என் மலர்
புதுச்சேரி
- கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றிகரமான வக்கீல்களாக மாறலாம்.
- ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 14-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. போக்சோ குற்ற வழக்குகள் மீதான விசாரணை, புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீ திமன்றத்தில் செயல்பட்டு வந்தது. போக்சோ வழக்கை தலைமை நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து வந்தார்.
இந்நிலையில் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்க விரைவு நீதி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த போக்சோ நீதிமன்ற திறப்பு விழா இன்று நடந்தது. ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா போக்சோ விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நேரு எம்.எல்.ஏ , ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் மற்றும் புதுவை நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
வக்கீல்கள் அமரும் இருக்கையில் நீதிபதி ராஜா, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது போக்சோ நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போக்சோ நீதிமன்ற நீதிபதி சோபனாதேவி தலைமையில் விசாரணை நடந்தது. முதல் குற்றவாளியை அழைத்த போது மின்சாரம் தடைபட்டது.
இதனால் வந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர். அப்போது நீதிபதி ராஜா, சற்று கோபத்துடன் மின்சாரத்தை சரி செய்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? என கேட்டார். தொடர்ந்து ஊழியர்கள் மின் தடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 நிமிடம் மின்சாரம் இல்லை. இருப்பினும் 5 குற்றவாளிகள் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இதன்பின் அனைவரும் விழா மேடைக்கு வந்தனர். அங்கு போக்சோ விரைவு நீதிமன்ற பெயர் பலகையை நீதிபதி ராஜா திறந்து வைத்தார்.
விழாவில் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது:-
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தில் 29 நீதிமன்றங்களாக செயல்பட உள்ளது. புதுவையில் மட்டும் போக்சோ நீதிமன்றத்தோடு 18 நீதிமன்றங்கள் செயல்பட உள்ளன. அதிசயம், அற்புதமான மிக கடுமையான சட்டங்கள் போக்சோ நீதிமன்றத்தில் உள்ளன.
பல வழக்கில் கொலை, கொள்ளை அடித்தவர்களுக்கு மிகப்பெரும் தண்டனை தரப்படுகிறது. போக்சோவில் விசித்திரமான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான சான்றிதழ், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு காயம், சாட்சிகள் இருந்தால் அவர் குற்றவாளி. குற்றத்தை செய்யவில்லை என அவரின் வக்கீல்கள்தான் நிரூபிக்க வேண்டும்.
குழந்தைகளை பயமுறுத்துவதுபோல கேள்வி கேட்க முடியாது. போக்சோ குற்றத்தில் ஈடுபட்டால், இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள்தண்டனை விதிக்கப்படும். வக்கீல்கள் போக்சோ வழக்கை சாதாரணமாக நடத்தி விட முடியாது.
இந்த வழக்கிற்கு இங்கு மட்டும்தான் ஜாமீன் பெற முடியும். ஒரு ஆண்டுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கை கையாள வக்கீல்கள் திறமை களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தையின் விபரங்களை வெளியில் தெரிவிக்கக்கூடாது. பெற்றோர்களால் வழக்கை நடத்த முடியாவிட்டால், சட்டப்பணிகள் ஆணையம் மூலம் வக்கீல்களை பெறலாம்.
பாதிக்கப்பட்ட குழந்தை என நீதிபதி முடிவு செய்துவிட்டால், வழக்கு நடைபெறும்போதே குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட முடியும். கொடுமையான குற்றம் செய்திருந்தால் மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.
காலங்கள் மாறி வருகிறது. காலதாமதமின்றி நீதி வழங்கப்படுகிறது. சட்டங்களை அறிந்து கொள்ளாமல் வக்கீல்கள் நீதிமன்றதுக்கு வர முடியாது. வெற்றிகரமான வக்கீல்களாக மாற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். சட்டங்களை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வக்கீல்கள் எப்படி, எதை பேச வேண்டும் என அறிந்து பேச வேண்டும். இதனால் வக்கீலும், வக்கீல் தொழிலும், நீதிமன்றமும், நாடும் உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சு
- குழந்தைகளுக்கு கிடைக்கும் தீர்ப்பின் மூலம் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று போக்சோ விரைவு நீதிமன்ற திறப்பு விழா நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவை, காரைக்காலில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப் பட்டுள்ளது. புதுவையில் போக்சோ விரைவு நீதிமன்றம் அமைத்து, வழக்குகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இதன்படி இப்போது விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் வக்கீல்கள், நீதிபதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தரும். விரைவான நீதி குழந்தை களுக்கு கிடைக்கும் வகை யில் இப்போது நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கிடைக்கும் தீர்ப்பின் மூலம் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும். மேலும் தேவையான நீதிமன்றங்களையும் அரசு கட்டித்தரும்.
ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் கருத்தரங்கு கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையை சேர்ந்த இளம் வக்கீல்களுக்கு, நீதிபதிக ளுக்கு தேவையான அனுப வங்களை ஐகோர்ட்டு நீதிபதிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வாசலில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
- வீட்டு நிகழ்ச்சியில் அழுவதை போல் அழுதது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
புதுவை அருகே தமிழக பகுதியான பூத்துறை-பெரம்பை சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் பட்டானூர், பூத்துறை, பெரம்பை, வாழப்பட்டாம்பாளையம் பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். திருச்சிற்றம் பலம் கூட்ரோட்டிலிருந்து வில்லியனூர் செல்ல இது பிரதான சாலை என்பதால் குண்டும் குழியுமான இந்த சாலையில் செல்ல பொதுமக்கள் பயந்து புதுவையை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பூத்துறை, பெரம்பை பொதுமக்கள் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு செல்ல இந்த வழியை பயன்படுத்துவார்கள். ஆனால் சாலையில் மோசமான பள்ளங்கள் இருப்பதால் நோயாளிகள் இந்த வழியாக செல்வதில்லை. மாறாக புதுவையை சுற்றி பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சாலையை சீரமைத்து தரக்கோரி பட்டானூர் பூத்துறை பெரம்பை வாழப்பட்ட பாளையம் பகுதி பொது மக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை சாலை போட வில்லை.
இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பூத்துறை முகாம் சார்பில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வாசலில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் கல்பனா பொன்னிவளவன் தலைமையில் நடந்த ஒப்பாரி ஆர்ப்பாட்டத்தில் மாநில வெளியீட்டு மைய செயலாளர் பொன்னி வளவன் வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன் வழக்கறிஞர் அணி தலித் ராமதாஸ் அய்யா பாலு கிளியனூர் ஒன்றிய செயலாளரை ஈழத் தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் குண்டும் குழியுமான சாலையில் கீழே விழுந்து கைகால் பாதிப்படைந்த உறவினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு இறப்பு வீட்டு நிகழ்ச்சியில் அழுவதை போல் அழுதது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டக்காரர்கள் பூத்துறை-பெரம்பை சாலையில் உடனே தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சரத் பாலாஜி சந்திரன், ராஜசேகர் சுந்தர் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.
- 3 ஆண்டுகளாக கோட்டக்குப்பம் பகுதியில் ஆட்டோ தொழில் செய்து வருகிறார்.
- மோட்டார் சைக்கிள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆன்லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் சதீஷ்குமார், ஜீவரத்தினம் ஆகியோர் அந்தப் பகுதிக்குச் சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்தனர். அவரது செல்போனை சோதனை செய்ததில் அதில் பல ஆண்டுகளாக 3 நம்பர் லாட்டரியை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்தது பதிவாகி இருந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கோட்டக்குப்பத்தை அடுத்த கோட்டைமேடு ரெயின்போ நகரைச் சேர்ந்த அபுல் ஹசன் (42), என்பதும் பல ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வந்த அபுல் ஹசன் கடந்த 3 ஆண்டுகளாக கோட்டக்குப்பம் பகுதியில் ஆட்டோ ெதாழில் செய்து வருகிறார்.
இந்த தொடர்பை வைத்துக்கொண்டு இவர் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்து வந்தது ெதரியவந்தது. இதையடுத்து அபுல்ஹசனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு அவர் பயன்படுத்திய செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
- சப்-இன்ஸ் பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை காலப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடி திருக்குளம் வீதியைச் சேர்ந்தவர் குமரகுரு (வயது 47).
