என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகளை இந்த ஆண்டு தொடங்குவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க செயற்குழு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை வகித்தார். அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

    கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் அனி பால்கென்னடி எம்.எல்.ஏ., தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, லோகையன், ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

     கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை புதுவையில் வருகிற 3-ந் தேதி சிறப்பாக கொண்டாடுவது வட சென்னையில் அன்று நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்பது.

    புதுவையிலும் கருணாநிதி நூற்றாண்டுவிழாவை ஓராண்டு கொண்டாடுவது. கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகளை இந்த ஆண்டு தொடங்குவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்
    • 3 தனியார் கல்லூரிகளும் 150 இடங்களை 250 ஆக உயர்த்த விண்ணப்பித்துள்ளன.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள மணக்குள விநாயகர், பி.ம்ஸ், வெங்கடேஸ்வரா ஆகிய தனியர் மருத்துவ கல்லூரிகளில்

    எம்.பி.பி.எஸ். அரசு இட ஒதுக்கீடு இடங்களை முடிவு செய்ய ஆலோசனைக்கூட்டம் சட்ட சபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

     அரசு செயலர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், தனியார் மருத்துவக்கல்லூரி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், கடந்த ஆண்டைவிட புதுவை மாணவர்களுக்கு கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் தர வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதிகரிக்கப்பட்டுள்ள கூடுதல் இடங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    3 தனியார் கல்லூரிகளும் 150 இடங்களை 250 ஆக உயர்த்த விண்ணப்பித்துள்ளன. வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு அனுமதி கிடைத்துள்து. இதில் 50 சதவீதத்தை வழங்க அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    மற்ற கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைத்தால் கூடுதல் இடங்களை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

    • போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.
    • கிராமிய நடன போட்டியில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500, 3-ம் பரிசாக ரூ.ஆயிரத்து 250 வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

     இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் நேருயுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலைவிழா போட்டிகள் வருகிற ஜூன் 10-ந் தேதி நடைபெற உள்ளது. பங்கேற்க விருப்பம் உள்வர்கள் பெரியார் நகர் 4-வது குறுக்கு தெரு சுபாஷ் சந்திரபோஸ் உயர்நிலைப்பள்ளி முதல் மாடியில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் நேரடியாக தொட்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வருகிற 31-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

    போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் உணவு, சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் மாநில அளவிலான, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்படுவர்.

    ஓவியம், கவிதை, புகைப்படம் எடுத்தல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.750, 3-ம் பரிசாக ரூ.500, பேச்சுப்போட்டியில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.ஆயிரம் வழங்கப்படும்.

    கிராமிய நடன போட்டியில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500, 3-ம் பரிசாக ரூ.ஆயிரத்து 250 வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் அம்மன் மடவிளாக வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதி த்து தங்கள் நேர்த்தி கடனைச் செலுத்தி னர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமித்தித்திருவிழா, கடந்த ஏப்ரல் 30-ந் தேதி பூச்செரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னதா னம் மற்றும் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் அம்மன் மடவிளாக வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மேலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி யுலா வரும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து நடை பெற்ற திமிதித்திரு விழா வில், 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதி த்து தங்கள் நேர்த்தி கடனைச் செலுத்தி னர். விழாவில், புதுச்சேரி போக்குவ ரத்துறை அமை ச்சர் சந்திர பிரியங்கா, காரைக்கால் வடக்கு த்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமுருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புதுவை இலக்கிய சங்கம் சார்பில் இலக்கிய ஆர்வலர் சங்கமம் நிகழ்ச்சி தனியார் ஒட்டலில் நடைபெற்றது.
    • பேராசிரியர் பாஞ்ச்.ராமலிங்கம் வரவேற்றார்.

    புதுச்சேரி:

    புதுவை இலக்கிய சங்கம் சார்பில் இலக்கிய ஆர்வலர் சங்கமம் நிகழ்ச்சி தனியார் ஒட்டலில் நடைபெற்றது.

    பேராசிரியர் பாஞ்ச்.ராமலிங்கம் வரவேற்றார். வணிகவரி துறை முன்னாள் தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.புதுவை இலக்கிய சங்கமம் தலைவர் ஆதி கேசவன் முன்னிலை வகித்தார்.

    சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி மற்றும் ஆசிரியர் மகாலிங்க சிவம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    கலைமாமணி விருது பெற்ற ராமதாஸ, பேராசிரியர் பாஞ்ச். ராமலிங்கம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு புத்தக சங்கம் தலைவர் சங்கரன், புதுச்சேரி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், சுயநிதி தனியார் பள்ளிகள் கூட்ட–மைப்பு தலைவர் ரங்கநாதன், சுயநிதி தனியார் பள்ளி–களின் கூட்டமைப்பு செயலாளர் சிவராஜன், அங்காள பரமேஸ்வரி கலைக்குழு அமரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • உருளையன்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் புதுவை புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது பஸ்நிலையம் அருகே சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் பையுடன் நின்றிருந்தார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் புதுவை புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பஸ்நிலையம் அருகே சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் பையுடன் நின்றிருந்தார். அவர் வைத்தி ருந்த பையை போலீசார் சோதனையிட்ட போது, அதில் 10 முழு மதுபாட்டில் கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 ஆயிரத்து 580 ஆகும்.

