என் மலர்
புதுச்சேரி
- புதுவை அரசு சார்பில் கொம்பாக்கம்பேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.
- சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா இசை கச்சேரிக்கு வந்த தவில், நாதஸ்வர வித்வான்களிடம் சென்று நலம் விசாரித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் கொம்பாக்கம்பேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களை வரவேற்க சட்டசபை எதிர்கட்சி தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வான சிவா மங்கள இசைக்கு ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி வர காலதாமதமானது. அப்போது சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா இசை கச்சேரிக்கு வந்த தவில், நாதஸ்வர வித்வான்களிடம் சென்று நலம் விசாரித்தார்.
பின்னர் அவர்களிடம் கொடுங்கள் நானும் வாசித்து பார்க்கிறேன் என்று கூறி நாதஸ்வரத்தை வாங்கி வாசித்து பார்த்தார். இதைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள், விழாவுக்கு வந்தவர்கள் பாராட்டி, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
- எம்.ஐ.டி. கல்லூரியில் எம்.எஸ்.எம்.இ. திட்டங்கள் மற்றும் ஜெம் போர்டல் என்ற தலைப்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- கல்லூரி இ.டி.சி. ஒருங்கிணைப்பாளர் வைத்தீஸ்வரன் வரவேற்றார்.
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு சார்பில் எம்.எஸ்.எம்.இ. திட்டங்கள் மற்றும் ஜெம் போர்டல் என்ற தலைப்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவரும், நிர்வாக இயக்குநருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் கல்லூரி முதல்வர் மலர்க்கண் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரி இ.டி.சி. ஒருங்கிணைப்பாளர் வைத்தீஸ்வரன் வரவேற்றார். மேலாண்மை துறைதலைவர் பாஸ்கரன் தலைமை விருந்தினரை கவுரவித்தார்.
முதன்மை விருந்தினராக எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குநர் தர்ம செல்வன் கலந்துகொண்டு தொழில் முனைவோருக்கு பயனுள்ள தகவல்களையும் நுண்ணறிவுகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் லகு உத்யோக் பாரதி புதுவை மாநில பொதுச் செயலாளர் வேலுச்சாமி வேலுசாமி, தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டிற்காக எம்.எஸ்.எம்.இ. வழங்கும் பல்வேறு பயிற்சி திட்டங் களை பற்றி தெரிவித்தார். இ.சி.இ.துறை பேராசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.
கல்லூரியின் இ.டி. செயல் பேராசிரியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ-மாணவியர்க ளுக்கு இலவச சீருடை தையல் கூலி மற்றும் யோகா பயிற்சி விரிப்புகள் வழங்கப்படுகிறது.
- சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று சீருடைகள் தையல் கூலி மற்றும் யோகா பயிற்சி விரிப்புகளை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ-மாணவியர்க ளுக்கு இலவச சீருடை தையல் கூலி மற்றும் யோகா பயிற்சி விரிப்புகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதியில் உள்ள ஆண்டியார் பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, நல்லவாடு அரசு நடு நிலைப்பள்ளி, புதுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி, பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி, இடையார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயில்கின்ற மொத்தம் 728 மாணவ - மாணவியர்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று சீருடைகள் தையல் கூலி மற்றும் யோகா பயிற்சி விரிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமு கர்கள்களான பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், பா.ஜனதா விவசாய அணி சக்திபாலன், கிருஷ்ண மூர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணா மூர்த்தி, இயக்குனர் சக்தி வேல், ராஜா மற்றும் நல்லவாடு கிராம பஞ்சாயத்தார், புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்தார், இடையார் பாளையம் பகுதி பஞ்சா யத்தார் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.
- இதற்கு காரைக்காலில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ளதுதான் காரணம்.
புதுச்சேரி:
வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரைக்காலில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ளதுதான் காரணம்.
மதுபான கடைகளை திறக்க காட்டும் ஆர்வத்தை அரசு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப காட்டவில்லை. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காவிரியில் நீர் திறந்து வந்தாலும் வீணாக சென்று கடலில் கலக்கும் சூழல் உள்ளது. எனவே ஒரு மாதத்திற்குள்ளாக அரசு காரைக்காலில் அனைத்து பாசன வாய்க்கால்களையும் முழுமையாக தூர்வார வேண்டும்.
மணல் மாபியாவுக்கு அரசு ஆதரவு அளிப்பதை கைவிட்டு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். கூட்டுறவு விவசாய சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உடனடி யாக கடன் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு தேவையான டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்களை வழங்க வேண்டும்.
