என் மலர்
நீங்கள் தேடியது "bus permit"
- விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்
- புதுவை பெரிய மார்கெட்டுக்கு செல்லும் சிறு வியாபாரிகள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரி:
போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் அன்பரசன் மனு அளித்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:-
புதுவை பஸ் நிலையத்திலிருந்து கோரிமேடு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக பத்துக்கண்ணு வரையில் சென்று, மீண்டும் அதே வழியாக பஸ் நிலையத்துக்கு என பல ஆண்டுகளாக இயங்கி வந்த தனியார் பஸ் தற்போது சேதராப்பட்டு வரையில் வந்து அப்படியே திரும்பி புதுவை பஸ் நிலையத்திற்கு சென்று விடுகிறது.
இதனால் கரசூர், துத்திப்பட்டு, கடப்பேரி க்குப்பம், தொண்டமாநத்தம், ராமநாதபுரம் ஆகிய 5 கிராம மக்கள் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு, அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள், புதுவை பெரிய மார்கெட்டுக்கு செல்லும் சிறு வியாபாரிகள் என அனைவரும் ெபரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் தனியார் பஸ்சை மீண்டும் பத்துகண்ணுவரையில் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பஸ் உரிமையாளர் மறுக்கும் பட்சத்தில் அதன் அனுமதியை (பர்மிட்டை) முடக்கம் செய்து புதுவை அரசின் மூலம் இயக்கப்படும் பி.ஆர்.டி.சி. பஸ்சை இயக்க வேண்டும்.
இவ்வாறு அன்பரசன் கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.






