என் மலர்
புதுச்சேரி

வலம்புரி சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி.
வலம்புரி சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- வலம்புரி சுந்தர விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
- விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் முதல் காலயாக பூஜை, 2-ம் காலம் மற்றும் 3-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டன.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை அலேன் வீதியில் உள்ள வலம்புரி சுந்தர விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி கடந்த 22-ந் தேதி கணபதி ஹோமம், லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடந்தது. விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் முதல் காலயாக பூஜை, 2-ம் காலம் மற்றும் 3-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டன.
தொடர்ந்து இன்று காலை 4-ம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ பங்கேற்றார். பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு வலம்புரி சுந்தர விநாயகருக்கு மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இதில் திராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வலம்புரி சுந்தர விநாயகர் ஆலய நிர்வாகி குழுவினர் மற்றும் ஊர் பெரியவர்கள் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற உறுப்பி னர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.






