என் மலர்
புதுச்சேரி

ஆரோவில் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.
பிரத்தியேக போன் நம்பருடன் அறிவிப்பு பலகை
- அனைத்து போலீஸ் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் எந்நேரமும் தகவல் தெரிவிக்கலாம் அவர்களுடைய ரகசியம் பாதுகாக்கப்படும் என அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த 13-ம் தேதி விஷசாராயம் குடித்த 23 பேர் இறந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கடத்திய ஏழுமலை, ராஜா என்கிற பரகத்துல்லா, இவர்களுக்கு மெத்தனால் சப்ளை செய்த இளையநம்பி ராபர்ட் பிரபு ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாராயம் விற்பனை செய்த மரக்காணம் அமரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் .
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் ஆரோவில், கிளியனூர், கோட்டகுப்பம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட மாவட்ட முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் வைக்கப்பட்ட அறிவிப்பு பல பலகையில் கள்ளச்சாராயம், விஷ சாராயம், வெளிமாநில மது பாட்டில்கள் நடமாட்டத்தை பொதுமக்கள் தெரிவிக்க பிரத்தியேக வாட்ஸ் அப் எண் வழங்கப்பட்டு பொதுமக்கள் எந்நேரமும் தகவல் தெரிவிக்கலாம் அவர்களுடைய ரகசியம் பாதுகாக்கப்படும் என அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.