search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    4 வழி சாலை விரிவாக்க பணியால்  பெயர் பலகைகள் அகற்றம்
    X

    புதுச்சேரி-விழுப்புரம் 4 வழி சாலை பணி நடந்து வரும் காட்சி.

    4 வழி சாலை விரிவாக்க பணியால் பெயர் பலகைகள் அகற்றம்

    • வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி
    • ஒரு வழி சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    புதுச்சேரி:

    சென்னை - நாகப் பட்டினம், விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலை பணிகள் கடந்த ஒரு ஆண்டு காலமாக முழு வீச்சில் நடந்து வருகின்றது.

    புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.என் குப்பத்தி லிருந்து கெங்கராம் பாளையம் வரை 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது.

    சாலை விரிவாக்க பணியின் போது புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கட்டிடங்கள், மரங்கள், பெயர் பலகைகள் அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.

    இதனால் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்களில் செல்லும் பயணிகள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் தாங்கள் இறங்க வேண்டிய இடமும், செல்ல வேண்டிய இடமும் தெரியாமல் வேறு ஊருக்கு சென்று யாரிடமாவது முகவரி கேட்டு திரும்பி வரும் சூழ்நிலை உள்ளது. தாங்கள் போக வேண்டிய ஊர்களை தாண்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் திரும்பி வரும் அவலநிலை உள்ளது.

    பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க எம்.என் குப்பத்திலிருந்து வளவனூர் வரை புதிதாக பெயர் பலகைகளை வைக்க வேண்டும் அல்லது தற்காலிக பெயர் பலகையில் வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பணிகளால் முறையான சாலை வசதி இல்லாததால் ஒரு வழி சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

    பஸ் ஸ்டாப் இல்லாத இடங்களில் பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். மேலும் மதகடிப்பட்டு வரை செல்லும் தனியார் பஸ்கள் நேரமின்மை காரணமாக கண்டமங்கலம், அரியூர் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு திரும்பி புதுச்சேரிக்கு சென்று விடுகின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் பயணிகள் தங்கள் இடத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின்விளக்குகள் அகற்றப்பட்டு புதிய மின் விளக்குகள் பொருத்தி வருவதால் ஒரு சில இடங்கள் இருட்டாக உள்ளது.

    கண்டமங்கலம் ெரயில்வே கேட் பகுதியிலும் திருபுவனை ஏரிக்கரை பனைமரங்கள் எதிரில் உள்ள சாலையிலும் ஒரு வழி சாலையாக கடந்த 5 மாதங்களாக இருந்து வருகின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகின்றது.

    இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×