என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில அளவிலான குத்து சண்டை போட்டி
    X

    போட்டியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

    மாநில அளவிலான குத்து சண்டை போட்டி

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
    • குத்து சண்டை போட்டிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    புதுச்சேரி:

    பாண்டிச்சேரி அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் மற்றும் இந்திய இளைஞர் விடுதிகள் சங்கம் இனைத்து நடத்தும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

    போட்டியில் புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த 13 வயது முதல் 33 வயதான மாணவர்கள் மற்றும் மாணவிகள் என 160 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை அமைச்சரும், ஒலிம்பிக் சங்க தலைவருமான தேனி..ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

    2 நாட்கள் நடைபெறும் குத்து சண்டை போட்டியில் தேசிய அளவில் நடைபெறும் குத்து சண்டை போட்டிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    Next Story
    ×