இவர் தொடர்ந்து மது குடித்து வந்த நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது உறவினர்கள் மருத்துவ மனையில் சேர்த்தனர். தொடர் குடியால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்த டாக்டர் இனிமேல் மது அருந்தக்கூடாது என குமரகுருவுக்கு அறிவுரை கூறினார். டாக்டர் கூறியதை ஏற்ற குமரகுரு கடந்த 3 மாதமாக மது அருந்தாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு காலாப்பட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோ தித்த டாக்டர்கள் வரும் வழியி லேயே குமரகுரு இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து குமரகுருவின் மருமகன் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் காலப்பட்டு சப்-இன்ஸ் பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
- விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை குரும்பாபேட் பாண்லே தலைமை அலுவலகம் முன்பு பாண்லே தொழிலாளர்கள், ஏ.ஐ.டி.யூ.சி, அரசு ஊழியர் சம்மேளனம், தொ.மு.ச, நாம் தமிழர் தொழிலாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
பாண்லே சங்க நிர்வாகி கள் முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் தொழிற்சங்க தலைவர் ரமேஷ், ஏ.ஐ.டி.யூ.சி செயலாளர் முத்துராமன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் சண்முகம், வில்வலிங்கம், அன்பரசு, காசி, வீரப்பன், துரைரங்கன், தன்ராஜ், ராமன், அரவிந்த், கஜேந்திரன், ஜெயபால், ஏழுமலை, செந்தில்குமார், தமிழ்செல்வன், அழகப்பன், ஞானமூர்த்தி, கண்ணன், சரவணன், சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊழலாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும் ரூ.20 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தி பாண்லே நிர்வாக அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
- பொதுப்பணித்துறைக்கு வையாபுரி மணிகண்டன் கண்டனம்
- மக்கள் பள்ளங்களில் சிக்கி காயமடைவதை தடுக்க பிரதி பலிப்பான்கள் பேரிகார்டுகள் வைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை முத்தியால் பேட்டை பெருமாள் கோவில் வீதியில் பொதுப்பணித் துறையினர் ½ கிலோமீட்டர் தூரம் சிமெண்டு சாலையை பெயர்த்து குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக சாலைகள் பெயர்க்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு பின்னர் மணல் கொண்டு மூடப்படுகிறது.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே அபாயகரமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை பள்ளங்களில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். பொதுபணி துறையின் அலட்சிய போக்கை வன்மையாக கண்டிக்கி றோம்.
சிமெண்டு சாலையை பெயர்த்து குழாய் அமைக்கும் போது குறிப்பிட்ட மீட்டர் இடைவெளியில் குழாய்களை பொருத்தி பணிகளை முடித்து அடுத்த பகுதி பணிகளை தொடங்க வேண்டும்.
மக்கள் பள்ளங்களில் சிக்கி காயமடைவதை தடுக்க பிரதி பலிப்பான்கள் பேரிகார்டுகள் வைக்க வேண்டும்.
இதைவிடுத்து நீளமாக பள்ளம் தோண்டி பணி களை முடித்தபின் சாலை அமைக்க திட்டமிடுவது அதிகாரிகளின் திறமை யின்மையை காட்டுகிறது. எனவே பொதுப்பணித் துறையினர் உடனடியாக பணிகள் முடிந்த இடத்தில் சிமெண்ட்டு சாலைகளை சீரமைக்க வேண்டும். இரவு நேரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தடுப்புகள், பிரதிப லிப்பான்களை பொருத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
- பாதிக்கப்பட்ட மாணவியும் அகமதும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்து வரும் பெண்ணும், எம்.எஸ்.சி. படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த அகமத் என்ற மாணவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அகமத் அவரது இன்ஸ்டாகிராமில் அந்த மாணவியுடன் எவ்வாறெல்லாம் பழகினார் என்பது குறித்து தவறான தகவல்களை பரப்பி உள்ளார்.
இதுகுறித்து புதுவை நீதிமன்றத்தில் அந்த மாணவி வழக்கு தொடுத்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலாப்பட்டு போலீசார் மாணவர் அகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியும் அகமதும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- புளூ ஸ்டார் பள்ளி மாணவர்கள் 3 தங்க பதக்கங்களையும், 3 வெள்ளி பதக்கங்களையும், 6 வெண்கல பதக்கங்களையும் பெற்றனர்.
- உடற்பயிற்சி ஆசிரியை நளினி, உடற்பயிற்சி ஆசிரியர் பார்த்தசாரதி ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரும்பாத்தபுரம் புளூ ஸ்டார் மேல்நிலைப் பள்ளியில் 2022-23 கல்வியாண்டில் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
இந்த விழாவில், பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான டாக்டர்.மெய்வழி ரவிக்குமார் முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார், துணை முதல்வர் சாலை சிவசெல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 4 தங்கப்பதக்கம், 2 வெண்கல பதக்கங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர்.
மேலும் 4 வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று 13 முதல் பரிசுகளையும், 4 இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளையும் பெற்ற மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.
