என் மலர்
புதுச்சேரி

சாதனைகள் புரிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய காட்சி.
தேசிய அளவிளான தொழில்நுட்ப கருத்தரங்கம்
- ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் தேசிய அளவிளான கருத்தரங்கம் நடைபெற்றது.
- கணினி அறிவியல் துறையின் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
புதுச்சேரி:
புதுவை கிருமாம் பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் தேசிய அளவிளான கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கி இன்றைய கணினி அறிவியலின் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் அதிலுள்ள ஆராய்ச்சிகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்து ரைத்தார்.இதில் துணை முதல்வர் அய்யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாண வர்களை ஊக்குவித்தார். கணினி அறிவியல் துறையின் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
இவ்விழாவில் புதுவை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது அறிவுசார் திறன்களை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து தேசிய அளவி ளான பல்வேறு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும் இத்துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். விழாவிற்கான ஏற்பாடு களை கணினி அறிவியல் துறையின் மாணவர்களும், ஆசிரியர்களும் செய்திருந்தனர்.






