என் மலர்
புதுச்சேரி
- அ.தி.மு.க வலியுறுத்தல்
- விஷ மெத்தனாலை வாங்கிய சாராய வியாபாரிகள் யார்-யார்?
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:- மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மெத்தனாலை புதுவை வில்லியனூர் சாராய வியாபாரியிடம் விற்பனை செய்துள்ளனர். இதனை கண்டறிய வேண்டியது புதுவை கலால் துறையின் கடமையாகும்.
புதுவை கலால் துறை ஆணையரான கலெக்டர் இதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்.?
விஷ மெத்தனாலை தண்ணீர் கலந்து விற்பனை செய்தால் தமிழகம் போல் இங்கும் பலர் மரணம் அடைய வாய்ப்பு உண்டு. இது எதையும் உணராமல் கலால்துறை ஆணையர் இந்த பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் பாராமுகமாக உள்ளார்.
இது பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிப்பதாக உள்ளது. புதுவை போலீஸ் துறையும், கலால் துறையும் இணைந்து விஷ மெத்தனாலை வாங்கிய சாராய வியாபாரிகள் யார்-யார்? என்பதை அறிந்து அவர்களிடம் இருந்து விஷமெத்தனாலை கைப்பற்ற வேண்டும்.
புதுவையில் அனுமதி பெறப்பட்டுள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு வரக்கூடிய மெத்தனாலை குறுக்கு வழியில் விற்பனை செய்ய பல நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்காவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு புதுவைக்கு ஏற்படும்.
இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவு
- ஆய்வின்போது அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் உடனிருந்தார்.
புதுச்சேரி:
புதுவையில் சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் இடமாக நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. படகு குழாமில் முன்தினம் மரத்தினால் அமைக்கப் பட்டிருந்த படகு பாலம் உடைந்து உள்வாங்கியது.
இதில் சுற்றுலா பயணிகள் தண்ணீரில் விழுந்தனர். அவர்களை ஊழியர்கள் மீட்டனர். ஆனாலும் நேற்று வழக்கம் போல படகுசவாரி தொடங்கப்
பட்டது. இந்நிலையில் தகவலறிந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் படகு குழாமிற்கு சென்றார். அங்கு உடைந்த நிலையில் இருந்த படகு பாலத்தை பார்வையிட்டார்.
பின்னர் 100 பேர் ஏறி நின்றாலும் உடையாத அளவுக்கு பனை மரத்தால் வலுவான பாலம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்த ரவிட்டார். ஆய்வின்போது அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் உடனிருந்தார்.
- மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
- அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இடமாற்றம் செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு துறைகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் மற்றும் இடைநிலை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு மற்றும் புகார் எழுந்தால் அத்தகைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இடமாற்றம் செய்ய வேண்டும்.
கலால் துறை அதிகாரி, இந்து அறநிலையத்துறை ஆணையர், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர், வேளாண் துறை இயக்குனர், சட்டத்துறை அதிகாரி, அமுதசுரபி உயரதிகாரி ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும், பொது மக்கள் மற்றும் ஊழியர்கள் மூலமாக அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரிகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சேலியமேடு அரசு நடுநிலைப் பள்ளியின் 4 வகுப்பறைகளுக்கு கரும் பலகைகள் வழங்கப்பட்டது.
- பக்கிரிசாமி, பழனிசாமி, ஜீவரத்தினம் ஆதிநாராய ணன், லட்சுமி, ரமணி, பத்மா, சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு 1977-ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் குமரவேலு தலைமையில் பள்ளி அளவில் 425 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி ரோஷினிக்கு ரூ.5 ஆயிரமும் , 410 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்த மாணவி அபிநயாவுக்கு ரூ.3 ஆயிரமும், 400 மதிப்பெண் பெற்று 3-வது இடம் பிடித்த மாணவி அனுப்பிரியாவுக்கு ரூ.2 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சேலியமேடு அரசு நடுநிலைப் பள்ளியின் 4 வகுப்பறைகளுக்கு கரும் பலகைகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமை ஆசிரியர் மணிவண்ணன், பிரான்ஸ் கண்ணபிரான், நிர்வாகிகள் பாலசுந்தரம், தட்சிணா மூர்த்தி, அய்யனார், கனகராசு, புவனேஸ்வரன், தமிழ்வளவன் சுப்பிரமணி, விஸ்வநாதன், முரளி, கிருஷ்ணமூர்த்தி, நாகமுத்து, பக்கிரிசாமி, பழனிசாமி, ஜீவரத்தினம் ஆதிநாராய ணன், லட்சுமி, ரமணி, பத்மா, சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜிப்மர் ஊழியர்கள் இதுபற்றி கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி ஐ.ஆர்.பி.என். போலீசார் சணில்குமார் மற்றும் அவரது சகோதரர் சுகேஷ் ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு ஆனந்தாநகரை சேர்ந்தவர் தீபக் தாமஸ். இவரது மனைவி அனுமோல் (வயது34). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
இவரிடம் புதுவை காவல்துறையில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரராக பணிபுரியும் சணில்குமார்(41) மற்றும் இவரது அண்ணன் சுகேஷ் (43) ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை அருகே மொரட்டாண்டியில் குறைந்த விலையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறினர்.
