என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
3 நம்பர் லாட்டரி விற்ற ஆட்டோ டிரைவர் கைது
- 3 ஆண்டுகளாக கோட்டக்குப்பம் பகுதியில் ஆட்டோ தொழில் செய்து வருகிறார்.
- மோட்டார் சைக்கிள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆன்லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் சதீஷ்குமார், ஜீவரத்தினம் ஆகியோர் அந்தப் பகுதிக்குச் சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்தனர். அவரது செல்போனை சோதனை செய்ததில் அதில் பல ஆண்டுகளாக 3 நம்பர் லாட்டரியை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்தது பதிவாகி இருந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கோட்டக்குப்பத்தை அடுத்த கோட்டைமேடு ரெயின்போ நகரைச் சேர்ந்த அபுல் ஹசன் (42), என்பதும் பல ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வந்த அபுல் ஹசன் கடந்த 3 ஆண்டுகளாக கோட்டக்குப்பம் பகுதியில் ஆட்டோ ெதாழில் செய்து வருகிறார்.
இந்த தொடர்பை வைத்துக்கொண்டு இவர் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்து வந்தது ெதரியவந்தது. இதையடுத்து அபுல்ஹசனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு அவர் பயன்படுத்திய செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






