என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போக்சோ நீதிமன்றம் மூலம் குழந்தைகளுக்கு எதிரானகுற்றங்கள் தடுக்கப்படும்
    X

    கோப்பு படம்.

    போக்சோ நீதிமன்றம் மூலம் குழந்தைகளுக்கு எதிரானகுற்றங்கள் தடுக்கப்படும்

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சு
    • குழந்தைகளுக்கு கிடைக்கும் தீர்ப்பின் மூலம் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று போக்சோ விரைவு நீதிமன்ற திறப்பு விழா நடந்தது.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுவை, காரைக்காலில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப் பட்டுள்ளது. புதுவையில் போக்சோ விரைவு நீதிமன்றம் அமைத்து, வழக்குகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இதன்படி இப்போது விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் வக்கீல்கள், நீதிபதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தரும். விரைவான நீதி குழந்தை களுக்கு கிடைக்கும் வகை யில் இப்போது நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கிடைக்கும் தீர்ப்பின் மூலம் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும். மேலும் தேவையான நீதிமன்றங்களையும் அரசு கட்டித்தரும்.

    ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் கருத்தரங்கு கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையை சேர்ந்த இளம் வக்கீல்களுக்கு, நீதிபதிக ளுக்கு தேவையான அனுப வங்களை ஐகோர்ட்டு நீதிபதிகள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×