என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "against 6 people"

    • திருக்கனூர் அருகே உள்ள கைக்கிலப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அபிராமன் கூலி தொழிலாளி.
    • மது அருந்திவிட்டு வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ள கைக்கிலப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அபிராமன்  கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் கே.ஆர். பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடையில் தனது நண்பர்கள் ராமு, ரவிராஜன் ஆகியோருடன் மது அருந்திவிட்டு வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது இவர்களுக்கும் மது கடை வெளியே இருந்த வாதானூரைச் சேர்ந்த செல்வகுமார், தமிழரசன், மணிகண்டன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டு இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் உருட்டு கட்டைக ளால் தாக்கிக் கொண்டனர்.

    இதுகுறித்து அபிராமன் அளித்த புகாரியின் பேரில் செல்வகுமார், தமிழரசன் மணிகண்டன் மீதும் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் அபிராமன், ரவிராஜன், ராமு ஆகியோர் மீது திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    ×