என் மலர்
புதுச்சேரி

தேசிய அளவிலான கூடோ போட்டியில் வெற்றி பெற்ற புதுவை வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்த போது எடுத்த படம்.
புதுவை வீரர்கள் தங்கம்-வெண்கல பதக்கம் வென்று சாதனை
- தேசியப் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற வீரர்கள்-வீராங்கனைகளை சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
- கூடோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
அகில இந்திய கூடோ பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான கூடோ போட்டியை மகாராஷ்டிரா மாநிலத்தில் நடத்தியது.
இந்தப் போட்டியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த கூடோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
புதுவை மாநிலத்தைச் சேர்ந்த கூடோ வீரர்கள் 20 பேர் கொண்ட அணி புதுவை மாநில கூடோ சங்க செயலாளர் சந்தோஷ் குமார் தலைமையில் மற்றும் மூத்த நிர்வாகிகள் அகில இந்திய குடோ நடுவர்கள் பாலச்சந்தர், செந்தில்குமார் முன்னிலையில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் புதுவை அணியை சேர்ந்த பாலச்சந்தர், செந்தில்குமார், தமிழரசி, சுப்புராம், சுதர்சன் உள்ளிட்டவர்கள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வெண்றனர்.
இவர்களுக்கு பாராட்டு விழா புதுவையில் நடைபெற்றது. பாராட்டு விழாவிற்கு புதுவை மாநில கூடோ சங்க பொதுச் செயலாளர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலச்சந்தர், இணைச் செயலாளர் செந்தில்குமார், மாநில விளையாட்டு வீரர் நல சங்க இணை செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
புதுவை மாநில கூடோ சங்கத் தலைவர் வளவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியப் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற வீரர்கள்-வீராங்கனைகளை சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் சீனியர் பயிற்சியாளர் அசோக் வரவேற்றார். முடிவில் காலாப்பட்டு சீனியர் பயிற்சியாளர் செல்வம் நன்றி கூறினார்.






