை கூட முறையாக செய்ய முடியாத கையாலாகாத அரசாக உள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை தடைக்கு கல்லூரி முதல்வர் காரணங்களை கூறியிருந்தாலும் இது மருத்துவ கனவில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் வகையில் உள்ளது.
மாணவர்களின் எதிர்கால நலனை அக்கறை கொண்டு மாணவர் காங்கிரஸ் சார்பில் என்.ஆர்-பா.ஜனதா கூட்டணி அரசை கண்டித்து விரைவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், புதுச்சேரி மாநிலத்தின் தனித்துவமான தன்மானத்தை காக்க இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான அனுமதியை பெற எல்லா வகையிலும் முயற்சி வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு பயிற்சி
- 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
புதுச்சேரி:
புதுவை வேளாண் துறையின் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மைய்யம், ஆத்மா,காமராஜர் அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து 'விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு செயல்விளக்கம்' குறித்த ஒரு நாள் பயிற்சி முகாமை பெருந்தலைவர் காமராஜர் அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.
வில்லியனூர் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வேளாண் அறிவியல் நிலைய பூச்சிகள் துறை தொழில்நுட்ப வல்லுனர் விஜயகுமார் நோக்க உரையாற்றினார்.
டிரோன் உரிமையாளர் கார்த்திகேயன், ட்ரோன் மூலம் விதை விதைப்பது, நானோ யூரியா உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் தெளிப்பதை பற்றி செயல் விளக்கம் செய்து காட்டினர். நிகழ்ச்சியில் புதுவை பகுதியை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் வில்லியனூர், தமிழ்ச் செல்வன், ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் செய்திருந்தனர்.
- வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி
- ஒரு வழி சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
புதுச்சேரி:
சென்னை - நாகப் பட்டினம், விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலை பணிகள் கடந்த ஒரு ஆண்டு காலமாக முழு வீச்சில் நடந்து வருகின்றது.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.என் குப்பத்தி லிருந்து கெங்கராம் பாளையம் வரை 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது.
சாலை விரிவாக்க பணியின் போது புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கட்டிடங்கள், மரங்கள், பெயர் பலகைகள் அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.
இதனால் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்களில் செல்லும் பயணிகள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் தாங்கள் இறங்க வேண்டிய இடமும், செல்ல வேண்டிய இடமும் தெரியாமல் வேறு ஊருக்கு சென்று யாரிடமாவது முகவரி கேட்டு திரும்பி வரும் சூழ்நிலை உள்ளது. தாங்கள் போக வேண்டிய ஊர்களை தாண்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் திரும்பி வரும் அவலநிலை உள்ளது.
பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க எம்.என் குப்பத்திலிருந்து வளவனூர் வரை புதிதாக பெயர் பலகைகளை வைக்க வேண்டும் அல்லது தற்காலிக பெயர் பலகையில் வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பணிகளால் முறையான சாலை வசதி இல்லாததால் ஒரு வழி சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
பஸ் ஸ்டாப் இல்லாத இடங்களில் பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். மேலும் மதகடிப்பட்டு வரை செல்லும் தனியார் பஸ்கள் நேரமின்மை காரணமாக கண்டமங்கலம், அரியூர் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு திரும்பி புதுச்சேரிக்கு சென்று விடுகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் பயணிகள் தங்கள் இடத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின்விளக்குகள் அகற்றப்பட்டு புதிய மின் விளக்குகள் பொருத்தி வருவதால் ஒரு சில இடங்கள் இருட்டாக உள்ளது.
கண்டமங்கலம் ெரயில்வே கேட் பகுதியிலும் திருபுவனை ஏரிக்கரை பனைமரங்கள் எதிரில் உள்ள சாலையிலும் ஒரு வழி சாலையாக கடந்த 5 மாதங்களாக இருந்து வருகின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகின்றது.
