என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • போலீசார் பணியின் போது உயர் அதிகாரியிடம் விடுமுறை கோராமல் அருகே உள்ள கேரளா மாநில சுற்றுலா தலத்திற்கு சென்றனர்.
    • புதுவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாகே பகுதியில் உள்ள 2 போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் பணியின் போது உயர் அதிகாரியிடம் விடுமுறை கோராமல் அருகே உள்ள கேரளா மாநில சுற்றுலா தலத்திற்கு சென்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக கடலோர போலீஸ்நிலைய ஆய்வாளர் மனோஜ் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்ச்சையில் சிக்கியவர்களை தலைமையக எஸ்.பி சுபம்கோஷ் புதுவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    மாகி கடலோர பாதுகாப்பு பிரிவு பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரீனாமேரி டேவிட், மாகே சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர் சரோஷ், பள்ளூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சதீசன், போலீசார் வியகுமார், சுனில்பிரசாந்த், சாந்திஷினோஜ், நித்திஷ், விஜயகுமார் ஆகிய 8 பேர் புதுவை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் புதுவை கிழக்கு போக்குவரத்து போலீஸ் விமலரசன், தவளக்குப்பத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    • முகாம் புதுவை மேட்டுப்பாளையம் சரக்கு ஊர்தி முனையத்தில் நடக்கிறது.
    • அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆயிரம் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மோட்டார் வாகன சட்டம், ஐகோர்ட் நெறிமுறைகளை அமல்படுத்தும் நோக்கில் புதுவை பிராந்தியத்தில் உள்ள கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் 3, 4-ம் தேதிகளில் நடக்கிறது.இந்த முகாம் புதுவை மேட்டுப்பாளையம் சரக்கு ஊர்தி முனையத்தில் நடக்கிறது. இதில் அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆயிரம் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    போக்குவரத்து துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்கும் வாகனங்களுக்கு ஆய்வு செய்ததின் அடையாளமாக ஸ்டிக்கர் ஒட்டப்படும். காரைக்கால், மாகி, ,ஏனாமிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. கல்வி நிறுவனம், வாகன உரிமையாளர்கள் இந்தகாலக்கெடுவில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்கு கூடத்தில் ஒரு நாள் பிரம்மகுமாரிகள் ராஜயோக தினயான நிறுவனம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.
    • பேராசிரியர் ரங்கநாதன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்கு கூடத்தில் ஒரு நாள் பிரம்மகுமாரிகள் ராஜயோக தினயான நிறுவனம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது. பேராசிரியர் ரங்கநாதன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். தியான நிறுவனம் கவிதா பயிற்சி அளித்தார்.

    இதில் மனதை எப்படி, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது, ஆரோக்கியான வாழ்வுக்கான வழிகள், நேர்மறையான சிந்தனை, தனிமனிதமேம்பாடு, சமுதாயமேம்பாட, கோபத்தை கட்டுப்படுத்துதல், மனதின் ஆற்றலை பெருக்குதல் உட்பட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் நகை மதிப்பீட்டாளர்கள் 40 பேர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியை தியான நிறுவன வெங்கடேசன் ஒருங்கிணைத்தார். விழா ஏற்பாடுகளை ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • வரும் கல்வியாண்டிற்கான 2 ஆண்டு பட்ட படிப்புக்கு புதுவை மாநிலத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • பட்டியலினத்தவருக்கு 3 ஆண்டு சலுகை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வரும் கல்வியாண்டிற்கான 2 ஆண்டு பட்ட படிப்புக்கு புதுவை மாநிலத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் சேர பிளஸ்-2 அல்லது சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது 29-க்கு உட்பட்டிருக்க வேண்டும். பட்டியலினத்தவருக்கு 3 ஆண்டு சலுகை உள்ளது.

    வரும் 1-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை அனைத்து பணி நாட்களிலும் லாஸ்பேட்டை, தொல்காப்பியர் வீதி, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேவையான நகல், சான்றுகளோடு வரும் ஜூலை 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.
    • தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோயிலின் 186-வது குரு பூஜை விழா நடைபெற்றுது. கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழின் செங்கோலுக்கு இவ்வளவு மரியாதை, அங்கீகாரம் கொடுத்த போது தமிழகத்தில் இருந்து யாரும் புறக்கணித்திருக்க கூடாது. இதில் எதிர்கட்சியினர் சிலர் அரசியல் செய்கின்றனர் என்றார்.

    தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் என நினைத்த நேரத்தில் வாக்கிங் ஸ்டிக்காக முடக்கியதை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.

    ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.

    அவர்கள் இப்படி பேசுவது சரியானதல்ல எவ்வளவு மாற்றுக்கருத்து இருந்தாலும், தமிழர்களின் செங்கோலை அரசியலாக்கி இருக்க கூடாது. இப்படி ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் வருங்காலத்தில் செங்கோலின் அருமை பெருமை மறைந்து போயிருக்கும்.