மாவட்ட அளவில் நடந்த தடகளப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்ற மாணவர்களும் பாராட்டப்பட்டனர். அேமச்சுர் அத்லெட்டிக் அசோசியேசன் நடத்திய மாநில அளவிலான தடகள போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனம் மற்றும் மாகி பகுதியிலிருந்து 800-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கு பெற்ற போட்டிகளில் புளூ ஸ்டார் பள்ளி மாணவர்கள் 3 தங்க பதக்கங்களையும், 3 வெள்ளி பதக்கங்களையும், 6 வெண்கல பதக்கங்களையும் பெற்றனர்.
அவர்களையும் பள்ளியின் சார்பில் பாராட்டப் பட்டது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் பள்ளி மாணவர் சக்திவேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கல பதக்கத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
பீகாரில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பள்ளி மாணவர் வீரப்பிரணவ் கலந்து கொண்டு பள்ளிக்கு சிறப்பு சேர்த்தார். இந்த இருவரையும் பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் டாக்டர்.மெய்வழி ரவிக்குமார் பாராட்டினார்.
மேலும் பள்ளியின் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று அதிக பதக்கங்களை பெற்றதற்கு காரணமாக இருந்த புளூ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அரேனா பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி ஆசிரியை நளினி, உடற்பயிற்சி ஆசிரி யர் பார்த்தசாரதி ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.
- காரைக்கால் வரிச்சிக்குடி அருகே டிராக்டர் மோதி முதியவர் பலியானார்.
- வேகமாக வந்த டிராக்டர், காத்த முத்து மீது பயங்கரமாக மோதியது.
புதுச்சேரி:
காரைக்கால் கோட்டு ச்சேரியை அடுத்த வரி ச்சி க்குடி பகுதியை ச்சே ர்ந்த வர் காத்தமுத்து(வயது60). இவர் கடந்த ஏப்ரல் 13-ந் தேதிவரிச்சிச்குடி பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மெயின் சாலையையை ஒட்டி உள்ள ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த டிராக்டர், காத்த முத்து மீது பயங்கரமாக மோதியது. இதில், காத்தமுத்து தலையில் பலத்த காயமடைந்தார்.உடனே அங்கிருந்தவர்கள், காத்தமுத்துவை, வரிச்சிச்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சை க்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டார்.
அங்குள்ள டாக்டர்கள், புதுச்சேரி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்குமாறு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி க்கு கொண்டு செல்லப்பட்டர். அங்கு சிகிச்சையில் இருந்த காத்தமுத்து சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து அவரது உறவினர் கோவி ந்தசாமி, காரைக்கால் போக்குவரத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
- பொதுமக்கள் உணவுகளை வாங்கி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
- டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் சினிமா தியேட்டர்களுடன் கூடிய வணிக வளாகம் உள்ளது. நேற்று விடு முறையையொட்டி வணிக வளாகத்திலும், தியேட்டர்க ளிலும் அதிக ளவு பொதுமக்கள் கூட்டம் இருந்தது.
வணிக வளாகத்தின் 3-ம் தளத்தில் உள்ள உணவு அரங்கில் பல நிறுவனங்கள் உள் ளன. இதில் பொதுமக்கள் உணவுகளை வாங்கி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது இரவு 7 மணி அளவில் ஒரு உணவகத்தில் திடீரென தீ பற்றியது. அருகிலிருந்த மற்றொரு கடைக்கும் தீ பரவியது. உடனடியாக ஊழியர்கள் தீயணைப்பான்கள் உதவியுடன் தீயை அணைத்
தனர். இருப்பினும் அங்கிருந்து பொதுமக்கள் அலறிய டித்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து வணிக வளாக நிறுவனத்தினர் 3-ம் தளத்திலிருந்த அனைத்து கடைகளையும் மூடி, பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றினர். 4-ம் தளத்தில்தான் 5 தியேட்டர்கள் உள்ளன.
அங்கு மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த வர்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். இதன்பிறகு தீ முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டதால் மேலும் பரவும் வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின் மீண்டும் பொதுமக்கள் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் உணவகங்கள் திறக்கப்பட்டது.
இதனால் புதுவை- கடலூர் சாலையில் பரபரப்பு நிலவியது. உருளையான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிபத்து ஏற்பட்டது எப்படி.? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் அவர்கள் இல்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி(வயது32). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காமராஜிக்கும் அவரது மனைவி சிவரஞ்சனிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வழக்கம் போல் காமராஜ் வேலைக்கு சென்று விட்டார்.
மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய போது மனைவி மற்றும் குழந்தைகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார். உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் அவர்கள் இல்லை.
இதையடுத்து காமராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மாயமானது குறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






