search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர் சேர்க்கை ரத்தானதற்கு கவர்னர், முதல்-அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்
    X

    டாக்டர்.ஹர்ஷவர்தன்

    மாணவர் சேர்க்கை ரத்தானதற்கு கவர்னர், முதல்-அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்

    • மாணவர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை ஆளும் என்.ஆர்-பா.ஜனதா கூட்டணி அரசு உருவாக்கியுள்ளது.
    • மாணவர் காங்கிரஸ் தலைவர் டாக்டர்.ஹர்ஷவர்தன் குற்றச்சாட்டு

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டாக்டர். ஹர்ஷவர்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கி வரும் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் ஆண்டுதோறும் முதலாம் ஆண்டு 180 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

    ஆண்டுதோறும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் 131 பேருக்கு இடம் கிடைத்து மருத்துவம் படிக்கின்றனர். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்து இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

    மருத்துவக் கல்வி கனவோடு வாழும் புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக இது அமைந்துள்ளது. மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வை மோடி அரசு கொண்டு வந்ததால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு சிதைக்கப்பட்டது. பல நெருக்கடிகளையும் தாண்டி நீட் தேர்வுக்காக தயார் செய்து புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மாணவர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை ஆளும் என்.ஆர்-பாஜக கூட்டணி அரசு உருவாக்கியுள்ளது.

    இதற்கு கவர்னரும் , முதல்- அமைச்சரும் தான் பொறுப்பு. ஒரு அரசு மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு வசதியை கூட முறையாக செய்ய முடியாத கையாலாகாத அரசாக உள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை தடைக்கு கல்லூரி முதல்வர் காரணங்களை கூறியிருந்தாலும் இது மருத்துவ கனவில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் வகையில் உள்ளது.

    மாணவர்களின் எதிர்கால நலனை அக்கறை கொண்டு மாணவர் காங்கிரஸ் சார்பில் என்.ஆர்-பா.ஜனதா கூட்டணி அரசை கண்டித்து விரைவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், புதுச்சேரி மாநிலத்தின் தனித்துவமான தன்மானத்தை காக்க இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான அனுமதியை பெற எல்லா வகையிலும் முயற்சி வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×