என் மலர்
புதுச்சேரி

வில்லியனூர் அரசு மருத்துவமனை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர், மங்கலம், ஊசுடு தொகுதிக்குட்பட்ட கிராம பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வில்லியனூர் மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் பெஞ்சமின் தலைமை தாங்கினார். தொகுதி துணை செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார்.
இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி, மாநில குழு உறுப்பினர் அந்துவான், தொகுதி பொருளாளர் கோவிந்தராஜ் ஏ.ஐ.எஸ்.எப். மாநில தலை வர் உதயராஜ் ஆகியோர் விளக்க உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொகுதி குழு உறுப்பினர்கள் கணேசன், நாசர், ராசலட்சுமி, பாத்திமா, அரியூர் கிளை செயலாளர் கண்ணன், நகர கிளை செயலாளர் பாலதண்டா யுதம், மணவெளி கிளை செயலாளர் சரவணன், கணுவாபேட்டை கிளை செயலாளர் சூசைராஜ் மற்றும் நிர்வாகிகள் செல்வம், சிவபெருமான், தில்லைநாயகம், சுரேஷ், பாலகிருஷ்ணன், ஸ்ரீதரன், ரியாஸ், அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