    எந்த மாநிலத்துக்கும் மொழிக்கும் கிடைக்காத மரியாதை நமக்கு கிடைத்திருக்கிறதது. புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் காலையில் தமிழ் மட்டுமே ஒலித்தது. தமிழ் ஆதீனங்கள் மட்டும் தான் அங்கு இருந்தனர். இது தமிழுக்கு கிடைத்த மரியாதை.

    மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட தமிழ் மாநிலத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து மகிழ்கின்றனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.

    தமிழர்களின் அடையாளம் நிலை நாட்டும் போது கருப்புக்கொடி ஏற்றுகின்றனர். அப்படியானால் இவர்களின் அடையாளத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். திருவள்ளுவர் செங்கோல் என்பது மக்களாட்சியின் ஒரு அடையாளம் என்று சொல்லியிருக்கிறார்.

    ஆகவே செங்கோல் பற்றி தவறாக சொல்பவர்கள் எல்லோரும் அதன் உண்மை தன்மையை புரியாதவர்களாக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கவர்னர் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு நான் சிரிக்கத்தான் செய்வேன் என்று கவர்னர் தமிழிசை பதிலளித்தார்.

    • வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு கிராம வாய்க்கால்கள் ரூ.31 லட்சத்தில் தூர்வாரப்படுகிறது.
    • இதற்கான பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு கிராம வாய்க்கால்கள் ரூ.31 லட்சத்தில் தூர்வாரப்படுகிறது.

    அதுபோல் மணவௌி கிராமத்தில் தண்டுக்கரையிலிருந்து வேல்ராம்பட்டு ஏரிக்கரை வரையில் உள்ள ஆத்துவாய்க்கால் ரூ.18 லட்சம் செலவில் தூர்வாரப்படுகிறது. இந்த பணி வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் நடக்கிறது. இதற்கான பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    எதிர்க்கட்சி தலைவர் சிவா 100 நாள் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வைஷாக் பாகி, உதவிப் பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் ராமநாதன், பணி ஆய்வாளர் ரங்கராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    • உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறி யாளர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி, இந்திராநகர், கதிர்காமம் ஆகிய தொகுதிகளில் 12 ஆயிரத்து 265 மீட்டர் நீளமுள்ள சாலைகள், 6 ஆயிரத்து 700 மீட்டர் நீளமுள்ள வாய்க்கால்களை செப்பனிட ரூ.10 கோடியே 79 லட்சத்தில் மதிப்பீடு செய்யப்பட்டது.

    சிட்பி நிறுவன கடனுதவியுடன் இந்த பணிகளை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டது. இந்த பணிகளுக்கான பூமிபூஜை  நடந்தது.

     முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறி யாளர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • கள்ளச்சாராயத்தை தடுக்ககோரி நடந்தது.
    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

     தமிழகத்தில் 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சி இந்திய வரலாற்றில் இருண்ட ஆட்சி யாகும். கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் 23 பேர் மரண மடைந்து நூற்றுக்கணக்கா னோர் சிகிச்சை பெற்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 500 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதை திசை திருப்ப கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். தமிழக டாஸ்மாக்கில் போலி மதுபானம் விற்கப்படுகிறது. தமிழக அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை செய்ய வந்த அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.

    தாக்குதலுக்கு காரண மான அமைச்சர் உள்ளிட்ட வர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எனவே மத்திய அரசு தி.மு.க அரசை 6 மாதத்திற்கு முடக்கம் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் கள்ளச் சாராய சாவுக்கு புதுவை முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என நாராயண சாமி கூறுகிறார்.

    தமிழக முதல்- அமைச் சரை பதவி விலகும்படி சொல்ல நாராயணசாமிக்கு தைரியம் உள்ளதா? தமிழக ஆட்சியில் நடைபெறும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க ஆகிய கட்சிகள் வாய்மூடி மவுனமாக உள்ளன.

    தி.மு.க கூட்டணி கட்சிகள் தி.மு.க.வின் கிளை கட்சிகளாக மாறியுள்ளது. தமிழகம் மீண்டும் அமைதி பூங்காவாக திகழ, சிறந்த மாநிலமாக எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க அரசு அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில துணைத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ ராஜா ராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டு ரங்கன், புதுவை நகர செயலாளர் அன்பழக உடையார், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி, பி.எல். கணேசன், வி.கே.மூர்த்தி, காந்தி, நாகமணி, சேரன், மணவாளன், குமுதன், உழவர்கரை செயலாளர் சித்தானந்தம், மாநில

    எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில மன்ற செய லாளர் சிவாலயா இளங்கோ, மேற்கு மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன். மாநில

    எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மருத மலையப்பன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன். மீனவரணி செய லாளர் ஞானவேல் மற்றும் மாநில, மாவட்ட, தொகுதி வட்டார நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • 36-வது நாளான புதுவை சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் போராட்டம் நடத்தினர்.
    • பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    ஏ.ஐ.டி.யூ.சி பாசிக் ஊழியர்கள் 36 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     பாசிக் தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய 114 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு மாதம்தோறும் தொடர்ந்து சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 6-வது ஊழியக்குழு பரிந்துரைபடி அனைத்து ஊழியர்களுக்கும் விடுபட்ட சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    36-வது நாளான  புதுவை சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தில் பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, கோவிந்தாராசு, மாணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குணசீலன், ராஜா, கண்ணம்மா, பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது.
    • புதுவை தமிழ்ச்சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் 738 வாக்கு அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை வெங்கட்டாநகரில் புதுவை தமிழ்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தமிழ்சங்கத்து க்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி மன்ற குழு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    தற்போது முத்து தலைமையிலான நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் 2023-26-ம் ஆண்டுக்கான புதிய ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இத்தேர்தலில் முத்து தலைமையிலான செயற்பாட்டு அணி பெயரில் 11 பேரும், இந்த அணியை எதிர்த்து பாவேந்தர் பாரதிதாசன் பேரனும், புதுவை சிந்தனை யாளர் பேரவை தலைவருமான கோ.செல்வம் உள்பட 2 பேரும் போட்டி யிட்டனர்.

    தேர்தலில் புதுவை தமிழ்ச்சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் 738 வாக்கு அளித்தனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று அதிகாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 11 ஆட்சி குழு உறுப்பினர்களில் புதுவை தமிழ்ச்சங்க தலைவ ராக முத்து, துணை தலை வர்களாக ஆதிகேசவன், பாவலர் திருநாவுக்கரசு, செயலாளராக சீனு.மோகன்தாசு, பொருளா ளராக அருட்செல்வம், துணை செயலாளராக தினகரன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக தமிழ்மாமணி உசேன், கலை மாமணி ராசா, சுரேஷ்குமார், ஆசிவேந்திரன், கவிஞர் ஆனந்தராசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

    2023- 2026 புதுவை தமிழ்ச்சங்க தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி மன்ற குழுவினரை தேர்தல் ஆணையர் வக்கீல் பிரபாகரன் அறிவித்தார்.

    • அவரை கீழே தள்ளி அவரது தங்க கம்மலை பறித்து சென்றதாக தெரிகிறது.
    • வழக்கு பதிவு செய்த ரெட்டியார்பாளையம் போலீசார் அஸ்வினை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் ெஜ.ஜெ. நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 65). இவருக்கும் இவரது வீட்டின் எதிரில் வசிக்கும் பிரேம்தாஸ் என்பவர் வீட்டிற்கு வந்து செல்லும் வயல்வெளியை சேர்ந்த அஸ்வின் என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது.

    சம்பவத்தன்று தமிழ்செ ல்வியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அஸ்வின் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். மேலும் அவரை கீழே தள்ளி அவரது தங்க கம்மலை பறித்து சென்றதாக தெரிகிறது.

    இதுகுறித்து தமிழ்செல்வி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ரெட்டியா ர்பாளையம் போலீசார் அஸ்வினை தேடி வருகின்றனர்.

    • அமலோற்ப வம்பள்ளி மாணவர்கள் பரத்குமார், புவியரசு ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
    • தேசிய அளவிலான வினாடி- வினா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வுள்ளனர்.

    புதுச்சேரி:

    மத்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் பிட் இந்தியா வினாடி-வினா போட்டி பள்ளி மாணவர்களுக்கு உடல் திறன், விளையாட்டில் தேசிய அளவில் வளமான தளத்தை உருவாக்க நடத்தப்படுகிறது.

     இதையொட்டி, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர். 8, 9-ந் தேதிகளில் முதல்சுற்று வினாடி-வினா போட்டி நடந்தது. இதில், 16,702 பள்ளிகளில் இருந்து 61,981 மாணவர்கள் பங்கேற்றனர்.

    இப்போட்டியில் புதுவை அமலோற்பவம் மேல்நிலை பள்ளி சார்பில் பங்கேற்ற 9-ம் வகுப்பு மாணவர்கள் பரத்குமார், புவியரசு ஆகியோர் முதல் சுற்றில் வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    தொடர்ந்து, கடந்த 25-ந் தேதி மாநில அளவிலான போட்டி இணைய வழியில் நடந்தது. புதுவை மாநிலத்தில் பங்கேற்ற 4 பள்ளிகளில், அமலோற்ப வம்பள்ளி மாணவர்கள் பரத்குமார், புவியரசு ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    இவர்களுக்கு ரொக்க பரிசு ரூ. 25 ஆயிரம் மற் றும் பள்ளிக்கு பரிசாக ரூ.2½ லட்சம் வென்று தந்தனர். இவர்கள் தேசிய அளவிலான வினாடி- வினா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வுள்ளனர்.

    பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டி, தலா 4 கிராம் தங்க நாணயம் பரிசளித்து, வாழ்த்தினார்.

    ×