கூட்டுறவு விவசாய சங்கங்களில் வாடிக்கையாளர்களின் நகைகளை திருடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- புதுவையில் உள்ள தொழில், கலை, நுண்கலை படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது
- நீட்தேர்வு அல்லாத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள தொழில், கலை, நுண்கலை படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
நீட்தேர்வு அல்லாத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
மாணவர்கள் என்ஜினீயரிங், கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் சென்டாக் இணைய தளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலை படிப்புகளில் இசை, கலை படிப்புகளில் சேர சென்டாக் இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஜூன் 10-ந் தேதி மாலை 6 மணி வரை சமர்பிக்கலாம்.
இதுகுறித்த விபரங்களை சென்டாக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.
- வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும்.
- தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்?
புதுச்சேரி:
முத்தரையர் நினைவு நாளை முன்னிட்டு புதுவை-கடலூர் சாலை 100 அடி சாலை சந்திப்பில் அவரது உருவப்பட மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.
இதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்திற்கு மரியாதை செலுத்தி கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விஷ சாராய விவகாரத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் பதவி விலகி இருக்க வேண்டும். விஷ சாராயத்திற்கு அனைவரும் பதவி விலகி இருக்க வேண்டும். கொடநாடு கொலைக்கு எடப்பாடி பதவி விலகி இருக்க வேண்டும்.
ஆனால் யாருக்கும் தார்மீக பொறுப்பு என்பது இல்லை. எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராயம் இருந்தது. ஆனால் மக்கள் சாகவில்லை. இப்போது சாராயத்துக்கு பலர் இறந்துள்ளனர். ஆட்சியாளர்களை தேர்வு செய்தது மக்கள். அவர்கள்தான் இனி முடிவு செய்வார்கள்.
கவர்னரிடம் அ.தி.மு.க.வினர் கடிதம் கொடுக்கின்றனர். அப்படியென்றால் கொடநாடு கொலை விசாரணைக்கும் கடிதம் தரலாமா? தமிழக முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு ஏற்கனவே பலமுறை சென்றுள்ளார். அவர் சென்றதால் என்ன முதலீடு பெற்றார்?
தொழில் வளர்ச்சி என்பது பசப்பு வார்த்தை. புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை தொடங்குகின்றனர். இதில் நமது பாட்டனார் பற்றிய வரலாறு வருமா? தமிழ் இருக்கு என சொல்கிறார்கள். எங்கே இருக்கிறது? 12 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. தமிழ், தமிழ் என கூறுகிறீர்கள். இரு தலைமுறை தாய்மொழியே இல்லாமல் வளர்ந்து விட்டது.
தமிழ் எங்கு வாழ்கிறது? இதுதான் திராவிட மாடலா? நீண்ட காலமாக சூழ்ச்சி செய்து தமிழனை ஏமாற்றி விட்டார்கள். தமிழ் வாழ்க என மாநகராட்சியில் எழுதினால் போதுமா? கோப்பில் தமிழ் வேண்டாமா? கொஞ்ச நாளைக்கு இந்த கொடுமை போகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி பயணம் செல்கிறார்.
காலம் கடந்து விட்டது. ஒரு கடைத்தெருவில்கூட தமிழில் பெயர் பலகை இல்லை. ஒரு வானூர்தியில் ஓட்டுநர் தமிழில் அறிவிப்பு வெளியிட்டார் என அனைவரும் கைதட்டினார்கள். தமிழ் உணர்வு அனைவருக்கும் இருக்கு. டாக்டர் ராமதாஸ் 80 வயதிலும் தமிழை தேடி செல்கிறார், அவரை பாராட்டுகிறேன். அடுத்து வருபவர்கள் இதை தொடர வேண்டும்.
வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும். மரணமடைந்த விவசாயிகள், இலங்கை தமிழர்கள் கொலை, பல கொடிய சம்பவங்களுக்கு தமிழக அரசு தொகை கொடுத்ததா?
தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்? காய்ச்சுவதே அவர்கள் என்பதால் பணம் கொடுத்து மறைக்க பார்க்கிறார்கள். இனி மனமுடைந்தால் விஷம் குடிக்க தேவையில்லை. கள்ளசாராயம் குடித்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும்.
ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறுவது பைத்தியக்காரத்தனம். வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதைதான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கார்பைட் கற்கள் கொண்டு பழுக்கக்க வைத்து விற்பனைச் செய்வது வழக்கம்.