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
- இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
- கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் மற்றும் அறங்காவல் வாரிய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை காந்திமதி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கி ஜூன் 9-ந் தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல் நாளான இன்று கொடியேற்றம் நடந்தது. இதனை தொடர்து நாள்தோறும் காலை 10:30 மணிக்கு திருமணஞ்சனமும், இரவு 7.30 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது. 31-ந் தேதி மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், ஜூன் 2-ந் தேதி வெண்ணை தாலி திருக்கோலமும் நடைபெறும்
மறுநாள் 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 4-ந் தேதி காலை 10 மணிக்கு 108 கலச திருமஞ்சனமும், மறுநாள் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது. 9-ந் தேதி மாலை 5 மணிக்கு பானக பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் மற்றும் அறங்காவல் வாரிய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- வருகிற 31-ம் தேதி சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், விழா குழுவினரும்,கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
அதனை முன்னிட்டு அங்குள்ள மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.வருகிற 31-ம் தேதி சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 2-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா நடைபெறுகிறது. முன்னதாக தேரோட்டம் நடைபெறுகிறது.
மறு நாள் ஜூன் 3-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், விழா குழுவினரும்,கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கல்லறைக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- குடும்பத்தில் இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்வதற்கு அவர்களுக்கென்று தனியாக எந்த இடமும் சுற்றுவட்டார பகுதிகளில் இல்லை.
புதுச்சேரி:
உழவர்கரை, மூலக்குளம், எம்.ஜி.ஆர் நகர், பிச்சாவீராம்பட்டு, தக்ககுட்டை, அரும்பார்த்தபுரம், ஒதியம்பட்டு, ஜெ.ஜெ. நகரை சுற்றியுள்ள இடங்களில் கிறிஸ்தவ சமுதாய பொதுமக்கள் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்வதற்கு அவர்களுக்கென்று தனியாக எந்த இடமும் சுற்றுவட்டார பகுதிகளில் இல்லை.
தக்ககுட்டை என்கிற இடத்திற்கு பின்புறம் ஒரு இடம் உள்ளதை அறிந்த அவர்கள் இது குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் அவர்கள் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கல்லறைக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரையை மனுவின் வாயிலாக கோரிக்கை வைத்தார்.
அவருடன் சிவசங்கர் எம்.எல்.ஏ, அந்தோணி தாஸ், ஜோசப், எட்வின், மணிகண்டன், டேவிட், செல்வகுமார் ஆகியோர் சென்றனர்.
- ஓய்வூதியம் கிடைக்க ரூ.30 கோடியே 95 லட்சத்து 58 ஆயிரம் செலவின ஒப்புதல் அரசு வழங்கியுள்ளது.
- பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் பணிணை தொடங்கி வைத்து, காசோலையை அதிகாரிகளிடம் வழங்கினார்.
புதுச்சேரி:
புதிதாக விண்ணப்பித்துள்ள மீனவ முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
மீனவர் நலத்துறையில் ஓய்வூதியம் கேட்டு புதிதாக விண்ணப்பித்த 1,0 96 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் பணிணை தொடங்கி வைத்து, காசோலையை அதிகாரிகளிடம் வழங்கினார்.
இந்த ஓய்வூதிய தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,086 மீனவ முதியோர் உட்பட மொத்தம் 9 ஆயிரத்து 202 பேருக்கு தடையின்றி ஓராண்டு ஓய்வூதியம் கிடைக்க ரூ.30 கோடியே 95 லட்சத்து 58 ஆயிரம் செலவின ஒப்புதல் அரசு வழங்கியுள்ளது.
இதனால் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் தடையின்றி கிடைக்கும். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், பாஸ்கர், செந்தில்குமார், பிரகாஷ்குமார், மீன்வளத்துறை செயலர் வல்லவன், இயக்குனர் பாலாஜி, இணை இயக்குனர் தெய்வசிகாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விதி களை மீறி செயல்படும் பார்கள் மீது உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.
- தனிப்படையினர் தினமும் ஆய்வு செய்ய வேண்டும் நள்ளிரவுக்கு மேல் செயல்படுகிறதா?