இதனை நம்பி அனுமோல் வீட்டுமனை வாங்க சணில்குமார் மற்றும் சுகேஷிடம் முன் பணம் கொடுத்தார்.
இதுபோல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அதிகாரிகள், தொழில்நுட்ப ஊழியர்கள், நர்சுகள் 17 பேர் வீட்டுமனை வாங்க ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சணில்குமார் மற்றும் சுகேஷிடம் ரூ.40 லட்சம் முன்பணம் கொடுத்தனர்.
ஆனால் அவர்கள் வீட்டுமனை வாங்கிதர வில்லை. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்ட போது பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜிப்மர் ஊழியர்கள் இதுபற்றி கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி ஐ.ஆர்.பி.என். போலீசார் சணில்குமார் மற்றும் அவரது சகோதரர் சுகேஷ் ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- மக்களோடு மக்களாக சிக்னலில் நின்று காத்திருந்து பயணம் செய்ய விரும்புகிறேன்.
- கோடை வெயிலில் மக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி, தலைமை செயலர் ஆகியோர் வாகனங்களில் செல்லும் போது, போக்குவரத்து சிக்னல்கள் நிறுத்தப்பட்டு வி.ஐ.பிக்கள் சென்ற பின்பு சிக்கனல்கள் இயக்கப்படுவது வழக்கம்.
இதற்கிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிக்னலில் நிற்க மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பகல் நேரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வாகனம் சென்றபோது அவருக்காக போக்குவரத்து சிக்னல் நிறுத்தப்பட்டு அவரது வாகனம் சென்ற பின்பு சிக்னல் இயக்கப்பட்டது.
தனது வாகனத்தால் பொதுமக்கள் வெயிலில் அவதிப்படுவதை கண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி போலீசாருக்கு திடீர் உத்தரவு பிறப்பித்தார்.
எனது வாகனம் செல்லும் போது சிக்னல்களை நிறுத்தி யாரையும் காத்திருக்க வைக்க வேண்டாம். மக்களோடு மக்களாக சிக்னலில் நின்று காத்திருந்து பயணம் செய்ய விரும்புகிறேன்.
கோடை வெயிலில் மக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்த உத்தரவை முன் உதாரணமாக கொண்டு அமைச்சர்கள், அதிகாரிகளும் சிக்னலில் காத்திருந்து செல்வார்களா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
- எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
- 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்கா மீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் உற்சவம் ஜுன் 1-ந் தேதி தேதி நடக்கிறது இதையொட்டி, கூடப்பாக்கம் நிமிலீஸ்வரர் உழவாரப்பணி திருக்கூட்டம் சார்பில் திருக்காமீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது. உழவாரப்பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார். 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன், தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வநாதன், தர்மராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜனிடம் கொடுத்தனர்.
- கார்த்திகேயன், முகிலன், வேல்முருகன், மனோஜ், அன்பரசன், பாலன், அஷ்ரப் அலி, கண்ணன், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு ஜோதி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது.
இந்த ஜோதியை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜனிடம் கொடுத்தனர்.
