என் மலர்
நீங்கள் தேடியது "college vehicles"
- முகாம் புதுவை மேட்டுப்பாளையம் சரக்கு ஊர்தி முனையத்தில் நடக்கிறது.
- அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆயிரம் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மோட்டார் வாகன சட்டம், ஐகோர்ட் நெறிமுறைகளை அமல்படுத்தும் நோக்கில் புதுவை பிராந்தியத்தில் உள்ள கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் 3, 4-ம் தேதிகளில் நடக்கிறது.இந்த முகாம் புதுவை மேட்டுப்பாளையம் சரக்கு ஊர்தி முனையத்தில் நடக்கிறது. இதில் அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆயிரம் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.
போக்குவரத்து துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்கும் வாகனங்களுக்கு ஆய்வு செய்ததின் அடையாளமாக ஸ்டிக்கர் ஒட்டப்படும். காரைக்கால், மாகி, ,ஏனாமிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. கல்வி நிறுவனம், வாகன உரிமையாளர்கள் இந்தகாலக்கெடுவில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