புதுச்சேரி,மே.26-
புதுவை கலால்துறை துணை ஆணையர் குமரன், துறை தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவையில் ரெஸ்டோ பார் எனப்படும் நடன பார் மற்றும் பப் ஆகியவை நள்ளிரவு 12 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. ஒரு சில பார்கள் நள்ளிரவு 12 மணிக்கு பிறகும் செயல்படு வதாக புகார்கள் வருகின்றன. இதை தனிப்படையினர் தினமும் ஆய்வு செய்ய வேண்டும் நள்ளிரவுக்கு மேல் செயல்படுகிறதா? என சோதனை செய்ய வேண்டும்.
இதுகுறித்து தனிப் படைக்கு பொறுப்பு வகிக்கும் அதகாரி ஆய்வு குறித்த பட்டியலை பராமரிக்க வேண்டும். விதி களை மீறி செயல்படும் பார்கள் மீது உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ராம் பரதேசி சாமிகள், தக்ஷிணாமூர்த்தி சாமிகள்,படேசாகிப் கண்டமங்கலம், குருசாமி அம்மையார் ஆகிய 21 சித்தர்களை தரிசித்தனர்.
- மார்க்கண்டேயர் திருமடம் ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
புதுச்சேரி:
புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்கண்டேயர் திரு மடம் சார்பாக நேற்று புதுவை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சாமி தலைமையில் 6-ஆம் ஆண்டாக புதுவை சித்தருடன் ஒரு நாள் என்ற ஊர்வலம் நடந்தது. இதில் புதுவை, சென்னை, திண்டிவனம், விழுப்புரம், சேலம், செஞ்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஆந்திரா, திண்டுக்கல், திருநெல்வேலி ,கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், மற்றும் ஆந்திரா பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு புதுவையில் ஜீவசமாதி அடைந்த தொல்லைக்காது சித்தர், நாகலிங்க சாமிகள், குரு அக்கா சாமிகள், வேதாந்த சுவாமிகள், மண் உருட்டி சாமிகள்,
குரு சித்தானந்தர் சாமிகள், பெரியவருக்கு பெரியவர், கணபதி சுவாமிகள், கம்பளி ஞான தேசிக சாமிகள், சிவ சடையப்பர், நாகராஜ் பாகவதர், கதிர்வேல் சாமிகள், சக்திவேல் பரமானந்தர்,மவுலா சாகிப் முல்லா வீதி, மகான்வண்ணார பரதேசி சுவாமிகள், தேங்காய் சுவாமிகள், ராம் பரதேசி சாமிகள், தக்ஷிணாமூர்த்தி சாமிகள்,படேசாகிப் கண்டமங்கலம், குருசாமி அம்மையார் ஆகிய 21 சித்தர்களை தரிசித்தனர்,
நிகழ்ச்சியில் 108 சிவனடியார்களுக்கு சிறந்த சைவ நெறியாளர்கள் விருது வழங்கப்பட்டது.
புதுவை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள், குரு மகா சன்னிதானம், வடபாதி ஆதீனம், கலியபெருமாள், கூட்டேரிப்பட்டு மனோகர், மெள சத்தியசுரூபன் சித்தர், இயற்கை ஆசிரமம் மங்களநாத குருக்கள், போர்.முனைவர் தி.மகா லட்சுமி நிறுவனர் திருமூலர் ஆகியோர் பங்கேற்றனர்.
மார்க்கண்டேயர் திருமடம் ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
- வையாபுரி மணிகண்டன் ஆவேசம்
- ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை அவர் குழிதோண்டி புதைத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநில இளைஞர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் மிகப்பெரும் துரோகத்தை முதல்-அமைச்சர் செய்துள்ளார். ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை அவர் குழிதோண்டி புதைத்துள்ளார்.
புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் 8 ஆபரேஷன் தியேட்டரில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இங்கு பல துறைகளில் டாக்டர்கள் இல்லை. பணிபுரியும் டாக்டர்களும் பணி நேரத்தில் இருப்பதில்லை. மாணவர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். பல்வேறு அடிப்படை யான, அத்தியா வசியமான தேவை களைக்கூட கல்லூரி நிர்வாகம் பூர்த்தி செய்ய வில்லை. இதுகுறித்து மருத்துவ ஆணையத்துக்கு பல புகார்கள் சென்றுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிர்வாக சீர்கேடுகளை களையும்படி புதுவை அரசுக்கு இந்திய மருத்துவ ஆணையம் 6 மாதம் முன்பே எச்சரித்துள்ளது. ஆனால் சுகாதாரதுறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேண்டுமென்றே, திட்டமிட்டு சதி செய்து அரசு மருத்துவக் கல்லூரி யின் சீர்கேடுகளை களைய வில்லை.