    விசாரணையில் அவர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பதும், இந்த மதுபானத்தை சென்னைக்கு கடத்திச்சென்று அவர் விற்பனை செய்ய பஸ்சுக்காக காத்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கலால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கலால் துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    • தவளக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியில் மாரியம்மன், காளியம்மன், பெருமாள் கோவில்கள் உள்ளது.
    • மங்கள இசையுடன் தொடங்கி கணபதி பூஜை, நான்காம் கால பூஜையை தொடர்ந்து பூர்ணாஹூதி தீபாராதனை யாத்ராதனம் செய்து கலச பூஜை புறப்பாடு நடைபெற்றது.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியில் மாரியம்மன், காளியம்மன், பெருமாள் கோவில்கள் உள்ளது.

    இக்கோவில்கள் கும்பாபிஷேகம்  காலை நடைபெற்றது, முன்னதாக மங்கள இசையுடன் தொடங்கி கணபதி பூஜை, நான்காம் கால பூஜையை தொடர்ந்து பூர்ணாஹூதி தீபாராதனை யாத்ராதனம் செய்து கலச பூஜை புறப்பாடு நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு கோவிலின் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மூலவர் மாரியம்மன், காளியம்மன், பெருமாள் கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது.

    இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    • காட்டேரிக்குப்பம் புது நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் கட்டிட தொழிலாளி.
    • இவர் காலை கட்டிட கூலி வேலைக்கு சென்று விட்டார்.

    புதுச்சேரி:

    காட்டேரிக்குப்பம் புது நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் கட்டிட தொழிலாளி.

    இவர் காலை கட்டிட கூலி வேலைக்கு சென்று விட்டார். இவரது குடும்பத்தினர்  மதியம் 1 மணியளவில் வீட்டை பூட்டி சாவியை ஒரு மறைவிடத்தில் வைத்துவிட்டு அந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யாரோ வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த தங்கக் காசுகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ரூ.22,600 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைக்காமல் மறைவிடத்தில் இருந்த சாவியை எடுத்து மர்ம நபர்கள் திருடி சென்றி ருப்பதால் இவர்களது குடும்பத்திற்கு அறிமுகமான நபர்களோ அல்லது உள்ளூர் நபர்களோ இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என காட்டேரிக் குப்பம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    விரைவில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம் என காட்டேரிக்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா கூறினார்.

    • நெட்டப்பாக்கம் அருகே உள்ள ஏரிப்பாக்கம் புதுக் காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்
    • இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே உள்ள ஏரிப்பாக்கம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நாகராஜன் கடந்த சில தினங்களாக உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் மனமுடைந்த நாகராஜன் நேற்று வீட்டில் ஜன்னல் கம்பியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இவரது மனைவி இரிசம்மாள் நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    • பழுதடைந்த கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்தல் மற்றும் மறுகட்டுமானம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.
    • இதனை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதி பங்கூர்பேட் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.48 லட்சத்து 30 ஆயிரம் செலவில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து பங்கூர் கிராமம் வரை 640 மீ நீளம் உள்ள பழுதடைந்த கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்தல் மற்றும் மறுகட்டுமானம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. இதனை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் தனசேகரன், இளநிலை பொறியாளர் ஜலீல், ஒப்பந்ததாரர் சிவி கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் வளர்க்கவும், புத்தகம் வாங்கவும் நூலக மானியம் வழங்கப்படுகிறது.
    • அரசு பள்ளிகளுக்கு நூலகங்களை வலுப்படுத்த ரூ.40.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    சமக்ரா சிக்ஷா மத்திய நிதியுதவி திட்டத்தில் அனைத்து வயது மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் வளர்க்கவும், புத்தகம் வாங்கவும் நூலக மானியம் வழங்கப்படுகிறது.

    இந்த கல்வியாண்டில் 47 நடுநிலை பள்ளிகளுக்கு தலா ரூ.13 ஆயிரம் வீதம் ரூ.6.11 லட்சம், 233 தொடக்க பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.11.65 லட்சம், 9,10-ம் வகுப்பு வரை உள்ள 72 பள்ளி களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.10.8 லட்சம், 60 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.12 லட்சம் என மொத்தம் 412 அரசு பள்ளிகளுக்கு நூலகங்களை வலுப்படுத்த ரூ.40.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தகவலை புதுவை பள்ளி கல்வித்துறையின் சமக்ரா சிக்சா திட்ட இயக்குனர் தினகர் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பான சுற்றறி க்கையும் அனுப்பியுள்ளார்.

    • வலம்புரி சுந்தர விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    • விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் முதல் காலயாக பூஜை, 2-ம் காலம் மற்றும் 3-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை அலேன் வீதியில் உள்ள வலம்புரி சுந்தர விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்  நடந்தது.

    விழாவையொட்டி கடந்த 22-ந் தேதி கணபதி ஹோமம், லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடந்தது.  விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் முதல் காலயாக பூஜை, 2-ம் காலம் மற்றும் 3-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டன.

    தொடர்ந்து இன்று காலை 4-ம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ பங்கேற்றார். பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு வலம்புரி சுந்தர விநாயகருக்கு மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இதில் திராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வலம்புரி சுந்தர விநாயகர் ஆலய நிர்வாகி குழுவினர் மற்றும் ஊர் பெரியவர்கள் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற உறுப்பி னர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    ×