search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 2 நாள் பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாம் தொடக்க விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்கள்.

    இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

    • மாநிலத் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் நடக்கிறது.
    • தேசிய ஒருங்கிணைப்பாளர் சைத்தன்யா ரெட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாட்கள் பயிற்சி முகாம் லே ராயல் பார்க் ஓட்டலில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் நடக்கிறது.

    பயிற்சி முகாமை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், புதுவை மாநில முன்னாள் முதல அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் எம்பி வைத்தியலிங்கம், எம்எல்ஏ வைத்தியநாதன், பிரதேச, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செயலாளர், புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோஸ்வா, இளைஞர் காங்கிரஸ் பயிற்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சைத்தன்யா ரெட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×