என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காந்தி சிலை எதிரே வியாபாரிகள் நூதன போராட்டம்
    X

    காந்தி சிலை அருகே கடை அமைத்து வியாபாரிகள் நூதன போராட்டம் நடத்திய காட்சி.

    காந்தி சிலை எதிரே வியாபாரிகள் நூதன போராட்டம்

    • புதுவை கடற்கரை சாலையில் ஏராளமான சிற்றுண்டி, விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்
    • இதனால் காந்தி திடல் கடைகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி காந்தி சிலை அருகே கடை அமைத்து வியாபாரிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையில் ஏராளமான சிற்றுண்டி, விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் அலங்கோலமாக கடற்கரை காட்சியளித்தது.

    இதனால் காந்தி திடல் அருகே இடம் ஒதுக்கப்பட்டு அங்கு உணவுப்பொருட்கள், விளையாட்டு பொருட்கள் விற்கப்படுகிறது. சில மாதமாக கடற்கரை சாலையில் சிலர் கடைபோட்டு விற்பனை செய்கின்றனர்.

    இதனால் காந்தி திடல் கடைகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி காந்தி சிலை அருகே கடை அமைத்து வியாபாரிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து வியாபாரிகளை சமாதானப்படுத்தி கடற்கரை சாலையில் எந்த கடைகளும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

    Next Story
    ×