என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாலை பள்ளத்தில் விழுந்து பொதுமக்கள் படுகாயம்
    X

    கோப்பு படம்.

    சாலை பள்ளத்தில் விழுந்து பொதுமக்கள் படுகாயம்

    • பொதுப்பணித்துறைக்கு வையாபுரி மணிகண்டன் கண்டனம்
    • மக்கள் பள்ளங்களில் சிக்கி காயமடைவதை தடுக்க பிரதி பலிப்பான்கள் பேரிகார்டுகள் வைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை முத்தியால் பேட்டை பெருமாள் கோவில் வீதியில் பொதுப்பணித் துறையினர் ½ கிலோமீட்டர் தூரம் சிமெண்டு சாலையை பெயர்த்து குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக சாலைகள் பெயர்க்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு பின்னர் மணல் கொண்டு மூடப்படுகிறது.

    இதனால் சாலைகளில் ஆங்காங்கே அபாயகரமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை பள்ளங்களில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். பொதுபணி துறையின் அலட்சிய போக்கை வன்மையாக கண்டிக்கி றோம்.

    சிமெண்டு சாலையை பெயர்த்து குழாய் அமைக்கும் போது குறிப்பிட்ட மீட்டர் இடைவெளியில் குழாய்களை பொருத்தி பணிகளை முடித்து அடுத்த பகுதி பணிகளை தொடங்க வேண்டும்.

    மக்கள் பள்ளங்களில் சிக்கி காயமடைவதை தடுக்க பிரதி பலிப்பான்கள் பேரிகார்டுகள் வைக்க வேண்டும்.

    இதைவிடுத்து நீளமாக பள்ளம் தோண்டி பணி களை முடித்தபின் சாலை அமைக்க திட்டமிடுவது அதிகாரிகளின் திறமை யின்மையை காட்டுகிறது. எனவே பொதுப்பணித் துறையினர் உடனடியாக பணிகள் முடிந்த இடத்தில் சிமெண்ட்டு சாலைகளை சீரமைக்க வேண்டும். இரவு நேரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தடுப்புகள், பிரதிப லிப்பான்களை பொருத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×