- வியாபாரி களுக்கும் விரைவாக உணவு உரிமம் எடுக்க சொல்லி அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
காரைக்காலில் ஆண்டுதோறும் வரலாற்று புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவிற்கு சில மாதங்களுக்கு முன்னும், பின்னும் அதிக அளவு மாங்கனிகள் வெளிமாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாவது வழக்கம். ஒரு சிலர், வெளிமாவட்டங்க ளிலிருந்துவரும் மாங்கனிக ளை, தங்கள் குடோனில் சேமித்து வைத்து, விழா நேரத்தில், கார்பைட் கற்கள் கொண்டு பழுக்கக்க வைத்து விற்பனைச் செய்வது வழக்கம். மேலும், ஏராளமான வியாபாரிகள், மாங்கனிகள், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை, கார்பைட் கற்கள் மற்றும் ரசாயன தண்ணீர் கொண்டு பழங்களை பழுக்க வைப்ப தாக, புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் அனுப்பிவந்தனர்.
அதன்பேரில், புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், அதிரடி சோதனை நடத்தினார். தொடர்ந்து, நேற்று காரை க்கால் நகர் பகுதியில் உள்ள மாங்கனி, வாழைப்பழம் கடைகள், குடோன்கள், நேரு மார்க்கெட், தள்ளு வண்டிகளிலும் அதிரடி சோதனை நடத்தினார். சோதனையில், ரசாயன தண்ணீர் மற்றும் கார்பைட் கற்களால் பழுக்கவை க்கப்பட்ட மாங்கனிகள், வாைழப்பழங்கள், பச்சை நிறமேற்றிய பச்சை பட்டாணிகளை சோதனைக்காக புதுச்சேரி கொண்டுசென்றார். கார்பைடு மூலம் பழுக்கவை க்கப்பட்ட மாங்கனிகளை உடனடியாக பறிமுதல் செய்து அழித்தார். மேலும் நேரு மார்க்கெட்டில் உள்ள அனைத்து வியாபாரி களுக்கும் விரைவாக உணவு உரிமம் எடுக்க சொல்லி அறிவுறுத்தினார். வியாபாரிகள் அனை வரும் மாங்கனிகள், வாழைப்பழங்களை ரசாயனம் கொண்டு பழு க்கவைப்பதை உடனே நிறுத்திகொள்ளவேண்டும். மீறினால், கடும் நடவடிக்கை எடுப்பதோடு , கடை நடத்தும் உரிமம் பறிக்கப்படும். மேலும், இனி வாரம் மற்றும் மாதந்தோறும் இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துசென்றார்.
- குளத்தின் அருகில் தற்காலிக ஏற்பாடாக சுற்றுவட்டார பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை இப்பகுதியில் கொட்டப்பட்டு வந்தது.
- இதனால் குப்பைகள் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
புதுச்சேரி:
திருபுவனை அருகே உள்ள குளத்தின் அருகில் தற்காலிக ஏற்பாடாக சுற்றுவட்டார பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை இப்பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை மர்ம ஆசாமிகள் யாரோ குப்பைகளை தீ வைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் குப்பைகள் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து உடனடியாக மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் பேரில் ஆணையர் உடனடியாக திருபுவனை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
மேலும் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளரான ஓம்சக்தி சேகர் மற்றும் அவரை சார்ந்தோர் தற்போது சட்டத்தை மதிக்காமலும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் செயல்படுகின்றனர்.
- கோர்ட்டு உத்தரவை மீறி புதுவை, காரைக்காலில் அ.தி.மு.க. பெயர், சின்னத்தை பயன்படுத்தும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் அவை தலைவர் அன்பானந்தம், இணை செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணை செயலாளர்கள் நாகமணி, சுத்துக்கேணி பாஸ்கரன், காந்தி, குமுதன், நகர செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் புதுவை போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார்லாலை சந்தித்து மனு அளித்தனர்.
கோர்ட்டு மூலம் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும் என்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நீக்கம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிந்துள்ளது. இதன் மூலம் எங்களைத்தவிர வேறு எவரும் அ.தி.மு.க கொடி, இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ளோர் தான் இதை பயன்படுத்த முடியும். அதை மீறி ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளரான ஓம்சக்தி சேகர் மற்றும் அவரை சார்ந்தோர் தற்போது சட்டத்தை மதிக்காமலும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் செயல்படுகிறன்றனர்.
கோர்ட்டு உத்தரவை மீறி புதுவை, காரைக்காலில் அ.தி.மு.க. பெயர், சின்னத்தை பயன்படுத்தும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- திருக்கனூர் அருகே உள்ள கைக்கிலப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அபிராமன் கூலி தொழிலாளி.
