search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Action against"

    • முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
    • சண்டை போட்டுத்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது தேவையற்றது.

    புதுச்சேரி:

    புதுவையில் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டத்துக்கு பின் புதுவையில் பா.ஜ.க. எழுச்சி பெற்றுள்ளது. புதுவை அரசுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

    உலகிற்கே வழிகாட்டும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டி யிட்டால் அது தமிழகத்திற்கே பெருமை.

    பிரதமர் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும். அவர் போட்டியிடும் தொகுதி எந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் என்பதற்கு வாரணாசி உதாரணம்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்து வரும் பிரச்சினைகள் தேவையில்லாத ஒன்று. சண்டை போட்டுத்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது தேவையற்றது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாநில தலைவர் சாமிநாதன், வி.பி. ராமலிங்கம்

    எம்.எல்.ஏ. பொதுச் செயலாளர் மோகன்குமார், துணை தலைவர்கள் தங்க விக்ரமன், முருகன், ஆகியோர் உடனிருந்தனர்.

    • மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
    • அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இடமாற்றம் செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு துறைகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் மற்றும் இடைநிலை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு மற்றும் புகார் எழுந்தால் அத்தகைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இடமாற்றம் செய்ய வேண்டும்.

    கலால் துறை அதிகாரி, இந்து அறநிலையத்துறை ஆணையர், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர், வேளாண் துறை இயக்குனர், சட்டத்துறை அதிகாரி, அமுதசுரபி உயரதிகாரி ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும், பொது மக்கள் மற்றும் ஊழியர்கள் மூலமாக அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரிகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எடையளவு சட்டத்தின் கீழ் 22 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 - 225130 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி, மீன் கடைகள், பழம் மற்றும் காய்கறிக் கடைகளில் எடையளவு சட்டத்தின் கீழ் சிறப்பாய்வு செய்தனர்.

    இந்த கூட்டாய்வின் போது எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 3 வியாபாரிகள் மீதும், எடையளவுகள் மறுமுத்திரையி டப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 19 வியாபாரிகள் மீதும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரை யிடாமல் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு, 2009-ம் வருட சட்டமுறை எடை யளவு சட்டத்தின் கீழ் முதல் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் கோர்ட்டு மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 - 225130 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), 1/13சி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட கலெக்டர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

    சிவகாசி தொழிலாளர் துணை ஆய்வாளர் முத்து, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் தயாநிதி, உமாமகேஸ்வரன், செல்வராஜ், பாத்திமா, துர்கா, முருகவேல் ஆகியோர் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    • போகலூர் யூனியன் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதலைவர் கூறினார்.
    • மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போகலூர் யூனியன் கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சிவசாமி வரவேற்றார்.

    இதில் துணைத் தலைவர் பூமிநாதன் பேசுகை யில், அரியகுடி, முத்துசெல்லா புரம், அ. புத்தூர், முஸ்லிம் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் ஒரு வரு டத்திற்கும் மேலாக காவிரி கூட்டுக் குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கூட நாங்கள் ஊர்களுக்குள் நுழைய முடியவில்லை என்றார்.

    அதற்கு பதில் அளித்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர், சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளது. அதை சீரமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு முடி யும் நிலையில் உள்ளது. கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

    தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், 15-வது நிதி குழு மூலம் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் அத்தியாவசிய பணிகள் நடைபெற உள்ளது. யூனி யன் கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை, மின்வாரிய துறையில் இருந்து அதி காரிகள் வருவது கிடை யாது. பலமுறை வலியுறுத்தியும் அலட்சியமாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், உரத்தூர் முதல் எஸ்.கொடிக்குளம் செல்லும் சாலை, அனுமனேரி முதல் கோரைக்குளம் செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். ஆகவே அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேஸ்வரி, காளிஸ்வரி ஆகியோர் கலந்து கொண்ட னர், மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

    ×