என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் தேசிய அளவிளான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • கணினி அறிவியல் துறையின் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

    புதுச்சேரி:

    புதுவை கிருமாம் பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் தேசிய அளவிளான கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கி இன்றைய கணினி அறிவியலின் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் அதிலுள்ள ஆராய்ச்சிகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்து ரைத்தார்.இதில் துணை முதல்வர் அய்யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாண வர்களை ஊக்குவித்தார். கணினி அறிவியல் துறையின் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

    இவ்விழாவில் புதுவை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது அறிவுசார் திறன்களை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து தேசிய அளவி ளான பல்வேறு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மேலும் இத்துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். விழாவிற்கான ஏற்பாடு களை கணினி அறிவியல் துறையின் மாணவர்களும், ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    • முத்திரையர் பாளையம் பகுதியில் உள்ள முத்திரையர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
    • ஆறுபடை வீடு மருத்துவ ஒருங்கிணைப்பாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டு மருத்துவ சேவை செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லோட்டஸ் பவுண்டேஷன், டென்னாகோ ஆட்டோமோட்டிவ் தனியார் நிறுனம் மற்றும் கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி இணைந்து முத்திரையர் பாளையம் பகுதியில் உள்ள முத்திரையர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

    இந்த முகாமில் லோட்டஸ் பவுண்டேஷன் நிறுவனர் சமயவேலு, டென்னகோ ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் மனித வள மேலாளர் மணிவண்ணன், அதிகாரி செந்தில், மற்றும் லோட்டஸ் பவுண்டேஷன் திட்ட மேலாளர் மாலினி கணேசன் ஊழியர்கள் திவ்யா, நித்யா, அஸ்வினி, சரண்யா, மகேஸ்வரி, ரெஜினா, மற்றும் திலகவதி ஆறுபடை வீடு மருத்துவ ஒருங்கிணைப்பாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டு மருத்துவ சேவை செய்தனர்.

    முகாமில் பொது மருத்து வம், குழந்தை மருத்துவம் காது, மூக்கு, தொண்டை, மருத்துவம், தோல் மருத்து வம், அறுவை சிகிச்சை, ரத்த பரிசோதனை, பெண்கள் நலம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், நோய் தடுப்பு மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் பொது மக்கள் மற்றும் ஏழைகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர், மங்கலம், ஊசுடு தொகுதிக்குட்பட்ட கிராம பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வில்லியனூர் மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் பெஞ்சமின் தலைமை தாங்கினார். தொகுதி துணை செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார்.

    இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி, மாநில குழு உறுப்பினர் அந்துவான், தொகுதி பொருளாளர் கோவிந்தராஜ் ஏ.ஐ.எஸ்.எப். மாநில தலை வர் உதயராஜ் ஆகியோர் விளக்க உரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தொகுதி குழு உறுப்பினர்கள் கணேசன், நாசர், ராசலட்சுமி, பாத்திமா, அரியூர் கிளை செயலாளர் கண்ணன், நகர கிளை செயலாளர் பாலதண்டா யுதம், மணவெளி கிளை செயலாளர் சரவணன், கணுவாபேட்டை கிளை செயலாளர் சூசைராஜ் மற்றும் நிர்வாகிகள் செல்வம், சிவபெருமான், தில்லைநாயகம், சுரேஷ், பாலகிருஷ்ணன், ஸ்ரீதரன், ரியாஸ், அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்குதல், மாணவிகளுக்கு சீருடை மற்றும் தையல் தொகை வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    புதுச்சேரி:

    கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    இதில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுதல், சென்ற ஆண்டு 9-ஆம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்குதல், மாணவிகளுக்கு சீருடை மற்றும் தையல் தொகை வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளித் துணை முதல்வர் மஞ்சுளா தலைமை தாங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் கிளாடின் கிரேஸ் மெக்பர்லேன் முன்னிலை வகித்தார்.தமிழ் விரிவுரையாளர் ராஜசேகரி வரவேற்றார். செந்தில்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாண வர்களை பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் இலவச சைக்கிள், சிறுகதைகளை வழங்கினார். பின்னர் ஆசிரியர்களை பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் விலங்கியல் விரிவுரையாளர், லோகேஸ்வரி, தமிழாசிரியர் முனைவர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில் சமூக அறிவியல் ஆசிரியர் கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கணித ஆசிரியர் அருளரசன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலை கழகமூலம் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.
    • சமுதாய நலக்கூடம் புதிய கட்டிடம் மற்றும் கல்வெட்டை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்தரபிரியங்கா, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு சமுதாய திறந்து வைத்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் பேட்டில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலை கழகமூலம் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.

    ரூ.ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நல கூடத்தின் கீழ்தளத்தில் வரவேற்பு கூடம், உணவருந்தும் கூடம், சமையற் கூடம் ஆகியவையும், முதல் தளத்தில் நிகழ்ச்சி அரங்கம், நிகழ்ச்சி மேடை, மணமகன், மணமகள் அறை, இசைக் கச்சேரி மேடை ஆகியவையும் அமைந்துள்ளது.

    சமுதாய நலக்கூடம் புதிய கட்டிடம் மற்றும் கல்வெட்டை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்தரபிரியங்கா, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு சமுதாய திறந்து வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலைக் கழக மேலாண் இயக்குனர் அசோகன், செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், பொது மேலாளர் ஆறுமுகம், வில்லியனூர் தொகுதி தி.மு.க. செயலாளர் மணிகண்டன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், செல்வநாதன், தர்மராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தவளங்குப்பம் அருகே புதுக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால்
    • திருமண நிகழ்ச்சிக்காக வேணுகோபால் அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

    புதுச்சேரி:

    தவளங்குப்பம் அருகே புதுக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால்.  சலவை தொழிலாளி. இவரது மனைவி சாந்தா 73.  நேற்று அந்த கிராமத்தில் நடைபெற்ற திருமண முகூர்த்தக்கால் நலங்கு நிகழ்ச்சிக்காக வேணுகோபால் அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டின் கதவை மூடாமல் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாந்தாவின் முகத்தில் துணியை மூடி அழுத்திக்கொண்டு கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்தனர்.

    சாந்தாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் லேசான காயம் அடைந்த சாந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரூ.39 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கூனிச்சம்பட்டு சங்கரா பரணி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.
    • இதனை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.39 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கூனிச்சம்பட்டு சங்கரா பரணி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.

    மேலும் மணலிப்பட்டு ஏரியில் தென்கிழக்கு பகுதியை ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியும், கைக்கிலப்பட்டு சங்கரா பரணி ஆற்றில் மேற்கு கரையில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பலப்படுத்தும் பணியும் நடைபெற உள்ளது இதனை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

    அதுபோல் கொ.மண வெளி கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் புதிதாக மின்சார டிரான்ஸ்பார்மரை அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார். ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற வுள்ள பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் நமச்சிவாயத்துக்கு அந்தந்த பகுதி கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி கள், மின்துறை அதிகாரிகள், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரங்கசாமி நிர்வாகத்தை நடத்துவதில் ஞானசூனியமாக செயல்படுவதால், அதிகாரிகள் நீட்டும் கோப்புகளில் ஏன் என்று கேட்காமல் கையெழுத்திட்டு வருகிறார்.
    • விஷ சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் புதுவையிலிருந்து சென்றுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    யூனியன் பிரதேசங்களின் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் வேலை. அதிகாரிகளை நிர்வகிக்கும் அதிகாரம் இல்லை என்றால் துணை நிலை ஆளுநர்களை மதிக்கமாட்டார்கள் என்பதால் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார்.