ஜோதியை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு அண்ணாசாலை, காமராஜர் சாலை வழியாக ராஜீவ் காந்தி சிலைக்கு பாதயாத்திரையாக கொண்டு சென்றார். பின்னர் காங்கிரஸ் தலைவர்களுடன் ராஜீவ் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் வேல்முருகன், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தியாகராஜன், ராஜ்குமார், மாநில பொதுச் செயலாளர்கள் ரகுமான், தனுசு
வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆறுமுகம், விநாயகம், வீரமுத்து, மோகன், கிருஷ்ணராஜ் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கோவலன், பெருமாள், குருமூர்த்தி, சையத், சத்யநாராயணன், சுந்தரம், பிரதீப், சித்திக், ராகுல், அய்யப்பன், கார்த்திகேயன், முகிலன், வேல்முருகன், மனோஜ், அன்பரசன், பாலன், அஷ்ரப் அலி, கண்ணன், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
- அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை உருளை யன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராஜாநகர் பகுதியில் சுகாதாதுறையின் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலம் தீவிர காசநோய் கண்டுபிடிப்பு விழிப்பு ணர்வு முகாம் இன்று நடந்தது. முகாமினை நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதுப்பாளையம்
வார்டு பகுதியான ராஜாநகர், முத்தமிழ்நகர், அருந்ததிநகர், அய்யனார்நகர், சஞ்சய்காந்தி நகர் ,சுப்பையா நகர், மங்கலஷ்மி நகர், கண்ணன் நகர், போன்ற பகுதியில் உள்ள மக்கள் பயன்பெற்றனர்.
முகாமில் புதுவை அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
- அனைத்து போலீஸ் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் எந்நேரமும் தகவல் தெரிவிக்கலாம் அவர்களுடைய ரகசியம் பாதுகாக்கப்படும் என அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த 13-ம் தேதி விஷசாராயம் குடித்த 23 பேர் இறந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கடத்திய ஏழுமலை, ராஜா என்கிற பரகத்துல்லா, இவர்களுக்கு மெத்தனால் சப்ளை செய்த இளையநம்பி ராபர்ட் பிரபு ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாராயம் விற்பனை செய்த மரக்காணம் அமரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் .
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் ஆரோவில், கிளியனூர், கோட்டகுப்பம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட மாவட்ட முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் வைக்கப்பட்ட அறிவிப்பு பல பலகையில் கள்ளச்சாராயம், விஷ சாராயம், வெளிமாநில மது பாட்டில்கள் நடமாட்டத்தை பொதுமக்கள் தெரிவிக்க பிரத்தியேக வாட்ஸ் அப் எண் வழங்கப்பட்டு பொதுமக்கள் எந்நேரமும் தகவல் தெரிவிக்கலாம் அவர்களுடைய ரகசியம் பாதுகாக்கப்படும் என அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
- குத்து சண்டை போட்டிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
புதுச்சேரி:
பாண்டிச்சேரி அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் மற்றும் இந்திய இளைஞர் விடுதிகள் சங்கம் இனைத்து நடத்தும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
போட்டியில் புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த 13 வயது முதல் 33 வயதான மாணவர்கள் மற்றும் மாணவிகள் என 160 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை அமைச்சரும், ஒலிம்பிக் சங்க தலைவருமான தேனி..ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
2 நாட்கள் நடைபெறும் குத்து சண்டை போட்டியில் தேசிய அளவில் நடைபெறும் குத்து சண்டை போட்டிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- மரக்காணம், செங்கல்பட்டு பகுதிகளில் விஷ சாராயம் அருந்திய சம்பவத்தில் 23 பேர் இறந்தனர்.
- புதுவையிலிருந்து ஆந்திர மாநிலம் பதிவு எண் கொண் தனியார் பஸ்சில் வந்த ஒரே பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர்.
சேதராப்பட்டு:
மரக்காணம், செங்கல்பட்டு பகுதிகளில் விஷ சாராயம் அருந்திய சம்பவத்தில் 23 பேர் இறந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மற்றும் பிற மாநில மது பாட்டில்கள் நடமாட்டத்தை கண்காணித்து தடை செய்ய வேண்டுமென காவல்துறைக்கும் மதுவிலக்கு போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து கடத்தப்படும் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்களை தடுக்க புதுவை தமிழக பகுதியான மொரட்டாண்டி, கிளியனூர், கோட்டக்குப்பம், கீழ்புத்துப்பட்டு, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து வருவாய்துறை அதிகாரிகளும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மொரட்டாண்டி டோல்கேட் மதுவிலக்கு சோதனை சாவடியில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுவையிலிருந்து ஆந்திர மாநிலம் பதிவு எண் கொண் தனியார் பஸ்சில் வந்த ஒரே பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அந்தப் பஸ்சில் போலீசார் சோதனை செய்தனர். பஸ்சின் மேல் கூரையிலும் சென்று போலீசார் உடைமைகளை சோதனை செய்ததில் 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
ஒரு சாக்கு நிறைய மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பஸ்சின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த சோதனையால் மொரட்டாண்டி மதுவிலக்கு சோதனை சாவடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






