என் மலர்
புதுச்சேரி

சாலை-வாய்க்கால் சீரமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்த காட்சி.
ரூ.10 கோடியில் சாலை-வாய்க்கால் சீரமைப்பு
- முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
- உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறி யாளர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி, இந்திராநகர், கதிர்காமம் ஆகிய தொகுதிகளில் 12 ஆயிரத்து 265 மீட்டர் நீளமுள்ள சாலைகள், 6 ஆயிரத்து 700 மீட்டர் நீளமுள்ள வாய்க்கால்களை செப்பனிட ரூ.10 கோடியே 79 லட்சத்தில் மதிப்பீடு செய்யப்பட்டது.
சிட்பி நிறுவன கடனுதவியுடன் இந்த பணிகளை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டது. இந்த பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறி யாளர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story