    முதலமைச்சர் ரங்கசாமி நிர்வாகத்தை நடத்துவதில் ஞானசூனியமாக செயல்படுவதால், அதிகாரிகள் நீட்டும் கோப்புகளில் ஏன் என்று கேட்காமல் கையெழுத்திட்டு வருகிறார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் என டெல்லி சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பு புதுவை உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

    இதை செயல்படுத்த கவர்னர் தமிழிசை மறுக்கிறார். அவரின் பகல் கனவு பலிக்காது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராய உயிரிழப்புக்கு பொறுப்பேற்று 2 தமிழக அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்துள்ளார்.

    விஷ சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் புதுவையிலிருந்து சென்றுள்ளது. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறிய புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை பதவிநீக்கம் செய்ய முடியுமா? பா.ஜனதாவினர் ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்லுயிர் பேரவையும், வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து நடத்திய சர்வதேச பல்லுயிர் தின விழாவில் ரங்கசாமி கலந்து கொண்டார்.
    • புதுவை வனத்துறை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    கடந்த 13-ந் தேதி காரைக்கால் துறைமுகப்பகுதியில் 45 அடி நீளமுள்ள 15 டன் எடை உள்ள திமிங்கலம் கரை ஒதுங்கியது. அது உயிருடன் இருந்ததால் பட்டினச்சேரி மீனவர்கள் 13 பேரும், துறைமுக ஊழியர்கள் 7 பேரும் கப்பல் படை உதவியுடன் காலை 11 முதல் இரவு 7 வரை மீட்பு பணியில் ஈடுபட்டு மீண்டும் ஆழ்கடலில் சேர்த்தனர்.

    உயிரை பணயம் வைத்து திமிங்கலத்தை கடலுக்குள் கொண்டு செல்ல உதவிய மீனவர்கள், துறைமுக ஊழியர்கள் 20 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    புதுவை பல்லுயிர் பேரவையும், வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து நடத்திய சர்வதேச பல்லுயிர் தின விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு இதனை வழங்கினார்.

    மேலும் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் தொடங்கப்பட்ட 14 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.60 ஆயிரமும், உழவர்கரை நகராட்சிக்கு ரூ.1 லட்சமும் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். அத்துடன் புதுவை வனத்துறை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், தலைமை வனஉயிரினக் காப்பாளர் வஞ்சுளவள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.

    • ரூ.150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் திட்ட ஆலோசகராக தேர்வாகியுள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் "சுதேஷ் தர்ஷன் 2.0" திட்டத்தின் கீழ் ரூ.150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இதற்கான மூலத்திட்டம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் திட்ட ஆலோசகராக தேர்வாகியுள்ளது.

    இந்த நிறுவனம், சுற்றுலாத்துறை இடையே யான திட்ட ஆலோசனை ஒப்பந்த நிகழ்ச்சி முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை இயக்குநர் பிரியர்தர்ஷினி மற்றும் தனியார் நிறுவன துறைத்தலைவர் ரத்தீஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    • புதுவை கடற்கரை சாலையில் ஏராளமான சிற்றுண்டி, விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்
    • இதனால் காந்தி திடல் கடைகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி காந்தி சிலை அருகே கடை அமைத்து வியாபாரிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையில் ஏராளமான சிற்றுண்டி, விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் அலங்கோலமாக கடற்கரை காட்சியளித்தது.

    இதனால் காந்தி திடல் அருகே இடம் ஒதுக்கப்பட்டு அங்கு உணவுப்பொருட்கள், விளையாட்டு பொருட்கள் விற்கப்படுகிறது. சில மாதமாக கடற்கரை சாலையில் சிலர் கடைபோட்டு விற்பனை செய்கின்றனர்.

    இதனால் காந்தி திடல் கடைகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி காந்தி சிலை அருகே கடை அமைத்து வியாபாரிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து வியாபாரிகளை சமாதானப்படுத்தி கடற்கரை சாலையில் எந்த கடைகளும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

    • கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றிகரமான வக்கீல்களாக மாறலாம்.
    • ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 14-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. போக்சோ குற்ற வழக்குகள் மீதான விசாரணை, புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீ திமன்றத்தில் செயல்பட்டு வந்தது. போக்சோ வழக்கை தலைமை நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து வந்தார்.

