என் மலர்
நீங்கள் தேடியது "Nigerian woman"
- இம்மாதிரியான திருமணங்கள் மக்களிடம் ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
- உலகப் பொதுசமய நிலையில் வள்ளலார் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சுற்றுலாயியல் அறிஞராகத் திகழும் திருவாளர் ச. கண்ணன் மற்றும் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் பேராசிரியரான திருவமை ஆ.நோயலின், இவர்களின் மகன் க. அபிலாசு நெத ர்லாந்து நாட்டில் பணியில் இருக்கிறார் இவர் நைசீரியன் நாட்டைச் சேர்ந்த பாத்திமா அப்பி என்ற பெண்ணை விரும்பி சமயம், சாதி, மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து அன்பினை மட்டுமே மையப்படுத்தி ஒரு பொதுமை உணர்வுடன் உலகப் பொதுசமய நிலையில் வள்ளலார் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.
அன்பின் வழியில் நின்று அறப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பெரியோர்கள் மற்றும் சன்மார்க்க சங்கத்தினர் முன்னிலையில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் உறுதிமொழி ஏற்று திருமணம் செய்து கொண்டனர்.
சாதி சமய சடங்குகளை தகர்த்தெறி ந்து அன்பின் வழி நின்று, எந்த உயிரையும் கொல்லாது, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, பசித்தவர்களுக்கு வேறுபாடு கருதாது உணவளித்தல் போன்ற வள்ளலாரின் கோட்பாடுகள் மக்களிடம் நற்புரிதலையும், புதுமையுணர்வையும் ஏற்படுத்திவருகின்றன.
இம்மாதிரியான திருமணங்கள் மக்களிடம் ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
இதனை பரவலாகக் கொண்டு செல்வதற்கு இத்திருமணம் நல்லதொரு தொடக்கமாக அமைந்திருக்கிறது என்று திருமண நிகழ்விற்கு வந்தவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
- போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
- வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
புதுடெல்லி:
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து டெல்லிக்கு வந்து விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நைஜீரிய பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அதிகாரிகள், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவரது வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை வெளியே எடுத்தனர்.
95 ஓவல் வடிவ காப்ஸ்யூல்கள் எடுக்கப்பட்டன. அவற்றுக்குள் போதை பொருள் இருப்பது தெரிந்தது. 511 கிராம் எடையுள்ள போதை பொருள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.
இதையடுத்து நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டார். அயன் பட பாணியில் போதை பொருளை மாத்திரைகளாக விழுங்கி அப்பெண் கடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






