search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நவதுர்கா ஆங்கில மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை
    X

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற  மாணவ-மாணவிகளை  வாழ்த்திய காட்சி.

    நவதுர்கா ஆங்கில மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை

    • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருவண்டார் கோவில் ஸ்ரீ நவதுர்கா ஆங்கில மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
    • இப்பள்ளி மாணவி சத்யஸ்ரீ 500-க்கு 496 மதிப்பெண் பெற்று சாதனையை புரிந்துள்ளார்.

    புதுச்சேரி:

    2022-23 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருவண்டார் கோவில் ஸ்ரீ நவதுர்கா ஆங்கில மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி சத்யஸ்ரீ 500-க்கு 496 மதிப்பெண் பெற்று இச்சாதனையை புரிந்துள்ளார்.

    மாணவி சத்யஸ்ரீ தமிழில் 98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல் -100 என 500-க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து புதுவை மாநில அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மேலும் இப்பள்ளி மாணவர் விக்ரமவர்மன் 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும் மாணவி பூஜாஸ்ரீ 481 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்றனர். மேலும் இப்பள்ளி மாணவர்கள் 18 பேர் 450-க்கு மேல் மதிப்பெண்களும் 50 மாணவர்கள் 400-க்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    அதுபோல் பிளஸ்-2 பொதுத்தேர்வில் எங்கள் பள்ளி மாணவி ரோஷினி 600-க்கு 587 மதிப்பெண்களும் மாணவி பவதாரணி 571 மதிப்பெண்களும் மாணவி திவ்யா 560 மதிப்பெண்களும் பெற்ற தோடு எங்கள் பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

    பள்ளிக்கு பெருமை சேர்த்த இந்த மாணவ-மாணவர்களை பள்ளியின் துணை முதல்வர் விவேக் நடராஜன் பள்ளி கல்விக்குழு தலைவர் சத்யா நடராஜன் பள்ளியின் மேலாளர் விநோதினி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    நகர் புறங்களுக்கு இணையாக கிராம புற ஏழை எளிய மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஆங்கில கல்வியில் சிறந்து விளங்க எங்கள் பள்ளியின் திறமையான ஆசிரியர்களால் கல்வி கற்றுத் தரப்படுகிறது.

    ஏற்கனவே எங்கள் பள்ளி 2014-2015-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று 100 சதவீத தேர்ச்சியை பெற்றது. இதற்காக எங்கள் பள்ளிக்கு அரசு சார்பில் முதல்-அமைச்சர் விருதும் கல்வி அமைச்சர் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    மேலும் அவர்கள் கூறும் போது மாநில அளவில் எங்கள் பள்ளி முதலிடம் பெற உறுதுணையாக இருந்த பள்ளியின் பொறுப்பாசிரியர் செங்கேணியம்மாள், ஆசிரியர்கள் சந்திரமோகன், முரளி, கந்தசாமி, குமாரசாமி, பாரதிதாசன், பார்த்திபன், ராஜ்குமார், புகழேந்தி, ஆசிரியை சுலக்சனா மற்றும் பெற்றோ ர்கள், மாணவர்கள், அலுவலர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×