    இந்நிலையில் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்க விரைவு நீதி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த போக்சோ நீதிமன்ற திறப்பு விழா இன்று நடந்தது. ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா போக்சோ விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நேரு எம்.எல்.ஏ , ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் மற்றும் புதுவை நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வக்கீல்கள் அமரும் இருக்கையில் நீதிபதி ராஜா, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது போக்சோ நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போக்சோ நீதிமன்ற நீதிபதி சோபனாதேவி தலைமையில் விசாரணை நடந்தது. முதல் குற்றவாளியை அழைத்த போது மின்சாரம் தடைபட்டது.

    இதனால் வந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர். அப்போது நீதிபதி ராஜா, சற்று கோபத்துடன் மின்சாரத்தை சரி செய்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? என கேட்டார். தொடர்ந்து ஊழியர்கள் மின் தடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 நிமிடம் மின்சாரம் இல்லை. இருப்பினும் 5 குற்றவாளிகள் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    இதன்பின் அனைவரும் விழா மேடைக்கு வந்தனர். அங்கு போக்சோ விரைவு நீதிமன்ற பெயர் பலகையை நீதிபதி ராஜா திறந்து வைத்தார்.

    விழாவில் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது:-

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தில் 29 நீதிமன்றங்களாக செயல்பட உள்ளது. புதுவையில் மட்டும் போக்சோ நீதிமன்றத்தோடு 18 நீதிமன்றங்கள் செயல்பட உள்ளன. அதிசயம், அற்புதமான மிக கடுமையான சட்டங்கள் போக்சோ நீதிமன்றத்தில் உள்ளன.

    பல வழக்கில் கொலை, கொள்ளை அடித்தவர்களுக்கு மிகப்பெரும் தண்டனை தரப்படுகிறது. போக்சோவில் விசித்திரமான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான சான்றிதழ், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு காயம், சாட்சிகள் இருந்தால் அவர் குற்றவாளி. குற்றத்தை செய்யவில்லை என அவரின் வக்கீல்கள்தான் நிரூபிக்க வேண்டும்.

    குழந்தைகளை பயமுறுத்துவதுபோல கேள்வி கேட்க முடியாது. போக்சோ குற்றத்தில் ஈடுபட்டால், இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள்தண்டனை விதிக்கப்படும். வக்கீல்கள் போக்சோ வழக்கை சாதாரணமாக நடத்தி விட முடியாது.

    இந்த வழக்கிற்கு இங்கு மட்டும்தான் ஜாமீன் பெற முடியும். ஒரு ஆண்டுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கை கையாள வக்கீல்கள் திறமை களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தையின் விபரங்களை வெளியில் தெரிவிக்கக்கூடாது. பெற்றோர்களால் வழக்கை நடத்த முடியாவிட்டால், சட்டப்பணிகள் ஆணையம் மூலம் வக்கீல்களை பெறலாம்.

    பாதிக்கப்பட்ட குழந்தை என நீதிபதி முடிவு செய்துவிட்டால், வழக்கு நடைபெறும்போதே குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட முடியும். கொடுமையான குற்றம் செய்திருந்தால் மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.

    காலங்கள் மாறி வருகிறது. காலதாமதமின்றி நீதி வழங்கப்படுகிறது. சட்டங்களை அறிந்து கொள்ளாமல் வக்கீல்கள் நீதிமன்றதுக்கு வர முடியாது. வெற்றிகரமான வக்கீல்களாக மாற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். சட்டங்களை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வக்கீல்கள் எப்படி, எதை பேச வேண்டும் என அறிந்து பேச வேண்டும். இதனால் வக்கீலும், வக்கீல் தொழிலும், நீதிமன்றமும், நாடும் உயரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×