என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருக்காமீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
    X

    கோப்பு படம்.

    திருக்காமீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

    • கவர்னர் தமிழிசை தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
    • விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் வருகிற 1-ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது.

    இதையொட்டி கடந்த 15-ந் தேதி பிடாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. 8 மணிக்கு சிவனடியார்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.

    நாள்தோறும்காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு வீதியுலாவும் நடக்கிறது.

    27-ந் தேதி பாரிவேட்டை, 29-ந் தேதி 63 நாயன்மார் வீதியுலா, 31-ந் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

    வருகிற 1-ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது. கவர்னர் தமிழிசை தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×