என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
குழந்தைகளுடன் பெண் மாயம்
- உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் அவர்கள் இல்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி(வயது32). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காமராஜிக்கும் அவரது மனைவி சிவரஞ்சனிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வழக்கம் போல் காமராஜ் வேலைக்கு சென்று விட்டார்.
மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய போது மனைவி மற்றும் குழந்தைகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார். உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் அவர்கள் இல்லை.
இதையடுத்து காமராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மாயமானது குறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






