என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை எஸ்.ஏ.இ. இந்தியா உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள்.
    • துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன்,மற்றும் பொருளாளர் டி.ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.ஏ.இ இந்தியா அமைப்புடன் காலேஜியேட் கிளப் திறப்பு விழா நடைப்பெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்.எம்.தனசேகரன், துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன்,மற்றும் பொருளாளர் டி.ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அனைத்து துறைத்தலை வர்கள், கல்லூரி மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர் எஸ்.அருண்மொழி, கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி எம்.ஜெயக்குமார், கல்லூரி ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆடோ மேஷன் துறை தலைவர் கோ. ரேணுகா தேவி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் எஸ். மலர்க்கண் மற்றும் தலைமை விருந்தினர் ரெனால்ட் நிசான் டெக்கின் துணைத் தலைவர் அனந்த ராமன் பிரகாஷ், கெஸ்ட் ஆஃப் ஹானர் டிசைன் டெஸ்க் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சண்முகம், எஸ்.ஏ.இ. இந்தியா தலைவர் பாஸ்கர சேதுபதி மற்றும் உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    இந்த திறப்பு விழாவின் ஒப்பந்தத்தின்படி மாணவர்களை இன்டெர்ன்ஷிப், இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங், வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை எஸ்.ஏ.இ. இந்தியா உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆடோமேஷன் துறை தலைவர் கோ. ரேணுகா தேவி செய்திருந்தார்.

    • மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் கிரண்குமார் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்.
    • முதலிடமும் மாணவர் பிரகதிஷ் 479 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும் மாணவி நித்தியா 478 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தவளக்குப்பம்,நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாபெரும் சாதனை புரிந்துள்ளனர். பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதவெற்றியை அளித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    இப்பள்ளி மாணவி தாரகப்பிரியா 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் மாணவர் பிரகதிஷ் 479 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும் மாணவி நித்தியா 478 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

    மேலும் 400 மதிப்பெண்க ளுக்கு மேல் 36 மாணவர்கள் பெற்று கிராமப்புற அளவில் மாபெரும் சாதனை படைத்துள்ளனர். தமிழ் பாடத்தில் 28 மாணவர்கள் ஆங்கிலத்தில் 37 மாணவர்கள் கணிதத்தில் 16 மாணவர்கள் அறிவியலில் 18 மாணவர்கள் சமூக அறிவியலில் 24 மாணவர்கள் 90 சதவீதம் மேல் மதிப்பெண்கள் பெற்று பாடவாரியாக முத்திரை பதித்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் கிரண்குமார் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்.

    பள்ளியின் தாளாளர் எழிலரசி கிரண்குமார் சாதனை புரிந்த மாணவர்களுக்கு, இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    கிராமப்புற அளவில் இம்மாபெரும் சாதனை புரிய அயராது உழைத்த மாணவச் செல்வங்களையும் பள்ளியின் ஆசிரிய- ஆசிரியைகளையும் தலைமை ஆசிரியை உமா வாழ்த்தி பாராட்டினார்.

    • இம்மாதிரியான திருமணங்கள் மக்களிடம் ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
    • உலகப் பொதுசமய நிலையில் வள்ளலார் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சுற்றுலாயியல் அறிஞராகத் திகழும் திருவாளர் ச. கண்ணன் மற்றும் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் பேராசிரியரான திருவமை ஆ.நோயலின், இவர்களின் மகன் க. அபிலாசு நெத ர்லாந்து நாட்டில் பணியில் இருக்கிறார் இவர் நைசீரியன் நாட்டைச் சேர்ந்த பாத்திமா அப்பி என்ற பெண்ணை விரும்பி சமயம், சாதி, மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து அன்பினை மட்டுமே மையப்படுத்தி ஒரு பொதுமை உணர்வுடன் உலகப் பொதுசமய நிலையில் வள்ளலார் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.

    அன்பின் வழியில் நின்று அறப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பெரியோர்கள் மற்றும் சன்மார்க்க சங்கத்தினர் முன்னிலையில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் உறுதிமொழி ஏற்று திருமணம் செய்து கொண்டனர்.

    சாதி சமய சடங்குகளை தகர்த்தெறி ந்து அன்பின் வழி நின்று, எந்த உயிரையும் கொல்லாது, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, பசித்தவர்களுக்கு வேறுபாடு கருதாது உணவளித்தல் போன்ற வள்ளலாரின் கோட்பாடுகள் மக்களிடம் நற்புரிதலையும், புதுமையுணர்வையும் ஏற்படுத்திவருகின்றன.

    இம்மாதிரியான திருமணங்கள் மக்களிடம் ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

    இதனை பரவலாகக் கொண்டு செல்வதற்கு இத்திருமணம் நல்லதொரு தொடக்கமாக அமைந்திருக்கிறது என்று திருமண நிகழ்விற்கு வந்தவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • குருவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வீர வீரவணக்கம் செலுத்தினர்.
    • காடுவெட்டி குருவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்தின் முன் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாம.க. கட்சி அலுவலகம் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ரகு என்கிற ராகவேந்திரன் தலைமை தாங்கினார்.

     மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், பா.ம.க. மாவட்ட தலைவர் பாவாடைராயன் ஆகியோர் முன்னிலையில் காடுவெட்டி குருவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்தின் முன் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் குருவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வீர வீரவணக்கம் செலுத்தினர்.

    இதில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வி.சி ஆறுமுகம், பா.ம.க. மாவட்ட துணை தலைவர் கோட்டக்கரை ஏழுமலை, வீரபாண்டி, முன்னாள் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் முத்துக் குமார், பா.ம.க. முன்னாள் ஒன்றிய தலைவர் மணி வண்ணன், வன்னியர் சங்க மாவட்ட துணை தலைவர் சந்திரன்,

    முன்னாள் ஒன்றிய செயலாளர் சவுந்தர், முன்னாள் ஒன்றிய தலைவர் முத்து, வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் கோட்டக்கரை சின்னக் கண்ணு பிரகாஷ், நிர்வாகிகள் சிங்காரவேலு, மூர்த்தி, பற்குணம், பசுமைத்தாயகம் வடிவேல், விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓம்சக்திசேகர் வலியுறுத்தல்
    • சில தாலுகா அலுவலங்களில் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநி லத்தில் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மாணவர்கள் மேற்படிப் பக்கான பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்ப டிப்பில் முக்கி யமானதாக இருப்பிடம், சாதி, வருமானம் ஆகிய சான்றிதழ்கள் இடம் பெறுகின்றன.

     இதை பெற நாள்தோறும் அனைத்து தாலுகா அலுவலகங்களுக்கும், பொதுமக்களும், மாணவர்களும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் சென்று வருகின்றனர். சான்றிதழ்களை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

    ஒரு சில தாலுகா அலுவலங்களில் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லை.

    இதனால் பொது மக்களும், மாணவர்களும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ள தால் தாலுகா அலுவலகங்களில் குடிநீர், மின்வி சிறிகளை சீரமைப்பது, பசுமை பந்தல்களை அமைக்க கவர்னர், முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும்.

    சான்றிதழ்கள் பெற மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அனைத்து தாசில்தார்களுக்கும் கவர்னர், முதல்-அமைச்சர் உடனடி உத்தரவினை பிறப்பித்து சான்றிதழ்கள் விரைவாக வழங்கவும், மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • எரிசாராயம் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பூர்வாங்க விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்தியகம்யூனிட்டு செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-

     மத்திய அரசு கூடுதல் நிதி அளித்திருப்பதாக பா.ஜனதாவினர் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

    10-ம் வகுப்பு தேர்வில் ஏற்கனவே மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை புதுவை பள்ளிகளில் கொண்டுவருவது பா.ஜகவின் அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றும்.

    வழிமுறை ஆசிரியர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு தயாராகாத நிலையில் அதை அமல்படுத்தினால் புதுவை மாணவர்களின் நிலைமை மேலும் கேள்விக்குறியாகும்.

    தமிழகத்தில் எரிசாராயம் குடித்து பலர் இறந்ததற்கு புதுவைதான் காரணம் என கூறப்படுகிறது. எரிசாராயம் கடத்தலின் ஊற்றுக் கண்ணாக புதுவை திகழ்கிறது. எரிசாராயம் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பூர்வாங்க விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சந்தேகப்படும்படியான நபர்களை செல்போனில் படம்பிடிக்க போலீசார் அறிவுறுத்தல்
    • சீனியர் போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் நிலையம் வெளியே வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு பேனரை பார்வையிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த திருக்கனூர் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளான செட்டிப் பட்டை சேர்ந்த இன்ஸ்பெக்டர் சண்முகம் வீடு உள்ளிட்ட ஆண்டியார் பாளையம், வாதானூர், மண்ணாடிப் பட்டு, சந்தை புதுகுப்பம் கிராமங்களில் வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

     தொடர் கொள்ளை சம்பவங்கள் அந்தபகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தியும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசாருக்கு இதுவரையில் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    போலீசார் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போலீஸ் நிலையம் முன்பு விழிப்புண்வு அறிவிப்பு பேனர் வைக்கப் பட்டுள்ளது. சீனியர் ேபாலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, தொடர் திருட்டு சம்பவங்களுகான காரணங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜா ஆகியோரிடம் கேட்டறிந்தார். பின்னர், போலீஸ் நிலையத்தில் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் நிலையம் வெளியே வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு பேனரை பார்வையிட்டார்.

    மேலும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு டைய மர்ம நபர்களை விரைந்து பிடிப்பதற்கான நட வடிக்கையை தீவி ரப்படுத்த உத்தரவிட்டார்.

    • விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்
    • புதுவை பெரிய மார்கெட்டுக்கு செல்லும் சிறு வியாபாரிகள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    புதுச்சேரி:

    போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் அன்பரசன் மனு அளித்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பஸ் நிலையத்திலிருந்து கோரிமேடு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக பத்துக்கண்ணு வரையில் சென்று, மீண்டும் அதே வழியாக பஸ் நிலையத்துக்கு என பல ஆண்டுகளாக இயங்கி வந்த தனியார் பஸ் தற்போது சேதராப்பட்டு வரையில் வந்து அப்படியே திரும்பி புதுவை பஸ் நிலையத்திற்கு சென்று விடுகிறது.

     இதனால் கரசூர், துத்திப்பட்டு, கடப்பேரி க்குப்பம், தொண்டமாநத்தம், ராமநாதபுரம் ஆகிய 5 கிராம மக்கள் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு, அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள், புதுவை பெரிய மார்கெட்டுக்கு செல்லும் சிறு வியாபாரிகள் என அனைவரும் ெபரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் தனியார் பஸ்சை மீண்டும் பத்துகண்ணுவரையில் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பஸ் உரிமையாளர் மறுக்கும் பட்சத்தில் அதன் அனுமதியை (பர்மிட்டை) முடக்கம் செய்து புதுவை அரசின் மூலம் இயக்கப்படும் பி.ஆர்.டி.சி. பஸ்சை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அன்பரசன் கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

    • நேரு எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்
    • புதிய மின்மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்தது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை செங்கேணி அம்மன் நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது

    அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு செங்கேணியம்மன் நகர், ஜே.வி.எஸ் வீதி, சுதேசிமில் வளாகத்தில் உள்ள 2 அடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி மின்துறை மூலம் ரூ.15 லட்சம் செலவில் நடந்தது.

    புதிய மின்மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்தது.

    இதனையடுத்து மின்மாற்றியினை அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி  நடந்தது. நேரு எம்.எல்.ஏ. புதிய மின்மாற்றியின் செயல்பாடு களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மின்துறை இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், மற்றும் மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • வில்லியனூரில் சோக சம்பவம்
    • அதிகமாக மது குடித்து வந்ததால் சுந்தரத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த கணுவாய்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் சுந்தரம்(வயது47). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 6 குழந்தைகள் பிறந்தன.

      ஆனால் உடல்நலக்குறைவால் அந்த குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து போனது. இதனால் சுந்தரம் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த சோகத்தை மறக்க மது பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

    தினமும் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனால் குடும்பத்தை நடத்த மஞ்சுளா வில்லியனூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் சுந்தரத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது.

    இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஏற்கனவே குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் சோகத்தில் இருந்த சுந்தரம் தனது உடல் நிலையும் பாதிக்கப்பட்டதால் விரக்தியில் இருந்து வந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை வழக்கம் போல் மஞ்சுளா ஓட்டலுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    அதன் பின்னர் சுந்தரம் வீட்டில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேசியப் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற வீரர்கள்-வீராங்கனைகளை சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
    • கூடோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அகில இந்திய கூடோ பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான கூடோ போட்டியை மகாராஷ்டிரா மாநிலத்தில் நடத்தியது.

    இந்தப் போட்டியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த கூடோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

     புதுவை மாநிலத்தைச் சேர்ந்த கூடோ வீரர்கள் 20 பேர் கொண்ட அணி புதுவை மாநில கூடோ சங்க செயலாளர் சந்தோஷ் குமார் தலைமையில் மற்றும் மூத்த நிர்வாகிகள் அகில இந்திய குடோ நடுவர்கள் பாலச்சந்தர், செந்தில்குமார் முன்னிலையில் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் புதுவை அணியை சேர்ந்த பாலச்சந்தர், செந்தில்குமார், தமிழரசி, சுப்புராம், சுதர்சன் உள்ளிட்டவர்கள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வெண்றனர்.

    இவர்களுக்கு பாராட்டு விழா புதுவையில் நடைபெற்றது. பாராட்டு விழாவிற்கு புதுவை மாநில கூடோ சங்க பொதுச் செயலாளர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலச்சந்தர், இணைச் செயலாளர் செந்தில்குமார், மாநில விளையாட்டு வீரர் நல சங்க இணை செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    புதுவை மாநில கூடோ சங்கத் தலைவர் வளவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியப் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற வீரர்கள்-வீராங்கனைகளை சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் சீனியர் பயிற்சியாளர் அசோக் வரவேற்றார். முடிவில் காலாப்பட்டு சீனியர் பயிற்சியாளர் செல்வம் நன்றி கூறினார்.

    • கவர்னர் தமிழிசை தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
    • விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் வருகிற 1-ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது.

    இதையொட்டி கடந்த 15-ந் தேதி பிடாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.  8 மணிக்கு சிவனடியார்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.

    நாள்தோறும்காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு வீதியுலாவும் நடக்கிறது.

    27-ந் தேதி பாரிவேட்டை, 29-ந் தேதி 63 நாயன்மார் வீதியுலா, 31-ந் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

    வருகிற 1-ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது. கவர்னர் தமிழிசை தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×