அதேநேரத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகள் கூடுதலாக 200 மருத்துவ இடங்களை பெற்றுள்ளன. புதுவை அரசு மருத்துவக்கல்லூரியை மூட வேண்டும், தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என அரசே திட்டமிட்டு சதி செய்துள்ளது. இந்த சதியில் மருத்துவக் கல்லூரி அதிகாரி களுக்கும் தொடர்புள்ளது. புதுவை அரசின் 180 மருத்துவ இடங்களை ரத்து செய்ய பல கோடி கைமாறியுள்ளதாக மருத்து வத்துறை அதிகாரி களே குற்றம்சாட்டுகின்றனர். இது மருத்துவம் படிக்க வேண்டும் என கனவோடு படித்த புதுவை மாநில ஏழை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரும் துரோகம்.
கல்லூரியின் அங்கீகாரம் ரத்தானதால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மட்டுமின்றி, ஏற்கனவே மருத்துவம் படித்து வரும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறி யாகியுள்ளது. எனவே உடனடியாக இவ்விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும்.
பிரதமரின் வாக்குறுதியை நம்பியே புதுவை மாநில மக்கள் ரங்கசாமிக்கு வாக்களித்தனர். அரசு மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு செயல்பட, மருத்துவ மாணவர்களுக்கு 180 இடங்கள் கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். .
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்வித்துறை அறிவிப்பு
- அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கிய பின் அரசுஉதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும்.
புதுச்சேரி:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.
வரும் 17-ந் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் தாங்கள் சேர விரும்பும் பள்ளிகளை நேரில் அணுகி பெற்று, பூர்த்தி செய்து வரும் 9-ந் தேதி மாலை 4 மணிக்குள்விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
விண்ணப்பங்கள் பெற்ற பின் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 12-ந் தேதி காலை 9 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படும். அன்றே நேர்காணல் தேதி, நேரம் அறிவிக்கப்படும். மறுநாள் 13-ந் தேதி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும்.
ஒவ்வொரு நாளின் இறுதியில் மீதமுள்ள இடங்கள் பட்டியல் வெளியிடப்படும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரவரிசை 14-ந் தேதி வெளியிடப்பட்டு நேர்காணல் தேதி அறிவிக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கிய பின் அரசுஉதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும்.
தனியார் பள்ளி மாணவர்களின் தரவரிசை பட்டியல் 16-ந் தேதி வெளியிடப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடம் வழங்கிய பின் மீதமுள்ள இடங்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும். 17-ந் தேதி மதிப்பெண் இடஒதுக்கீடு முறையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும்.
இந்த தகவலை கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார். மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிகளில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த குழுவை அணுகி சந்தேகங்களை தீர்க்கலாம்.
பிளஸ்-1 வகுப்பில் சேர மதிப்பெண் பட்டியல், மாற்று, குடியுரிமை சான்று, பெற்றோர்களுடன் மாணவர்கள் வர வேண்டும். வகுப்புகள் அடுத்தமாதம் 19-ந் தேதி தொடங்கும்.
- கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் புதிய செயலி, இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
- மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மின் ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களின் சேவைக்காக புதிய செயலி, இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா வம்பாகீரப்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவு கடன் சங்க தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். பதிவாளர் யஷ்வந்தையா விழாவை தொடங்கி வைத்தார். கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் புதிய செயலி, இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை தலைவர் வேல்முருகன், பொருளாளர் குமரன், இயக்குனர்கள் தணிகாசலம், திருமூர்த்தி, முருகன்,பரசுராமன், ராமமோகன், மணிகண்டன் உட்பட மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.