- மது அருந்திவிட்டு வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே உள்ள கைக்கிலப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அபிராமன் கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் கே.ஆர். பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடையில் தனது நண்பர்கள் ராமு, ரவிராஜன் ஆகியோருடன் மது அருந்திவிட்டு வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது இவர்களுக்கும் மது கடை வெளியே இருந்த வாதானூரைச் சேர்ந்த செல்வகுமார், தமிழரசன், மணிகண்டன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டு இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் உருட்டு கட்டைக ளால் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து அபிராமன் அளித்த புகாரியின் பேரில் செல்வகுமார், தமிழரசன் மணிகண்டன் மீதும் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் அபிராமன், ரவிராஜன், ராமு ஆகியோர் மீது திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருவண்டார் கோவில் ஸ்ரீ நவதுர்கா ஆங்கில மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
- இப்பள்ளி மாணவி சத்யஸ்ரீ 500-க்கு 496 மதிப்பெண் பெற்று சாதனையை புரிந்துள்ளார்.
புதுச்சேரி:
2022-23 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருவண்டார் கோவில் ஸ்ரீ நவதுர்கா ஆங்கில மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி சத்யஸ்ரீ 500-க்கு 496 மதிப்பெண் பெற்று இச்சாதனையை புரிந்துள்ளார்.
மாணவி சத்யஸ்ரீ தமிழில் 98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல் -100 என 500-க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து புதுவை மாநில அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் இப்பள்ளி மாணவர் விக்ரமவர்மன் 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும் மாணவி பூஜாஸ்ரீ 481 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்றனர். மேலும் இப்பள்ளி மாணவர்கள் 18 பேர் 450-க்கு மேல் மதிப்பெண்களும் 50 மாணவர்கள் 400-க்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
அதுபோல் பிளஸ்-2 பொதுத்தேர்வில் எங்கள் பள்ளி மாணவி ரோஷினி 600-க்கு 587 மதிப்பெண்களும் மாணவி பவதாரணி 571 மதிப்பெண்களும் மாணவி திவ்யா 560 மதிப்பெண்களும் பெற்ற தோடு எங்கள் பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
பள்ளிக்கு பெருமை சேர்த்த இந்த மாணவ-மாணவர்களை பள்ளியின் துணை முதல்வர் விவேக் நடராஜன் பள்ளி கல்விக்குழு தலைவர் சத்யா நடராஜன் பள்ளியின் மேலாளர் விநோதினி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
நகர் புறங்களுக்கு இணையாக கிராம புற ஏழை எளிய மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஆங்கில கல்வியில் சிறந்து விளங்க எங்கள் பள்ளியின் திறமையான ஆசிரியர்களால் கல்வி கற்றுத் தரப்படுகிறது.
ஏற்கனவே எங்கள் பள்ளி 2014-2015-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று 100 சதவீத தேர்ச்சியை பெற்றது. இதற்காக எங்கள் பள்ளிக்கு அரசு சார்பில் முதல்-அமைச்சர் விருதும் கல்வி அமைச்சர் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மேலும் அவர்கள் கூறும் போது மாநில அளவில் எங்கள் பள்ளி முதலிடம் பெற உறுதுணையாக இருந்த பள்ளியின் பொறுப்பாசிரியர் செங்கேணியம்மாள், ஆசிரியர்கள் சந்திரமோகன், முரளி, கந்தசாமி, குமாரசாமி, பாரதிதாசன், பார்த்திபன், ராஜ்குமார், புகழேந்தி, ஆசிரியை சுலக்சனா மற்றும் பெற்றோ ர்கள், மாணவர்கள், அலுவலர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் தேசிய அளவிளான கருத்தரங்கம் நடைபெற்றது.
- கணினி அறிவியல் துறையின் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
புதுச்சேரி:
புதுவை கிருமாம் பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் தேசிய அளவிளான கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கி இன்றைய கணினி அறிவியலின் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் அதிலுள்ள ஆராய்ச்சிகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்து ரைத்தார்.இதில் துணை முதல்வர் அய்யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாண வர்களை ஊக்குவித்தார். கணினி அறிவியல் துறையின் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
இவ்விழாவில் புதுவை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது அறிவுசார் திறன்களை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து தேசிய அளவி ளான பல்வேறு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும் இத்துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். விழாவிற்கான ஏற்பாடு களை கணினி அறிவியல் துறையின் மாணவர்களும், ஆசிரியர்களும் செய்திருந்தனர்.






